அறிஞர்

  • முனைவர் கதிர் முருகு

    புதுக்கோட்டை பொன்னமராவதி வேகுப்பட்டியில் கதிரேசன் – மீனாள் தம்பதியருக்கு 01.10.1971அன்று பிறந்தார். இவரது மூன்றாம் வயதில் தந்தை மாரடைப்பால் காலமானார். தாயார் தோசை சுட்டு விற்று தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வளர்த்தார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேலைச் சிவபுரி -கணேசர் செந்தமிழ்க் கல்லூரி யில் பி.லிட். (இளங்கலை தமிழ் இலக்கியம்), எம்.ஏ., எம்.ஃபில், பட்டங்களைப் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடவியலில் பட்டயம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பி.எட். பட்டம் பெற்றார். 1999-இல் சென்னை அம்பத்தூர்…

  • கோபிநாத் ஊடகவியலாளர்

    புதுக்கோட்டை அறந்தாங்கியில் சந்திரன் -குமுதம் தம்பதியரின் மகனாக 04.07.1975 அன்று பிறந்தார். புதுக்கோட்டை, அறந்தாங்கியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், பின் சென்னையில் சில காலம் படித்திருக்கிறார். பட்டப்படிப்பை இளம் மேலாண்மையில் பொறிஞர் முடித்திருக்கிறார். துணைவியின் பெயர் துர்கா. ஒரே குழந்தை வெண்பா. கோபிநாத் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர் பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல முகங்களில் தமிழர் களையும் தாண்டி உலக மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் முற்போக்குச்…

  • எழுத்தாளர் ஸ்ரீபதி

    சிவகாசி ஆர். சிவனேசன் – எஸ்.புஷ்பம் தம்பதியர்ககு 15.03.1976 அன்று பிறந்தார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் (பி. எஸ்ஸி) பட்டமும், கணினிப் பொறியியலில் முதுநிலை (எம்.சி.ஏ.) பட்டமும் பெற்றார். துணைவியார்: பவானி. கோவேந்தன் என்றொரு மகன், சேகுவேரா பாரதி என்றொரு மகள். ஸ்ரீபதி பட்டம் பெற்றவுடன் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பகுதி நேர முகவராகப் பணி யாற்றினார். பின்னர், சொந்தமாக ‘அதிபதி’ எனும் கணினி மையத்தை 1988-இல் தொடங்கி 2009வரை நடத்தினார்….

  • முனைவர் கோ.விசயராகவன்

    தொண்டை மண்டலம், பழையனூர் கும்பம் கண்டிகையில் சொ.க.கோவிந்தசாமி – சின்னம்மாள் தம்பதியருக்கு 09.02.1965 அன்று பிறந்தார். குப்பம்கண்டிகை ஊராட்சி ஒன்றியபள்ளியிலும், சென்னை பாரிமுனை பச்சையப்பன் அறக் கட்டளை கோவிந்தப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், அரக்கோணம், தென்னிந்தியத் திருச்சபை நடுநிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியைக் கற்றார். மாநிலக் கல்லூரியில் வேதியியலில் இளநிலைப் பட்டமும், காஞ்சியில் அறிஞர் அண்ணா கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் ‘கூட்டுறவு மேலாண்மை’யில் பட்டயமும், புதுக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில்…

  • முனைவர் லோ. மணிவண்ணன்

    தேனி அம்பாசமுத்திரத்தில் தி.வெ.லோகரட்சகன்- அக்கம்மாள் தம்பதியருக்கு 22.4.1965 அன்று பிறந்தார். 1987-இல் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (வர லாறு), எம்ஃபில் (தமிழ்), பிஎச்.டி. (தமிழ்), பி.எட். (தமிழ்) ஆகிய பட்டங்களைப் பெற்றார். மேலும் காந்தியச் சிந்தனை பட்டயப் படிப்பும் படித்துள்ளார். ‘மக்கள் தகவல் தொடர்பியல் கலைச் சொற்களின் விளக்கமும் கலைச் சொல்லாக்கச் சிக்கல்களும்’ என்ற தலைப்பில் எம்ஃபில் பட்டத் தையும், ‘பாண்டிய நாட்டு…

  • பேராசிரியர் க. இளமதி சானகிராமன்

    அரியலூர் உடையார்பாளையத்தில் மு.கன்னையா- க.தனலெட்சுமி தம்பதியருக்கு 18.10.1965 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை உடை யார்பாளையம் அரசு பள்ளியிலும், குடந்தை மகளிர் கல்லூரியில் புகுமுக வகுப்பும், இளங்கலை பட்டப்படிப்பும் பயின்றார். அப்போது மாணவர் தலைவராகத் தோந்தெடுக்கப்பட்டு கவர்னர் பிரபுதாஸ் பட் வாரியின் கைகளால் தங்கப் பதக்கம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பொது நிர்வாகம், இளங்கல்வியியல் மொழியியல் சான்றிதழ், தெலுங்குச் சான்றிதழ், சைவ சித்தாந்தப் பட்டயம், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்…

  • பேராசிரியர் முரளிஅரூபன்

    28.05.1966 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தார். தந்தை அ.க.சுப்பிரமணியன், மத்திய அரசின் இறக்குமதி, ஏற்றுமதி இணைத் தலைமை நெறியாளராகப் பணியாற்றியவர். தாயார்: ந.சாந்தகுமாரி. சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த பாண்டிச்சேரி பள்ளி, கனகவல்லி தொடக்கப் பள்ளி, தேசிய ஆண்கள் உயர் நிலைப் பள்ளி, இந்து மேல் நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். பள்ளிப் பருவத்தில் பல்வேறு கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். குறிப்பாக, மாநகரப் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கவிதைப் போட் டியில், நோபல்…

  • பேராசிரியர் கே.பழனிவேலு

    புதுச்சேரி, அரியாங்குப்பம் டோல் கேட் கிராமத்தில் கே.கேசவன் – கே.ராஜேஸ்வரி தம்பதியருக்கு 25.6.1966 அன்று பிறந்தார். நடுத்தர வேளாண் குடும்பம். தாகூர் கலைக்கல்லுரியில் (1984 – 87) இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், புதுவை பல்கலைக்கழகத்தில் (1987-89) முதுகலைத் தமிழ் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங் கல்வியியல், முதுகலை மொழியியல் பட்டங்களும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் மானிடவியல் சான்றிதழ், மானிட வியல் மற்றும் நாட்டுப்புறவியல் பட்டயங்களையும் பெற்றுள்ளார். க.ப.அறவாணன் நெறியாள்கையில் ‘தமிழ் கல்வி வரலாறு’…

  • பேராசிரியர் அ.சிவபெருமாள்

    தஞ்சை கரந்தையில் அடிகளாசிரியர் -சம்பத்து அம்மாள் தம்பதியருக்கு 29.11.60 இல் பிறந்தார். ஆத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கல்வியையும், 1978-இல் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் முடித்தார். 1981-இல் வட சென்னிமலை அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.) வரலாறு, முதுகலைத் தமிழ் (எம்.ஏ.), 1988-இல் அண்ணாமலைப் பல்கலை அஞ்சல் வழியில் ஆசிரியப் பயிற்சி (பி.எட்.), சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் (எம்ஃபில்), 1993-இல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் முனைவர் (பிஎச்.டி)…

  • மு.முத்துவேலு

    மதுரை சிலைமலைப்பட்டி முனி யப்பன் – முத்தரசியம்மாள் தம்பதியருக்கு 10.03.1961 இல் மு.முத்துவேலு பிறந்தார். சென்னை இலயோலா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் முதல் மாணவர் தேர்ச்சிக்கான தங்கப் பதக்கமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் எம்.ஏ. பட்டமும், ‘சட்டத்தமிழ்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். பி.எல். எனும் சட்டவியல் பட்டமும் பெற்றார். மேலும் ‘இதழி யல்’,’ஆட்சித்தமிழ்’ ஆகியவற்றில் சான்றிதழ், பட்டயம் பெற்றார். பின்னர் வேலூர் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியிலும், சென்னை…