| Profession | அறிஞர் |
|---|
நெல்லை சிந்தாமணி (எ) புளியங்குடியில் 15.06.1944-இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை
தனது கிராமத்திலேயே முடித்து, சென் சேவியர் கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து,
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் தமிழில் இளங்கலை பட்டம் பெற்றார்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் இலக் கியத்தில் முதல் மாணவராக, முதல்
வகுப்பில் 1967-இல் ஒரே மாணவராக தேர்வு பெற்ற பெருமைக்குரியவர். மதுரை காமராசர்
பல்கலைக் கழகத்தில் 1968-இல் ‘கம்பராமாயணத்தில் இயற்கை’ எனும் தலைப்பில் முனைவர் பட்டம்
பெற்றார்.
1967-68இல் சிவகாசி கல்லூரி யில் பணியாற்றினார். பின்னர் 1976-82 இல் மதுரை காமராசர்
பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை விரிவுரையாளராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
இலக்கியத் துறைத்தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில்
சிறப்பு ஆய்வுத் தகைஞர் நிலை ஆய்வு தகைஞராக இரண்டு ஆண்டுகள் தமிழ்த்துறையில்
பணியாற்றினார்.
‘இலக்கியத்தில் இயற்கை’ (1977), தமிழில் காப்பியக் கொள்கை: பகுதி 1 (1985), பகுதி 2
(1997), ‘இருபதின் கவிதைகளில் சமூகநீதிக் கோட் பாடுகள்’ (1994), ‘நாவல் நவீன
விமர்சனங்கள்’ (1997), கவிதைக் கொள்கை (2000), தமிழ் நாவல்களில் உளச் சித்தரிப்பு
(2005), ‘தமிழியல் கோட்பாடுகள்’ (2005), தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறும்’
(2005) ஆகிய நூல்களை எழுதியுள்ள இவர், ‘கல்கியின் கதை உலகம்’ (1999), ‘நவீன கவிதை’
(2006) ஆகிய இரு நூல் களை பதிப்பித்துள்ளார். மேலும், 2 ஆய்வுத் திட்ட நூல்கள், 2
கவிதை தொகுதிகள், 2 சிறிய ஆய்வு நூல்கள், ஆங்கிலத்தில் 8, தமிழில் 39 என மொத்தம் 45
கட்டுரைத் தொகுதிகள் ஆகிய வற்றை எழுதியுள்ளார். 15 சீனப் பாடல்களை ஆங்கிலத்திலும்,
தமிழிலும் மொழிபெயர்த் துள்ளார். 10 சீனப் பாடல்களையும் அதற்குரிய அகராதிச் சொற்களையும்
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆறு அறக்கட்டளை சொற்பொழிவுகள், பத்து சிறப்பு சொற்பொழிவுகள், இருபத்தேழு புத்தொளி
பயிற்சி சொற்பொழிவுகள் ஆகியவற் றுடன், நான்கு புத்தொளி பயிற்சி இயக்குநராக வும், ஆறு
கருத்தரங்கு அமைப்பாளராகவும் செயலாற்றியுள்ளார். இவரது நெறியாள்கையில் 19 ஆய்வாளர்கள்
இள முனைவர் / முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
25ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. மனைவி சரோஜினி. வே.வ.வன்னியப்பெருமாள்
கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி யாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர்களுக்கு இரு
மகள்கள், ஒரு மகன்.
தமது 70-ஆவது அகவையிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இலக்கியத் திட்ட
புறநிலை வல்லுநராகப் பணிபுரிகிறார். இலக்கிய ஆய்வுலகிற்கு இலக்கியப் பேரறிஞராக வும்,
நவீனத்துவத்தின் நற்சொல் வல்லுநராகவும், ஓயாது உழைத்து பெருமை சேர்த்த இவருடைய
வாழ்க்கையை இலக்கியத்தின் இனிமையான வாழ்க்கை எனலாம்.