எழுத்தாளர் அனிதா

எழுத்தாளர் அனிதா

Profession அறிஞர்

Biography

திருப்பூர் இடுவம்பாளையம் குப்புசாமி முதலியார் – பழனியம்மாள் தம்பதியருக்கு
13.08.1956-இல் கு.கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.

காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற
இவர், ஏறத்தாழ இருபது ஆண்டு காலம் திருப்பூர் நகரில் தயாராகும் ஆயத்த ஆடைகளை தமிழகம்
முழுவதும் விற்பனை செய்து வந்தார்.

1982-இல் இவரது முதல் கவிதைநூல் ‘சூரியமழை’ வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரை
40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இளைஞர்களுக்குத் தன்னம் பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஐந்து தன்னம்பிக்கை நூல்களை யும்,நான்கு
கட்டுரைத் தொகுதிகளையும், எட்டு கவிதை நூல்களையும் எழுதி யுள்ளார்.

‘தமிழர் தந்தை வ.உ. சிதம்பரனார்’, ‘கல்வித் தந்தை காமராசர்’, ‘தேசியக் கொடியின் தந்தை
திருப்பூர் கிருஷ்ணன்’, ‘காமத்தில் இருந்து காந்திக்கு’,’தமிழர்களும் விவேகானந்தரும்’,
‘காந்தி கணக்கு’, ‘வ.உ.சி. அரசியல் சிந்தனைகள்’, ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’,
‘அறிவுலக மேதை அண்ணா’, ‘வ.உ.சி – காந்தி யார் நமது தந்தை?’, ‘வள்ளலார் நமக்கு
வழிகாட்டி’, ‘வாழ்க் கைக்கு வழிகாட்டுகிறார் வ.உ.சி.’ முதலான நூல்கள் வாயிலாக
வாழ்வாங்கு வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் குறித்துப் பல புதிய செய்திகளைத் தமிழ்கூறும்
நல்லுலகிற்கு தந்திருக்கிறார்.

மேலும், வ.உ.சிதம்பரனார், காமராசர், அறிஞர் அண்ணா, செண்பகராமன் பிள்ளை,
ஜி.டி.நாயுடு, ஆர்.கே.சண்முகம் செட்டியார், தில்லையாடி வள்ளியம்மை, மா.சிங்காரவேலர்,
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தீரன் சின்னமலை ஆகியோர் குறித்து ஒலி ஒளிப் பேழை களை
வெளியிட்டுள்ளார். இவை தமிழகம் தந்த மாபெரும் தலைவர்களின் அரிய பல செய்திகளைக்
கூறுவனவாக அமைந்துள்ளன.

மும்பைத் தமிழர்களின வரலாறு (இரண்டு தொகுதிகள்), வரலாற்றில் பிள்ளைமார்கள், வரலாற்றில்
முதலியார்கள் ஆகிய மானுடவியல் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் ‘சிறந்த எழுத்தாளர்’ விருது, ‘திருப்பூர் முத்தமிழ் மன்றம்’ விருது,
‘தமிழ் மாமணி’ விருது, கர்நாடக மாநிலத் தமிழ்ப் பேரவையின் ‘ஒற்றுமை மாமணி’ விருது,
வ.உ.சி. யின் மகன் வ.உ.சி.வாலேஸ்வரன் வழங்கிய ‘வ.உ.சி. இலக்கியச் செல்வர்’ விருது,
கோவை குஜராத் சமாஜில் வைத்து நீதியரசர் ராமசுப்பிர மணியம் வழங்கிய ‘நூறில் ஒருவர்
விருது’ போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அனிதா பதிப்பகம், சூரியன் பதிப்பகம் என இரண்டு பதிப்பகங்களை ஆரம்பித்து இதுவரை
40-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட் டுள்ளார்.

சொற்பொழிவாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என தனது பணியைத் தொடர்ந்து செவ்வனே செய்து
கொண்டிருக்கிறார்.