சரஸ்வதி இராமநாதன்

சரஸ்வதி இராமநாதன்

Profession அறிஞர்

Biography

சிவகங்கை தேவகோட்டையில் நாராயணன்-கோமதியம்மாளுக்கு 19.11.1939 அன்று பிறந்தார்.

தேனி பெண்கள் பள்ளியில் இந்தி ஆசிரியராகவும், பாட்டு ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார்.
அப்போது வயது 16. சம வயது பெண்கள் அவருக்கு மாணவியாக இருந்தனர்.

பின்னர், சென்னை பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார். அதற்காக சென்னை லேடி
வெலிங்டன் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. அப்போது நேரு இறந்தார். அவரது அஸ்தியைக்
கொண்டுவந்தார்கள். அதில் சரஸ்வதி மனமுருகி இரங் கற்பா பாடினார். குடியரசுத் தலைவர்
ராதாகிருஷ்ணன் விவேகானந்தர் சிலையைத் திறப்பதற்காக கல்லூரிக்கு வந்த போது மாணவியர்
தலைவியான இவர் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளித்து, சந்தன மாலை அணிவிக்கும்
வாய்ப்பைப் பெற்றார்.

1960-இல், 21-ஆவது வயதில் இவருக்கும் தாய்மாமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இரு
மகன்கள். 1968-இல் எம்.ஏ. பட்டம் பெற்று, பாத்திமா கல்லூரியில் தன் ஆசிரியர் பணியைத்
தொடங்கினார். 1980-இல் முனைவர் பட்டம் பெற்றார். விழாவுக்கு வந்திருந்த எம்.ஜி.ராமச்
சந்திரன் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடந்த வந்தோம். இன்று
முனைவர் பட்டம் பெற்று மேடையை ஆளவந்தவர் நம் ‘சரஸ்வதி’ என வாழ்த்தினார்.

சரஸ்வதி இராமநாதன் பதினாறு நூல்களை எழுதியுள்ளார். வார, மாத இதழ்கள், விழா மலர்கள்
ஆகியவற்றில் பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

காஞ்சி மஹா பெரியவரால் ‘காவியக் கலைமாமணி’ (1972) எனும் முதல் பட்டத்தைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, 1973-இல் குன்றக்குடி அடிகளாரின் ‘செந்தமிழ்த் திலகம்’, அதே ஆண்டு
மூதறிஞர் பி.ஸ்ரீ.ஆச்சார்யா வழங்கிய ‘கம்ப ராமாயண நவரசத் திலகம்’, கவியரசு கண்ண
தாசனின் ‘செட்டிநாட்டு செண்பகப்பூ’ (1977) ஆகியவற்றுடன் ‘நற்றமிழ் சொல்லரசி’, ‘சொல்லின்
செல்வி’, ‘இலக்கியப் பேரொளி’, இலண்டன் சிவயோக அறக்கட்டளையின் ‘இயலிசைத் தமிழ்வாணி’
பட்டத்துடன் ‘ஏழிசை வல்லி’, ‘முத்தமிழ் வித்தகி’, ‘ஞானத்தமிழ் வாணி’ என 32 பட்டங்களைப்
பெற்றுள்ளார்.

இவர், பல அரங்குகளில் தலைமை வகித்தும் உரை நிகழ்த்தியுமுள்ளார். கழகங்கள், மன்றங்கள்,
கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பள்ளிகள் என தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேசி
யிருக்கிறார். மலேசியா, இலங்கை போன்ற நாடு களுக்குச் சென்று உரையாற்றியுள்ளார். எந்தத்
தலைப்பில் பேசினாலும், அந்த இடத்திற்கேற்ப அழகு தமிழில் பேசுவார்.

76-ஆம் அகவையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி மாணவிகளுக்கு பரதநாட்டியத்தில்
‘ஜதி’ குறித்து சிறந்த நெறியாளராக செயலாற்றுகிறார்.