| Profession | அறிஞர் |
|---|
சிவகாசி ஆர். சிவனேசன் – எஸ்.புஷ்பம் தம்பதியர்ககு 15.03.1976 அன்று பிறந்தார்.
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் (பி. எஸ்ஸி)
பட்டமும், கணினிப் பொறியியலில் முதுநிலை (எம்.சி.ஏ.) பட்டமும் பெற்றார்.
துணைவியார்: பவானி. கோவேந்தன் என்றொரு மகன், சேகுவேரா பாரதி என்றொரு மகள்.
ஸ்ரீபதி பட்டம் பெற்றவுடன் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பகுதி நேர முகவராகப் பணி
யாற்றினார். பின்னர், சொந்தமாக ‘அதிபதி’ எனும் கணினி மையத்தை 1988-இல் தொடங்கி
2009வரை நடத்தினார். புஷ்பம் பிரிண்டர்ஸ்-ஐ 2009-இல் தொடங்கி மூன்று ஆண்டுகள் நடத்தினார்.
2002 தொடங்கி ‘கந்தகப் பதிப்பகம்’ தொடங்கி கவிஞர் பாண்டூ அவர்களுடன் இணைந்து நடத்திக்
கொண்டிருக்கிறார்.
இவரது முதல் கவிதை ‘நடமாடும் குடும்பம்’ தினமலர் – நகர் மலரில் 1993-இல் வெளிவந்தது.
2001-இல் நண்பர் யுவபாரதியுடன் இணைந்து ‘கந்தகப்பூக்கள்’ எனும் சிற்றிதழைத் தொடங் கினார்.
2005-இல் ‘புதுமைப்பித்தன் சிறப்பு மலர்’ ஒன்று வெளியிட்டார். அம்மலர் பல வண்ணங்களில், பல
பக்கங்களில் இலவசமாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கொடுக்கப் பட்டது. இதன்
மூலம் புதுமைப்பித்தன் என்னும் எழுத்தாளரைப் பற்றி அப்பகுதி மக்கள் அறிய வாய்ப்பு ஆனது.
‘கந்தகப் பூக்கள்’ எனும் இலக்கிய அமைப் பையும், அச்சகம், பதிப்பகம் ஆகியவற்றையும் நடத்தி
வருகிறார். பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று சிறப்பாகச் செயற் பட்டுக்
கொண்டிருக்கிறார்.
3 சிறுகதை நூல்கள், 3 கவிதை நூல்கள், 3 தொகுப்பு நூல்கள் ஆகியவற்றை வெளியிட் டுள்ளார்.
தனது படைப்புகளில் சிவகாசி மக்களின் வட்டார வழக்கையும், வாழ்க்கையை யும் எதார்த்தமாகப்
பதிவு செய்துள்ளார்.
இவரது ‘பறவையாடிப் பழகு’, ‘செல்லாக் காசு’ சிறுகதைகள் சிவகாசி அய்ய நாடார் ஜானகி
அம்மாள் கல்லூரியில் முதுகலைத் தமிழ் மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ‘படைப்பு அகமும்
புறமும்’ சிவகாசி தி ஸ்டாண் டர்டு ராஜரத்தினம் பெண்கள் கல்லூரியில் முதுகலைத் தமிழ்
(எம்.ஏ.) பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.
இவரது படைப்புகளுக்கு ‘கலை இலக்கியப் பெருமன்றம்’, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’,
‘தினமலர்’, ‘கல்கி’, இராஜபாளையம் ‘மணி மேகலை மன்றம்’, சேலம் ‘கே.ஆர்.ஜி. நாகப்பன்
ராஜம்மாள் அறக்கட்டளை’, கனடா ‘இலக்கியத் தோட்டம்’, ‘காலம்’ இதழ், ‘அழ.வள்ளியப்பா இலக்கிய
வட்டம்’, தமிழ் நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம்’, ‘மருத்துவ அறிவியல்
கழகம்’, ‘சிகரம்’ போன்ற அமைப்புகளும், இதழ் களும் பாராட்டி பரிசுகளும், விருதுகளும்
வழங்கிச் சிறப்பித்துள்ளன.