| Profession | அறிஞர் |
|---|
புதுக்கோட்டை அறந்தாங்கியில் சந்திரன் -குமுதம் தம்பதியரின் மகனாக 04.07.1975 அன்று
பிறந்தார்.
புதுக்கோட்டை, அறந்தாங்கியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், பின்
சென்னையில் சில காலம் படித்திருக்கிறார். பட்டப்படிப்பை இளம் மேலாண்மையில் பொறிஞர்
முடித்திருக்கிறார். துணைவியின் பெயர் துர்கா. ஒரே குழந்தை வெண்பா.
கோபிநாத் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர்
பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல முகங்களில் தமிழர் களையும் தாண்டி உலக மக்களின்
மனதில் நிலைத்து நிற்கும் முற்போக்குச் சிந்தனையாளர்.
விஜய் டிவி.யின் ‘நீயா? நானா?’வில் அவரின் ஆளுமைத் திறனையும், பேச்சுத் திறனையும்
முற்போக்குச் சிந்தனையையும் காணலாம்.
இவர் தொகுத்து வழங்கிய முக்கிய நிகழ்ச்சிகள்: ‘நீயா நானா’, ‘விஜய் விருதுகள்’,
‘குற்றமும் பின்னணியும்: நடந்தது என்ன?’, ‘உன்னால் முடியும்’ போன்றவை.
கோபிநாத் சிறந்த எழுத்தாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்பதற்கு அவர் எழுதிய புத்தகங்களே
சாட்சி. அவை: ‘தெருவெல்லாம் தேவதைகள்'(2007), ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங் காதீங்க’
(2008), ‘நேர் நேர் தேமா’ (2011), ‘நீயும் நானும்’ (2010), ‘பாஸ்வேர்டு’ (2013).
இவர் சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார் கே.பாலசந்தர், சிவசங்கரி,
பாலுமகேந்திரா, ராதிகா, வைரமுத்து, சின்னப்புள்ளை, நல்லகண்ணு, சிவகுமார்,
சி.கே.ரங்கநாதன், விஜயகாந்த், அஜித், ஷங்கர், எம்.எஸ்.விஸ்வநாதன், பி.டி.உஷா ஆகிய
ஆளுமைகளைச் சந்தித்து எடுத்த பேட்டிகள் ‘நேர்நேர்தேமா’எனும் நூலாக வெளிவந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கல்லூரி, பள்ளிகளில் மேடை ஏறி அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்து
வைப்பதில் வல்லவர்.
தொலைக்காட்சியில் இவரை அடையாளப் படுத்திய நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், அவரின் ‘நீயா
நானா’ அவரின் பெயருடன் இணைந்து விட்டது. அவரின் பங்களிப்புகள் சில: ‘மக்கள் யார்
பக்கம்?’, ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’, ‘நடந்தது என்ன?’ என நீண்டுகொண்டே போகிறது.
கோபிநாத் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் இவருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்:
American Government Invitation to participate in international visitors
programme (2004), Young International award by “India Today” Magazine
(2007), Best Anchor of the state by “Anandha Vikatan” (2007, 2008),
Invited for the International Health Conference, Sydney (2007),
Outstanding young India by Junior Chamber International (JCI) (2008).