| Profession | அறிஞர் |
|---|
இராமநாதபுரம் பரமக்குடி புலிக்குளம் குக்கிராமத்தில் க.ஆறுமுகம்- வள்ளியமாள்
தம்பதியருக்கு 13.02. 1955-இல் பிறந்தார்.
பள்ளிக் கல்வியைப் புதுப்படி, பரமக்குடி ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்து
முடித்தபின், மதுரை தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து,
அக்கல்லூரியிலேயே இளங்கலை (தமிழ் இலக்கியம்) பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்
கழகத் தமிழியற்புலத்தில் முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். நாகர்கோவில் தென்
திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் வி.சிதம் பரநாதப்பிள்ளை மேற்பார்வையில் இளம் முனைவர்
பட்டம் பெற்றார்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராக 1985-இல்
பணியில் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் கடுகூர் கலைச்செல்வியை சுயமரியாதைத் திருமணம்
செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு டானியா, தெரேசா என இரு மகள்கள.
திருநாகலிங்கம், 1988-இல் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் புதிதாகத் தொடங்கப்
பெற்ற சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மற்றும் இலக்கியப்புலத்தில் விரிவுரையாளரானார். இக்
காலகட்டத்தில் ‘புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள் காட்டும் சமுதாயம்’ எனும் தலைப்பில் ஆய்வு
செய்து முனைவர் பட்டம் பெற்றார். இருபத் தேழு ஆண்டுகளாக புதுவைப் பல்கலைக்கழகத்தில்
பணியிலிருக்கும் பேராசிரியர் ஆ. திரு நாகலிங்கம் விரிவுரையாளராக பத்து வருடங்
களும், இணைப் பேராசிரியராக எட்டு வருடங்களும், கடந்த ஒன்பது வருடங்களாக
பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.
‘நாட்டார் வழக்காற்றியல்’ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர், தற்போது ‘காவ்யா’
இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வருகிறார். மேலும், தென்னிந்திய நாட்டுப்புறவியல்
கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுவைப் பகுதியின் செயலாளராகவும் பணியாற்றிக்
கொண்டிருக்கிறார்.
பேராசிரியர் ஆ.திருநாகலிங்கம், புதுவைப் பல்கலைக் கழகத்தில் 1988-1989ஆம் ஆண்டிற்கான
நல்லாசிரியர் விருது, 2010- 2011ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது என இரண்டு முறை
நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ளார். இளமுனைவர் பட்ட ஆய்வில் 58 மாணவர்களுக்கு ஆய்வு
மேற்பார்வை செய்துள்ளார். இவற்றில் நாட்டுப்புறவியல் சார்ந்த தலைப்புகளே பெருமளவில்
இடம்பெற்றுள்ளன. இதுவரை முடிக்கப் பெற்ற முனைவர் பட்ட 13 ஆய்வுகளில் 12 ஆய்வுகள்
நாட்டுப்புறவியல் சார்ந்தவை யாகும்.
புதுவைப் பல்கலைக் கழகத்தில் 27 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், நாட்டுப்புறவியல்
சார்ந்த பத்து நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார்.