அறிஞர்

  • தமிழறிஞர் நன்செய்ப்புகழூர் அழகரசன்

    குளித்தலையில் இராச கோபால் – சொர்ணம் ராசம்மாள் இணையருக்கு 01.01.1941 அன்று பிறந்தார். இயற்பெயர் சுந்தரராஜன். தந்தை மிதிவண்டிக் கடையாளர். தாயார் தொடக்கப்பள்ளி ஆசிரியர். 1947-இல் சுதந்திரத் தினத்தன்று தந்தை காலமானார். குளித்தலை, நாகையநல்லூர் பள்ளிகளில் பள்ளிப் படிப்பைப் படித்த இவர், 1960-இல் மாயனூர் அரசு ஆதாரப் பயிற்சிப் பள்ளியில் இளநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார். அங்கேகார்முகில், அரங்க ராசன், இளந்திரையன் ஆகியோருடன் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகங்கள் எழுதத் தொடங்கினார். 1961-இல் தாயார் பணிநிறைவு பெற்றதனால்1962-…

  • பேராசிரியர் தி.இராசகோபாலன்

    திருவாரூரில் 12.02.1941 – இல் பிறந்தார். புலவர், பி.ஓ.எல்., எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), பிஎச்.டி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவருடைய முனைவர் பட்டத்திற்கான தலைப்பு ‘வரலாற்று நாவல்கள் வரலாற்று செய்திகள்’ என்பதாகும். சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றிய பின், சென்னை தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். இவரது நெறியாள்கையில் 20 மாணவர்கள் எம்.ஃபில் பட்டமும், 8 மாணவர்கள் முனைவர் பட்டமும் பெற்றனர். இந்திய அளவில் புதுதில்லி, கல்கத்தா, மும்பை,…

  • பி.இரத்தினசபாபதி

    தென்காசி கணக்கப்பிள்ளை வலசை எனும் ஊரில் இல.பிச்சமுத்து – சுப்பம்மாள் மகனாகப் 08.03.1941 அன்று பிறந்தார். 1946-இல் பாலர் வகுப்பில் சேர்க்கப்பட்டார். தென்காசி இ.சி.ஈ. கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வியைப் படித்தார்.1958- இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (தமிழ்) பட்டம் பெற்றார். 1966-இல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றார். 1989- இல் முனைவர் பட்டம் பெற்றார். 1972- இல் தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பயிற்று நராகப் பணியேற்று, வேலூர் முத்துலிங்கம் கல்லூரி,…

  • பேரறிஞர் க.ப.அறவாணன்

    தஞ்சாவூர் கடலங்குடி க.பழனியப்பர்- தங்கப்பாப்பு தம்பதியருக்கு 09.08.1941 அன்று பிறந்தார். இயற்பெயர் அருணாச்சலம். 1963-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், 1965இல் பி.ஓ.எல். பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 1967-இல் கேரள பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக முதுகலை (எம்.ஏ.) -யில் தேர்ச்சி பெற்று, மதுரை கருமுத்து தியாகராசர் பரிசைப் பெற்றார். பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் 1967-இல் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். 1968-இல் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முதல்வரானார்….

  • தெ.ஞானசுந்தரம்

    நாகை குழையூர் தெண்டபாணி பிள்ளை – அ.தையல்நாயகி தம்பதி யருக்கு 20.09.1941 அன்று பிறந்தார். மனைவி: புலவர் தி.மணிமேகலை. 3 ஆண் குழந்தைகள். குடந்தை அரசினர் கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்), சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்) பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றார். ரா.சீனிவாசன் வழிகாட்டு தலில் ‘வைணவ உரைவளம்’ எனும் பொருளில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். 1963-இல்சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் வேலூர் கந்தசாமி கவுண்டர்…

  • முனைவர் பிரேமா நந்தகுமார்

    நெல்லை கோடகநல்லூரில், 23.02.1939 அன்று பிறந்தார். தந்தையார் ஸ்ரீநிவாச ஐயங்கார், தாயார் பத்மாசனி. 1957- இல், ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தையும், 1958-இல் முதுகலைப் பட்டத்தையும், 1961- இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். சிறப்புப் பேராசிரியராக கோட்டையம் மகாத்மா காந்திப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியுள்ளார். பிரேமா நந்தகுமார் சிறந்த வாசகர், இலக்கியப் படைப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல தளங்களில் சிறந்து விளங்குகிறார். இந்திய கதையாசிரியர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர், ‘மத்திய…

  • சரஸ்வதி இராமநாதன்

    சிவகங்கை தேவகோட்டையில் நாராயணன்-கோமதியம்மாளுக்கு 19.11.1939 அன்று பிறந்தார். தேனி பெண்கள் பள்ளியில் இந்தி ஆசிரியராகவும், பாட்டு ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார். அப்போது வயது 16. சம வயது பெண்கள் அவருக்கு மாணவியாக இருந்தனர். பின்னர், சென்னை பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார். அதற்காக சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. அப்போது நேரு இறந்தார். அவரது அஸ்தியைக் கொண்டுவந்தார்கள். அதில் சரஸ்வதி மனமுருகி இரங் கற்பா பாடினார். குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் விவேகானந்தர் சிலையைத்…

  • சீனு.இராமச்சந்திரன்

    புதுவை, லாசுப்பேட்டையில் சீனுவாசன் – எல்லம்மாள் தம்பதியருக்கு 08.04.1940 அன்று பிறந்தார். 1956- இல் மயிலம் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்து நான்காண்டுகள் படித்து, சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் வித்துவான் பட்டம் பெற்றார். இதே ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1964-இல் சென்னை சைதை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ‘தமிழாசிரியர் பயிற்சி’ பெற்று முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். 1992-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி வாயிலாக பி.லிட்., 1993-இல்…

  • பேராசிரியர் பா.வளன்

    பாளையங்கோட்டையில் பால் பூபாலராயர்- மாரியம்மாள் தம்பதியருக்கு 15.05.1940 அன்று பிறந்தார். தந்தை ஆசிரியராகவும், வணிகராகவும் இருந்தார். தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பாளையங்கோட்டைத் தூய சவேரியார் உயர் நிலைப் பள்ளியிலும் (1949-55), இளங்கலைக் கல்வியைப் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் (1957- 60), முதுகலைப் படிப் பைக் காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் (1961-63) கற்றுத் தேர்ந்தார். புலவர் தேர்வை மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், முதுநிலைக் கல்வியியலை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், ‘தேம்பாவணித் திறன்’ என்ற தலைப்பில் முனைவர்…

  • பேராசிரியர் பி.விருத்தாசலனார்

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், மேலத் திருப்பூந்துருத்தியில் பிச்சையா நாட்டார் – தென்காவேரி தம்பதியருக்கு 22.5.1940 அன்று பிறந்தார். 1962-இல் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். பின்னர் ‘இளங்கோவடிகளும் திணைக் கோட்பாடுகளும்’ எனும் தலைப் பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1962-இல் சென்னை தங்கச் சாலையிலுள்ள தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் நிலை தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1965-இல் பெரம்பூர் சமாலியா மேனிலைப் பள்ளியில் முதல் நிலைத் தமிழாசிரியர்…