| Profession | அறிஞர் |
|---|
கோவை, மேட்டுப்பாளையத்தில் எஸ். திம்மே கௌடர் -டி.கௌரம்மாள் தம்பதியருக்கு 28.08.1954
அன்று பிறந்தார்.
தொடக்கக் கல்வியை மேட்டுப்பாளையத்திலும், புகுமுக வகுப்பை கோவை அவினாசிலிங்கம்
மனையியல் கல்லூரியிலும் பயின்றார். ஊட்டி அரசினர் கலைக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை
பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் தமிழில் முதுகலைப் பட்டமும்,
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘சிலப்பதிகார ஆய்வு வரலாறு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து
எம்.ஃபில் பட்டமும் பெற்றார்.
1981-இல் சென்னையில் அரசுப் பணியிலிருந்த சந்திரசேகரனுடன் திருமணம் நடைபெற்றது.
கணவரின் ஊக்கத்தினால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 1988-இல் முனைவர் பட்டம்
பெற்றார். ‘மொழி பெயர்ப்பு’, ‘சுவடியியல்’ பட்டயங்களையும் பெற்றுள்ளார்.
1989-இல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஆராய்ச்சி உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
1995-இல் பணி நிரந்தரம் பெற்றார். 2008-இல் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணி உயர்வு
பெற்றார். 2010-12இல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். தற்போது ஆய்வு அலுவலராகப்
பணியாற்றுகிறார்.
ஐம்பத்து எட்டு நூல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் பல நூல்கள் ஆசிரியராக இருந்து
உருவாக்கியவை. பல நூல்களைப் பதிப்பாசிரியராகவும், சில நூல்களைத் துணைமைப் பொதுப்
பதிப்பாசிரியராக இருந்தும் உருவாக்கியுள்ளார். இவரது நெறியாளுகையின் கீழ் 26 ஆய்வு
மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
இவருடைய பல்துறை பங்களிப்பைக் கருத்திற் கொண்டு பல்வேறு அமைப்புகள் ‘பைந்தமிழ்ப்
பேரொளி’, ‘அன்னைத் தெரசா’, ‘அவ்வை’, ‘செந் தமிழ்த் திலகம்’, ‘சுவடிச்சுடர்’, ‘சோதிட
ஆய்வறி ஞர்’, ‘திருமந்திர மாமணி’ பல விருதுகளை வழங்கியுள்ளன.
சமச்சீர் கல்விக்காகத் தமிழ்ப் பாட நூல்கள் எழுத, பத்தாம் வகுப்பிற்கு மேலாய்வாளராக
அமைந்தார். கற்பகம் பல்கலைக் கழகம், மீனாட்சி மகளிர் கல்லூரி, சாஸ்திரா பல்கலைக் கழகம்,
தமிழ்ப் பல்கலைக் கழகம், புதுவைப் பல் கலைக் கழகம் போன்றவற்றில் பாடத் திட்டக் குழு
உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தற் போது வல்லுநர் குழு, தேர்வுக் குழு உறுப்பின
ராகக் கற்பகம் பல்கலைக் கழகத்திலும், புதுவைப் பல்கலைக் கழகத்திலும், அண்ணா சித்த மருத்
துவக் கல்லூரியிலும் பங்கேற்று வருகின்றார். தஞ்சை தமிழியில் ஆய்வுகள் பதிவு மையத்தில்
திட்டக்குழு உறுப்பினராகவும், பதிப்புக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
தொலைக்காட்சி, ஊடகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சோதிடம், கோள்கள்
குறித்து தமது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.