அறிஞர்

  • முனைவர் எ.மு.ராஜன்

    புதுச்சேரி, எல்லப்பிள்ளைச் சாவடி கிராமத்தில் முருகேசன் – பவுனாம்பாள் தம்பதியருக்கு 29.10.1951-இல் பிறந்தார். தந்தை ஓர் ஆலைத் தொழிலாளி. எல்லப்பிள்ளைச் சாவடி, ரெட்டிப்பாளையம், முத்த ரையர்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்த ராஜன், கடலூர் அரசு கலைக் கல்லூரியில் புகுமுகக் கல்வியை முடித்தார். புதுவை தாகூர் கலைக் கல்லுரியில் பொருளாதாரத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டமும், அதே கல்லூரியில் முதுகலை (எம்.ஏ.) பட்டமும் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் இள முனைவர் (எம்.ஃபில்.)…

  • பேராசிரியர் பா.உதயக்குமார்

    விழுப்புரம் திருவெண்ணைநல்லூரில் பாண்டுரங்கன் – சாவித்திரி தம்பதியருக்கு 16.01.1952-இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்றார். கந்தசாமி நாடார் ஆடவர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பட்டம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக திரைப்படம் பற்றி ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்: ஒரு திறனாய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் (இவ்வாய் வேடு 1978-இல் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளி யானது), பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன்…

  • பூவை சு.செயராமனார்

    மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையேயுள்ள பூவையில், கோ.சுப்பிரமணியம் – பத்மாவதி (பொண்ணுக் கண்ணு) இணையர்க்கு 06.03. 1952-இல் பூவை சு.ஜெயராமன் பிறந்தார். பூவை, நெல்லிக்குப்பம் கீழ்ப் பட்டாம்பாக்கம் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்து, தருமை ஆதினத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற் றார். 1976-இல் குமாரபாளையம் ஆசிரியப் பயிற்சி கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று மீண்டும் பூவையில் உழவரானார். 1979இல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சவகர் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு ஆசிரியரானார். மூன்று மாதங்களில் மூன்றாம் வகுப்புக்கு…

  • பேராசிரியர் க.இராமச்சந்திரன்

    மதுரை ஆவல் சூரன்பட்டியில் வெ.கந்தசாமி ரெட்டியார்- பாப்பம்மாள் தம்பதியருக்கு 15.06.1952 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கிய இவர், விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பையும், அதே கல்லூரியில் 1974-இல் தமிழில் இளங்கலைப் பட்டமும், மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப்பட்டமும், புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியில் 1981-இல் பி.எட். பட்டமும் பெற்றார். ‘மு.மேத்தா கதைகளில் சமூகப் பார்வை’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து இளமுனைவர் பட்டத்தையும், ‘இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைகளில் புராண மரபுக் கூறுகள்’…

  • பேராசிரியர் தி.பாலசுப்ரமணியன்

    கடலூர் சிதம்பரம் சிறுகாலூர் கிராமத்தில் தில்லைநாயகம்-சிவகாமி தம்பதியருக்கு 18.09. 1952 அன்று பிறந்தார். 1968- இல் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் பி.யூ.சி. எனும் புகுமுக வகுப்பை முடித்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை, முதுகலை, ஆசிரியப் பயிற்சி ஆகிய பட் டங்களைப் பெற்றார். குடந்தை ஆடவர் கலைக் கல்லூரியில் எம்.ஃபில் பட்டமும், பேரா. நடனம் அவர்களின் நெறியாள்கையில் முனைவர் பட்டமும் பெற்றார். 1980-இல் விளத்தூர் புனிதவதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர், எம்.எஸ்.சி., புள்ளியியல் பயின்றவர். பாரதிய…

  • முனைவர் கி.இராஜா

    மதுரையில் 30.11.1952 அன்று பிறந்தார். தந்தை கோ.கிருஷ்ண மூர்த்தி, தாயார் கி.இரத்தினம்மாள். தொடக்கக் கல்வியை செனாய் நகர் பள்ளியிலும் (ஆத்து ஸ்கூல்) மதுரை அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் 1961 – 1966இல் தொடர்ந்துள்ளார். 1965-இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்று மதுரை வடக்கு மாசி வீதியில் அரிவாள் வெட்டையும், கண்ணீர்ப் புகைக் குண்டையும் அனுபவித்துள்ளார். கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் (வேதியியல்) பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்…

  • வ.ஞானப்பிரகாசனார்

    கடலூர் கருங்குழி இ.வடிவேலர் – மயிலம்மை தம்பதியருக்கு 21.8.1951 அன்று பிறந்தார். புரூகீசுபேட்டையில் தொடக்க கல்வியையும், திருப்பாதிரிப்புலியூரில் உயர்நிலை கல்வியையும் பயின்றார். 1969-இல் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் புதுமுக வகுப்பினை முடித்து, 1973-இல் மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். 1975-இல் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். மாணவப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் கொண்டவராகவும் படைப்பாற்றல் கொண்டவராகவும் இருந்தார். இவர்தம் ஆசிரியப் பணியை தாம் படித்த பள்ளியிலேயே தொடங்கினார்….

  • பேராசிரியர் பீ.மு.அஜ்மல்கான்

    6.11.1950 அன்று தேனி கம்பம் நகரில் பிறந்தார். இவரது தாய் மைதீன் பாத்திமா. தந்தை முகம்மது இப்ராகிம். பள்ளிக் கல்வியை கம்பம், ஏல விவசாயச் சங்கப் பள்ளியிலும், மேல்நிலை மற்றும் இளநிலை பட்டப் (பியூசி மற்றும் பிஎஸ்ஸி) படிப்பை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழியல் துறையில் முதுகலைப் பட்டத் தையும் (1974) பெற்றார். பேராசிரியர் முத்துச்சண் முகனார் நெறியாள்கையில் ‘பிரமலைக் கள்ளர் பேச்சுத் தமிழ்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து…

  • பொ.வேல்சாமி

    விருதுநகர் பாலவ நத்தம் கிராமத்தில் பொம்மைய்யா நாயக்கர் – பாப்பம்மாள் தம்பதியருக்கு 1951-இல் பிறந்தார். அப்பா, தஞ்சாவூரில் ஒரு முட்டைக் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலை செய்து கொண்டிருந்ததால் 1958-இல் குடும்பத்தை தஞ்சாவூருக்கே அழைத்துக் கொண்டார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பொது நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர், அப்புத்தகங்களின் மூலமாக மன்னர்கள் முதல் சாமான்யர் வரையிலான வாழ்க்கைச் சூழலை அறிந்துகொண்டார். பூண்டி கல்லூரியில் பி.யூ.சி. புதுமுகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ‘குஜிலி மார்க்கெட்’டில்…

  • முனைவர் மு.தங்கராசு

    சேலம் சலகண்டபுரத்தில் தா.முத்து – பாப்பாயம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். பரமத்தி வேலூர், கந்தசாமி கவுண்டர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார். இவருக்கான கல்விக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் கல்லூரி முதல்வர் பொ.சண்முகசுந்தரம் செலுத்தி உதவினார். அது மட்டுமல்ல, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்) படிப்பதற்கும் உதவினார். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அன்புக்குரியவர் ஆனார். எம்.ஏ.வில் முதல் தர மாணவராகத் தேர்ச்சி அடைந்தார். அதே கல்லூரியில் பேராசிரியராக்கினார் (1971). 1979-இல் பேரா. அ.மு.ப.வின்…