ம.சோ.விக்டர்

ம.சோ.விக்டர்

Profession அறிஞர்

Biography

அரியலூர் மாவட்டம், ஆண்டி மடம் வரதராசன் பேட்டையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார்.

கடலூர் தூயவளனார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். தமிழ் ஆசிரியர்
புலவர் நற்குணம் மூலமாக தம் மனதில் தமிழ் உணர்வு விதைக்கப் பெற்றார். அக்கால திராவிட
இயக்க எழுச்சியும் அவரது கவனத்தை ஈர்த்தது.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன், திருச்சியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து
இரண்டாண்டுகள் பயின்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

பாவாணர் எழுதிய ‘தமிழ் வரலாறு’, ‘தமிழர் வரலாறு’ ஆகிய இரு நூல்களும் இவரது
வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன எனலாம். இந்தப்புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் ஆய்வுகளை
மேற்கொண்டார். விளைவாக, தமிழ் மொழி, சொற்பிறப்பியல், மொழி ஒப்பியல், இனவரலாற்றியல்,
சமய மெய்ப்பொருளியல், தொல் மாந்த வியல், அகராதியியல், அறிவியல், வழக்காற்றியல் ஆகிய
துறைகளில் ஆய்வு நூல்களை எழுதினார்.

எழுத்து, வேர்ச்சொல், அடிச்சொல், தொடர், எச்சம், ஆகிய இயல்புகளை எல்லாம் தமிழ் மொழிக்குப்
பொருத்தி ஆராய்ந்தவர்களில் மாகறல் கார்த்திகேய முதலியார், பரிதிமாற் கலைஞர்,
கா.சுப்பிரமணியப் பிள்ளை, மறை மலையடிகள், தேவநேயப் பாவாணர் என வரிசைப்படுத்தினால்
அவ்வரிசையில் வரக் கூடியவர் ம.சோ.விக்டர்.

‘எபிரேயத்தின் தாய்மொழி தமிழே’, ‘தமிழ் நாட்டுக் கிறித்துவம்’, ‘பஃறுளி முதல்
யூப்ரடீசு வரை’, ‘உலக மொழிகளில் தமிழின் வேர்ச் சொற்கள்’, ‘குமரிக்கண்டம்’, ‘தமிழர்
சமயம்’, ‘இசுலாம் தமிழர் சமயம்’, ‘எபிறேய மொழியில் தமிழின் வேர்ச் சொற்கள்’,
‘தொல்காப்பியச் சிந்த னைகள்’, ‘வானியலும் தமிழரும்’, ‘சிந்துசமவெளி நாகரிகம்’,
‘உலகளாவிய தமிழ்’, ”தமிழரின் எண்ணியல்’, ‘கருமை’, ‘தமிழ் மூலத்தில் தமிழ் சமற்கிருத
அகராதி’, ‘தமிழும் ஆரியமும்’, ‘இந்தியக் கடவுளர்’, ‘குமரிக் கண்டமும் ஆப் பிரிக்கக்
கண்டமும்’, ‘நோவா வரலாற்று மாந் தனா?’, ‘தமிழ் இனமும் பாஸ்க இனமும்’, ‘சமற்
கிருதத்தின் தாய்மொழி தமிழே’, ‘தமிழும் மேற்கத் திய செமிட்டிக் மொழிகளும்’, ‘இந்திய
மொழி களின் தாய்மொழி தமிழே’, ‘சேயோன்’, ‘சேயன்’, ‘மேற்கிலும் தமிழ்’, ‘சொல் பகுதி’
(4 தொகுதிகள்), ‘வாழும் தமிழ்’, ‘தமிழ் மணம்’, ‘தொல் தமிழர் வரலாறு (6 தொகுதிகள்),
தொல் தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும்’ (8 தொகுதிகள்), ‘தமிழும் விவிலியமும்’,
‘தமிழ்ச்சோலை’, ‘வெள்ளைக்குயில்’ ஆகிய 41 நூல்களை எழுதி யுள்ளார்.

சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் அவர்கள் கூறுவதுபோல, ஆய்வு நூல்களை
பொதுமக்களும் படிக்கும் வகையில் இரசிக்கும்படியாக, நாவலைப் போல எழுதுவது இவரது தனிச்
சிறப்பு எனலாம்.