முனைவர் இரா.பழனிசாமி
இராசிபுரம் தெப்பம்பட்டியில் இராமலிங்கையா- பெத்தக்காள் தம்பதியருக்கு 15.07.1935 அன்று பிறந்தார். இராசிபுரம் திருவேங்கடவிலாஸ் எலிமெண்டரி பாட சாலையில் பதினொரு வயது வரை பள்ளி சென்றதுடன் தமிழ் மொழியைத் தனியாகக் கற்றுத் தேர்ந்தார். இவரது உறவினரான எஸ்.எஸ். இராஜேந்திரன் வழிகாட்டுதலில் சேலத்தில் உள்ள நாடகக் குழுவினர் நடத்தும் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்தார். 14-ஆம் அகவையில் நாடகத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங் கினார். 1949-53 இல் ‘தேவி நாடகக் குழு’வில் இயங்கினார். 19-ஆவது வயதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகக்குழுவில்…
