அறிஞர்

  • தமிழறிஞர் வ.தேனப்பன்

    புதுக்கோட்டை கீழச்சிவல்பட்டி பி.அழகாபுரியில் தே.வள்ளியப்பன் -சேதுக்கரசி தம்பதியருக்கு 28.10.1950 அன்று பிறந்தார். 8ஆம் வகுப்பு படிக்கும் போதே ‘என் கனவு’ எனும் முதல் சிறுகதையை எழுதினார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பட்டப் படிப்பைப் படித்தார். தொடர்ந்து பிஎச்.டி., பி.சி.டி.எச்.இ., சி.ஜெ., சி.ஐ.ஏ., டி.சி.டி. போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். ஒன்பது நகரக் கோயில்களை ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ‘நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை’ என்ற ஆய்வையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்…

  • தமிழறிஞர் ஜெ.சண்முகம்

    நாகை வேதாரண்யம் செட்டிப்புலம் கிராமம் ஜெகநாதன் -அஞ்சம்மாள் தம்பதியருக்கு 23.9.1948 அன்று பிறந்தார். 1973-இல் நாகப்பட்டினம் கனகசபை தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். 1974-இல் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சியை முடித்தார். பின்னர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., எம்.ஃபில் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். பட்டங்களையும் பெற்றார். மேலும் யோகா, சோதிடவியல் ஆகியவற்றில் பட்டயங்களும் பெற்றுள்ளார். 1981-இல் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப் பளளியில் தமிழாசிரியராகப் பணியைத்…

  • ம.சோ.விக்டர்

    அரியலூர் மாவட்டம், ஆண்டி மடம் வரதராசன் பேட்டையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். கடலூர் தூயவளனார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். தமிழ் ஆசிரியர் புலவர் நற்குணம் மூலமாக தம் மனதில் தமிழ் உணர்வு விதைக்கப் பெற்றார். அக்கால திராவிட இயக்க எழுச்சியும் அவரது கவனத்தை ஈர்த்தது. பத்தாம் வகுப்பு முடித்தவுடன், திருச்சியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இரண்டாண்டுகள் பயின்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பாவாணர் எழுதிய ‘தமிழ் வரலாறு’, ‘தமிழர் வரலாறு’…

  • பேராசிரியர் துரை.பட்டாபிராமன்

    தஞ்சை கும்பகோணம் திருப்பனந்தாள் எனும் ஊரில் ச.தெ.துரை சாமி – மங்களம்மாள் தம்பதியருக்கு 31.12.1948 அன்று பிறந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் 1965 முதல் 1969 வரை வித்துவானுக்குப் பயின்றார். இக்காலகட்டத்தில் திரு நெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் தேர்வில் இரு முறை முதனிலையில் தேர்ச்சி பெற்றார். புலவர் பயின்றவர்கள் முதுகலைத் தமிழில் சேருவதற்குப் பாலமாக அமைந்த பி.ஓ.எல்., பட்டப் படிப்பில் 1969-70இல் பயின்றார். 1970-72 காலகட்டத்தில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி ஓராண்டிற்கு மட்டும்…

  • பேராசிரியர் க.பஞ்சாங்கம்

    இராஜபாளையம் புத்தூர் கிராமத்தில் கனியப்பன்- முத்தம்மாள் தம்பதியருக்கு 11ஆவது மகனாக பஞ்சாங்கம் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த 11 குழந்தைகளையும் தாய் தான் காப்பாற்றினார். குடும்ப வறுமைகாரணமாக அண்ணன்கள் எல்லோரும் விவசாய வேலையில் ஈடு பட, இவர் மட்டும் படிக்கச் சென்றார். விருதுநகர், செந்திக் குமார நாடார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து முடித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் 1970-இல் இளங்கலை பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார். திருமணமான ஓராண்டில் மனைவி இறந்தார்….

  • பேராசிரியர் ந.நடராசனார்

    கன்னியாகுமரி கேசவன்புதூர் கிராமத்தில் நா.நல்லபெருமாள் பிள்ளை -கோமதி தம்பதியருக்கு 05.03. 1949-இல் பிறந்தார். நாகர்கோவில் தென் திருவிவாங்கூர் இந்துக் கல்லூரியில் பி.யூ.சி., வேதியியலில் பி.எஸ்சி பட்டம் பெற்றார். கல்லூரியில் ‘தேசிய மாணவர் படை’யில் இணைந்து, 1968-இல் குஜராத் மாநிலம், ஜாம் நகர் எனும் ஊரில் இராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் (1970-72) பெற்று, அதேநேரத்தில் மொழியியல் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது துணைவியார் ச.விமலா, மதுரை…

  • பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ்

    தஞ்சை ஒரத்த நாடு ஒக்கநாடு கீழையூர் சி.சண்முகம் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மெய்க்காப்பாளர்களுள் ஒருவராகப் பணியாற்றியவர்) – பாக்கியத் தம்மாள் தம்பதியருக்கு 13.03. 1949 அன்று பிறந்தார். அவர் பிறந்த அடுத்த ஆண்டே (1950 -1969) பொருளீட்ட தந்தை சிங்கப்பூர் சென்று இருபது ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட, தாயார் தன் மகனை தாயாய், தந்தையாய், ஆசானுமாய் வளர்த்தார். பூண்டி புட்பம் கல்லூரியில் புகுமுகக் கல்வியை முடித்து, பழநி பழனியாண்டவர் இந்தியப் பண்பாட்டுக் கல்லூரியில் இளங்கலை (தமிழ்), மதுரை…

  • பேராசிரியர் சா.வளவன்

    காஞ்சிபுரம் ஆற்பாக்கம் கிராமத்தில் தமிழாசிரியர் சாம்பசிவம் – ஜெயலட்சுமி தம்பதியருக்கு 15.09.1949 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியைத் திருமழிசையிலும், திருப்பெரும்பூதூரிலும் பயின்றார். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, மட்டைப்பந்து, ஏ.சி.சி., என்.சி.சி. போன்றவற்றில் பயிற்சிப் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளங்கலை, முதுகலைப் பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் (1974), மலையாளம் (1976) மற்றும் 1977-இல் உயர்கல்வி முதலானவற்றில் பட்டயங்கள் பெற்றார். 1979-இல் பச்சையப்பன் கல்லூரியில் ‘பிள்ளைத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் எம்.லிட்…

  • பேராசிரியர் அந்தோணி

    01.02.1950 அன்று பிறந்தார். புனைபெயர் இளையநந்தன். வட ஆற்காடு மாவட்டம், போளூர் இவரது சொந்த ஊர். தற்போது திருச்சி மாவட்டம், உரையூரில் வசிக்கிறார். காட்டுப்பாடி தூய தொன் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். சேலம் அரசு கல்லூரியில் தமிழில் இளங்கலையில் மீனாட்சி சுந்தரனாரிடம் பயின்றார். தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை பயின்றார். திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் பயிற்றுநர் பணியில் சேர்ந்தார். 1985-இல் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு நடத்திய தமிழ் ஆய்வியல்…

  • பேராசிரியர் கு.மோகனராசு

    சென்னை, ஆதம்பாக்கத்தில் மா.குப்புசாமி – தேசம்மாள் தம்பதியருக்கு 12.08.1947 அன்று பிறந்தார். பள்ளிப்பருவத்தில் வகுப்புத் தலைவராகவும், ஆசிரியர் இல்லாத போது பாடம் நடத்தும் மாணவ ஆசானாகவும் விளங்கினார். வீட்டுக்கு வந்த பிறகும் திண்ணையில் பாடம் நடத்தினார். இவரது ஆர்வத்தை அறிந்த காவல் துறை அதிகாரி காவல் நிலையத்தி லேயே மாணவர்களுக்கு பயிற்றுவிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். தண்டையார் பேட்டை கொ.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது (1965) இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள…