அறிஞர்

  • எழுத்தாளர் அனிதா

    திருப்பூர் இடுவம்பாளையம் குப்புசாமி முதலியார் – பழனியம்மாள் தம்பதியருக்கு 13.08.1956-இல் கு.கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஏறத்தாழ இருபது ஆண்டு காலம் திருப்பூர் நகரில் தயாராகும் ஆயத்த ஆடைகளை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தார். 1982-இல் இவரது முதல் கவிதைநூல் ‘சூரியமழை’ வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இளைஞர்களுக்குத் தன்னம் பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஐந்து தன்னம்பிக்கை…

  • பேராசிரியர் சு.இராஜேந்திரன்

    கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள சீந்தலூர் எஸ்டேட் (வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய பகுதி) மலைப் பகுதியில் வசித்த சுப்பையா-வள்ளியம்மை தம்பதியருக்கு 16.01.1957 அன்று பிறந்தார். ஸ்காட் கிறித்தவ கல்லூரியில் புகுமுக வகுப்பில் தமிழை விருப்பப் பாடமாகவும், பொருளாதாரத்தை சிறப்புப் பாட மாகவும் எடுத்துப் படித்து முதல் மாணவனாகத் தேறினார். அதே கல்லூரியில் இளங் கலை (பொருளாதாரம்) பட்டம் பெற்று, காரியவட்டம் பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்தார். அப்போது மார்க்சிய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மாணவர் சங்கத்தில் செயற்பட்டார். கேரள…

  • பேராசிரியர் தா.நீலகண்டபிள்ளை

    கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் பறக்கை க.தாணுமாலய பெருமாள் பிள்ளை -ப.சரஸ்வதி தம்பதியருக்கு 03.02.1957 இல் பிறந்தார். விவசாயக் குடும்பம். 8-ஆம்வகுப்புவரை பறக்கை நடுநிலைப்பள்ளியிலும், நாகர் கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும், 1975- 78 திருவிதாங்கூர் தன் இந்து கல்லூரியில் தமிழில் இளங்கலை பட்டமும் பெற்றார். அப்போது கல்லூரியின் தமிழ் மன்றச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘இலக்கியப் பூங்கா’ இதழை நடத்தினார். எல்லாவற்றிலும் முதல் இடத்தைப் பெற்றார். 1981-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தில் எம்.ஃபில், 1993-இல்…

  • பேராசிரியர் பி.கே.மனோகரன்

    வேலூர் வாணியம்பாடி பெத்தூர் கிருஷ்ணன் – சரோஜா தம்பதியருக்கு 15.4.1957-இல் பிறந்தார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பி.ஏ., சென்னை புதுக் கல்லூரியில் எம்.ஏ., காமராசர் பல்கலைக் கழக அஞ்சல் வழியில் பி.எட். ஆகிய பட்டங்களைப் பெற்றார். தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றறார். அடையாறு மயிலைக் கற்பகவல்லி பள்ளியில் ஆசிரியர் பணியேற்ற இவர், கோவை சி.பி.எம். கல்லூரியில் 1983-இல் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியர் ஆனார். நாட்டுநலப் பணித் திட்டத்தின் திட்ட அலுவலராகவும் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர்…

  • முனைவர் பா.மதிவாணன்

    தஞ்சாவூரில் ‘பாவலரேறு’ பாலசுந்தரம் – பா.பங்கயவல்லி தம்பதியருக்கு 25.7.1957 அன்று பிறந்தார். கரந்தையில் இராதாகிருட்டிண தொடக்கப்பள்ளி, உமா மகேசுவரர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பை முடித்தார். மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் இளங்கலை, முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். அக்கால கட்டத்தில் ஜெயகாந்தனும் செகாவும் இவரைக் கவர்ந்தனர். ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் சமுதாய உணர்வு’ எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞருக்கு ஆய்வு செய்தார். இக்காலகட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு…

  • முனைவர் தி.மகாலட்சுமி

    கோவை, மேட்டுப்பாளையத்தில் எஸ். திம்மே கௌடர் -டி.கௌரம்மாள் தம்பதியருக்கு 28.08.1954 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியை மேட்டுப்பாளையத்திலும், புகுமுக வகுப்பை கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியிலும் பயின்றார். ஊட்டி அரசினர் கலைக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் தமிழில் முதுகலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘சிலப்பதிகார ஆய்வு வரலாறு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டமும் பெற்றார். 1981-இல் சென்னையில் அரசுப் பணியிலிருந்த சந்திரசேகரனுடன் திருமணம் நடைபெற்றது. கணவரின்…

  • முனைவர் ஆ.தனஞ்செயன்

    காவிரிப்பூம்பட்டினம், கீழையூரில் சீ.வெ.ஆறுமுகம் -அரும்பு தம்பதியருக்கு 15.11.1954 அன்று பிறந்தார். தனது ஊரிலுள்ள மீனவர் பாடசாலை, ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி, மேலையூர் சீனிவாசா உயர்நிலைப் பள்ளி ஆகியனவற்றில் தொடக்கக் கல்வியைப் பயின்றவர், பூம்புகார் கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து, குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழில் இளங்கலை பட்டமும் (1974-77), திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழில் முது கலைப் (1978-80) பட்டமும் பெற்றார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் அ.நா.பெருமாள் மேற்பார்வையில் ‘தஞ்சாவூர் மாவட்ட…

  • தமிழறிஞர் ஆ.திருநாகலிங்கம்

    இராமநாதபுரம் பரமக்குடி புலிக்குளம் குக்கிராமத்தில் க.ஆறுமுகம்- வள்ளியமாள் தம்பதியருக்கு 13.02. 1955-இல் பிறந்தார். பள்ளிக் கல்வியைப் புதுப்படி, பரமக்குடி ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்து முடித்தபின், மதுரை தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து, அக்கல்லூரியிலேயே இளங்கலை (தமிழ் இலக்கியம்) பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியற்புலத்தில் முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் வி.சிதம் பரநாதப்பிள்ளை மேற்பார்வையில் இளம் முனைவர் பட்டம் பெற்றார். தஞ்சை மாவட்டம்,…

  • சிலம்பு நா.செல்வராசு

    தஞ்சை இடமணல் கிராமத்தில் அ.வீ.அ. நாராயணசாமி – காசியம்மாள் தம்பதியருக்கு 1.3.1955 அன்று பிறந்தார். 1977-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம், 1978-இல் ஆசிரியர் பட்டயம், 1981-இல் குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பட்டம், 1983-இல் பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளமுனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். 1984-இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக மொழியியல் துறையில் ஆராய்ச்சி உதவியாளராகவும், 1984 முதல் 1987 வரை அதே பல்கலைக்கழக இலக்கியத் துறையில் சிறப்பு நிலை உதவியாளராகவும் பணியாற்றினார்….

  • பேராசிரியர் சு.அழகேசன்

    திருநெல்வேலி நாங்குநேரி பழுவூரில் அ.சுப்பையா பிள்ளை – காந்திமதி தம்பதியருக்கு 20.03.1955 அன்று பிறந்தார். தந்தையார் அரசு கருவூலக் கணக்கர். பள்ளிக் கல்வியை பழுவூர், வடக்கன்குளம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் கற்று, பி.யூ.சி.யை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து கணிதத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றார். திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக் கழகத்தில் பேரா. இளையபெருமாள் மேற்பார்வையில் ‘குறிப்புவினைகள் அமைப்பும் வருகைமுறையும்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து…