பேராசிரியர் தி.பாலசுப்ரமணியன்

பேராசிரியர் தி.பாலசுப்ரமணியன்

Profession அறிஞர்

Biography

கடலூர் சிதம்பரம் சிறுகாலூர் கிராமத்தில் தில்லைநாயகம்-சிவகாமி தம்பதியருக்கு 18.09.
1952 அன்று பிறந்தார்.

1968- இல் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் பி.யூ.சி. எனும் புகுமுக வகுப்பை
முடித்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை, முதுகலை, ஆசிரியப் பயிற்சி
ஆகிய பட் டங்களைப் பெற்றார். குடந்தை ஆடவர் கலைக் கல்லூரியில் எம்.ஃபில் பட்டமும், பேரா.
நடனம் அவர்களின் நெறியாள்கையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1980-இல் விளத்தூர் புனிதவதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர், எம்.எஸ்.சி.,
புள்ளியியல் பயின்றவர். பாரதிய ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றுகிறார்.
இவர்களுக்கு ஐஸ்வர்யா, மீனசிவானி என இரு மகள்கள்.

1978-இல் முதுகலை ஆங்கில உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1994 வரை
திருக்கோவிலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் முதுகலை ஆங்கில ஆசிரியராகப்
பணியாற்றினார். 1994- 99 இல் அரும்பாவூர், மீன்சுருட்டி ஆகிய மேல்நிலைப் பள்ளிகளில்
தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மேலும் பதவி உயர்வு பெற்று 1999-2000இல்
கீழப்பழுவூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் பொறுப்பு முதல்வராகவும், 2000-2009இல்
முறையே வடலூர், நாகப்பட்டினம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதல்வராகவும், 2010-
11இல் திருச்சியில் உள்ள எஸ்.பி.ஜி. ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராகவும்
பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில்
சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இவர் எம்.எட்., எம்.ஃபில். உயர்கல்வி பயிலும் 29 மாணவர்களுக்கு நெறியாளராக
இருந்துள்ளார். அத்துடன் சூரியனார்கோயில் ஆதீனத்தின் வித்வானாகவும், சைவ சமயம் சார்ந்த
இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

1998-2000இல் திருவாவடுதுறை ஆதினத்தின் சைவ சிந்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின்
பேராசிரியராகவும், 2000- 2012இல் சூரியனார் கோவில் திருமுறை சித்தாந்த ஆய்வு மையப்
பேராசிரியர் மற்றும் ‘சிவ சிவ’ இதழின் பதிப்பாசிரியர், ‘ஓம் சிவசிவ’ சிற்றிதழின்
ஆசிரியர் என பன்முகப் பங்களிப்பைச் செய்கிறார்.

தி.பாலசுப்ரமணியன் இதுவரை 52 நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு பல்வேறு அமைப்புகள்
‘திருநெறி தமிழ்மணி’, ‘சமயபோதனா ரத்தினம்’, ‘சிவப்பணிச் செம்மல்’, ‘சிவநெறித் திருத்
தொண்டர்’, ‘சித்தாந்த ரத்தினம்’, ‘சித்தாந்தச் செம்மல்’, ‘சித்தாந்த கரபம்’, ‘அருள்நெறி
ஆசான்’, ‘அருள்நெறிக் காவலர்’, ‘திருக்குறள் புலமையர்’, போன்ற பல விருதுகளை வழங்கிச்
சிறப்பித்துள்ளன.