அறிஞர்

  • தமிழறிஞர் முனைவர் கடவூர் மணிமாறன்

    கரூர் அய்யம்பாளையத்தில் கு.பழனியப்பனார் -கன்னியம்மாள் தம்பதியருக்கு 21.01.1947 அன்று பிறந்தார். இயற்பெயர் முத்துச்சாமி. கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்ற போது ‘மணிமாறன்’ என மாற்றிக் கொண்டார். 1976-இல் திருமணம். துணைவியார்: நாகரத்தினம். இத் தம்பதியருக்கு கனிமொழி என்றொரு மகள், கலைச்செல்வன் என்றொரு மகன். திருச்சி இ.ரெ.மேனிலைப் பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றிய பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்., பி.எட்., எம்.எட்., பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைககழகத்தில் இதழியல் பட்ட மேற்படிப்புப் பட்டயச் சான்றி தழையும் பெற்றார். 1978-ல்…

  • முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ

    தேனி ஆனை மலையன்பட்டி சிற்றூரில் சுருளி – வீரம்மாள் இணையருக்கு 10.9.1944 அன்று பிறந்தார். இயற்பெயர் இராமர். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இவரது தமிழாசிரியர் ‘இளங்கோ’ எனப் பெயர் மாற்றம் செய்தார். பின்னர், இரண்டு பெயர் களையும் இணைத்து ‘இராமர் இளங்கோ’ என வைத்துக் கொண்டார். இவரது பெரும்பாலான நூல்களில் ச.சு. இளங்கோ என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவரது துணைவியார் பேராசிரியை இராசாமணி. இவர்களின் திருமணமானது சென்னை, எழும்பூரிலுள்ள வெள்ளை நினைவு மாளிகையில், அப்போதைய தமிழக…

  • தமிழறிஞர் நா.நளினிதேவி

    மதுரையில் ச.நாகரத்தினம் -சுப்புலட்சுமி இணையருக்கு 26.6.1945 அன்று பிறந்தார். தந்தை பணியாற்றிய நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் மதுரை பள்ளிகளில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை பயின்றார். மதுரைப் பல்கலைக்கழக முதல் முதுகலைப் பட்டதாரிகளுள் ஒருவர். 1969-இல் மதுரை அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் சேலம், திருப்பூர், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிகளில் பணியாற்றி 2004-இல் பணி…

  • முதுமுனைவர் வீ.உண்ணாமலை

    சேலம் செக்கடிப்பட்டி சிற்றூரில் வீ.உண்ணாமலை (என்கிற) மித்ரா 1945-இல் பிறந்தார். தமது பள்ளிக் கல்வியையும், இளங்கலைப் பட்டத்தையும் சேலத்தில்பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை பட்டமும், சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் ‘முடியரசனின் பூங்கொடி’ என்ற தலைப்பில் இளமுனைவர் பட்டமும், ‘புதுக் கவிதையில் சமுதாயம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டமும், ‘ஜப்பானிய – தமிழக ஹைக் கூக்கள் ஒப்பீடு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழகத்திலேயே முதுமுனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பைப்…

  • புதுவை சந்திரஹரி

    கும்பகோணத்தில் டி.கே.நடராஜ ராவ் – என். தனலட்சுமிபாய் தம்பதியருக்கு 22.09.1946 அன்று பிறந்தார். இயற்பெயர்: என்.ஹரிதாஸ். பள்ளிக் கல்வியை கும்பகோணத்திலும், புதுச்சேரியிலும் முடித்தார். பி.எஸ்ஸி. (தாவரவியல்) பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத் திலும், மைசூரிலுள்ள பி.எட். பட்டத்தையும், எம்.ஏ. தத்துவத்தை ஆந்திராவிலுள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திலும், எம்.எட்.பட்டத்தை ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1972-இல் இவருக்கும் வேலூர் சந்திரகாந்திக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஈஸ்வரதாஸ், ஆனந்தலட்சுமி, விஷ்ணுதாஸ் என மூன்று பிள்ளைகள். தற்போது புதுவையிலேயே வசித்து வருகின்றனர். மனைவியின் பெயரை…

  • த.அகரமுதல்வன்

    பூம்புகார் ஆலங்காடு கிராம கோவிந்தசாமி – வைரக்கண்ணம்மா தம்பதியருக்கு 15.01.1944 அன்று பிறந்தார். இவர் பிறந்த மறுநாளே தாயார் இறந்தார். அதனால், குழந்தைப்பேறு இல்லாத அவரது பெரியப்பா நடேசனும் அவரது துணைவி வைரத்தம்மாளும் இவரை திருவெண்காட்டிற்கு தூக்கி வந்து, தங்கள் குல தெய்வமான ‘அகோரமூர்த்தி’ எனும் பெயர் சூட்டி வளர்த்தனர். ஐந்து வயதில் உள்ளூர் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை பயின்று, 6 முதல் 11 வரை திருவெண்காடு பள்ளியில் கற்றார். மயிலாடுதுறை ஏ.வி.சி….

  • தாயம்மாள் அறவாணன்

    குமரி சேத்தன் புதூரில் 23.05.1944 அன்று பிறந்தார். தந்தை தமிழாசிரியர் பகவதிப் பெருமாள். தாயார் கோமதி. ஐந்தாம் வகுப்பு வரை மயிலாடி அரசு ஆரம்பப் பள்ளியிலும், பின் எட்டாம் வகுப்பு வரை ரிங்கல்டோபி பள்ளியிலும், எஸ்.எம்.எம்.பள்ளியில் மேல்நிலை பயின்றார். எம்.ஏ., பிஎச்.டி., பட்டங்களைப் பெற்றார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன் துணைவியார். 21.04.1969-இல் திருமணம். ‘அறிவாளன்’ என்றொரு மகன், ‘அருள்செங்கோர்’ என்றொரு மகள். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக…

  • துரை.சீனிச்சாமி

    நெல்லை சிந்தாமணி (எ) புளியங்குடியில் 15.06.1944-இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை தனது கிராமத்திலேயே முடித்து, சென் சேவியர் கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து, விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் தமிழில் இளங்கலை பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் இலக் கியத்தில் முதல் மாணவராக, முதல் வகுப்பில் 1967-இல் ஒரே மாணவராக தேர்வு பெற்ற பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1968-இல் ‘கம்பராமாயணத்தில் இயற்கை’ எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். 1967-68இல்…

  • முனைவர் க.நாகராஜன்

    விழுப்புரம் கல்பட்டு கிராமத்தில் விசுவநாத அய்யர் – வாலாம்பாள் தம்பதியருக்கு 25.02.1942 அன்று பிறந்தார். 1957-இல் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்ட வகுப்பில் சேர்ந்து, 1959-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான் புகுமுக வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்றார். 1961-இல் வித்துவான் நிறைநிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1960-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்திய சிவ ஞான சித்தியார் தேர்வில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் முதல் பரிசு…

  • விசித்திரன்

    புதுச்சேரியில் 1942-இல் பிறந்தார். பெற்றோர்: பொ.இரத்தினவேலு -ஜெயலட்சுமி. இர.இரவீந்திரநாத் இவரது இயற்பெயர். புதுச்சேரியிலுள்ள கலவைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்து, மின் துறை வரி வசூலாளர் பணியில் சேர்ந் தார். அக்கால கட்டத்திலேயே கலை, இலக்கியம், நாடகம், திரைப்படப் பணி ஆகிய வற்றில் ஈடுபட்டார். பின்னர் 1999-இல் அறுவை சிகிச்சை காரணமாக, விருப்ப ஓய்வு பெற்று, தன்னை முழுமையாக கலை, இலக்கியத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். இவரது துணைவியார் சந்திரா இரவீந்திரநாத். ஒரு மகன், இரு மகள்கள்….