| Profession | அறிஞர் |
|---|
கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் பறக்கை க.தாணுமாலய பெருமாள் பிள்ளை -ப.சரஸ்வதி
தம்பதியருக்கு 03.02.1957 இல் பிறந்தார். விவசாயக் குடும்பம்.
8-ஆம்வகுப்புவரை பறக்கை நடுநிலைப்பள்ளியிலும், நாகர் கோவில் ஸ்காட் கிறித்தவக்
கல்லூரியில் புகுமுக வகுப்பையும், 1975- 78 திருவிதாங்கூர் தன் இந்து கல்லூரியில்
தமிழில் இளங்கலை பட்டமும் பெற்றார். அப்போது கல்லூரியின் தமிழ் மன்றச் செயலாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘இலக்கியப் பூங்கா’ இதழை நடத்தினார். எல்லாவற்றிலும் முதல் இடத்தைப்
பெற்றார்.
1981-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தில் எம்.ஃபில், 1993-இல் எம்.ஏ. இதழியல்,
1996-இல் எம்.ஏ., சுற்றுலாவியல், 2000-இல் எம்.ஏ. விளம்பரவியல், 1989-இல் சென்னைப்
பல்கலைக் கழகத்தில் முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1979-இல் காந்தியச் சிந்தனையில்
பட்டயம் பெற்றார்.
1988-இல் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகவும்,
1988-89-இல் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உதவிப்பேராசிரியராவும், 1990 முதல்
நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும்,தமிழ்த்துறைத்
தலைவராகவும் பணியாற்றினார்.
1989-இல் தே.நா. கோலம்மாள் வாழ்க்கைத் துணை ஆனார். இவர்களுக்கு பாரதி, நாகலட்சுமி என
இரு மகள்கள்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கல்விச் சுற்றுப்பயணம் சென்று கருத்தரங்குகளில்
உரையாற்றியுள்ளார்.
‘கோட்டாறு செட்டியார் வரலாறும் வாழ் வியலும்’ (1989), ‘சங்கத்தமிழர் வாழ்வியல்’
(2012), ‘கலைவாணர் ஒரு சகாப்தம்’ (2012), ‘செவ் விலக்கிய மணிகள்’ (2012), அன்பே
யோகம் (2013), ‘ஊடகங்களின் எதிர்காலம்’ (2013) ஆகிய 6 நூல்களை எழுதியுள்ளார். 1997-
2014 வரை உலகளவில் 79 கட்டுரைகளையும், தேசிய அளவில் 70 கட்டுரைகளையும்
வழங்கியுள்ளார். சிறந்த அறிவியல் கட்டுரைக்காக 1997இல் ‘இந்தியப் பல்கலைக்கழகத்
தமிழாசிரியர் மன்றம்’ பரிசு வழங்கியுள்ளது.
இவரது மேற்பார்வையில் 112 பேர் இளம் முனைவர் பட்டத்தையும், 41 பேர் முனைவர் பட்டத்தையும்
பெற்றுள்ளனர்.
கவிதை உறவின் ‘அருந்தமிழ் தொண்டன்’, அகில உலக அரிமா சங்கத்தின் ‘சிறந்த தமிழ்
ஆய்வாளர்’, அரிமா சங்கத்தின் ‘சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்’, மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ‘சிறந்த என்.எஸ். எஸ். திட்ட அலுவலர்’, பன்னிரு திருமுறை
பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் ‘சைவச் செம்மல்’, சுழற் சங்கத்தின் ‘சமூகச் சேவகர்’, கம்பன்
கழகத் தின் ‘கம்பன்’, தமிழ் ஐயா கல்விக் கழகத்தின் ‘தமிழ்மாமணி’ ஆகிய விருதுகளைப்
பெற்றுள் ளார். பல்வேறு சமூக, இலக்கிய அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளையும்
வகிக்கிறார்.