| Profession | அறிஞர் |
|---|
புதுக்கோட்டை பொன்னமராவதி வேகுப்பட்டியில் கதிரேசன் – மீனாள் தம்பதியருக்கு
01.10.1971அன்று பிறந்தார். இவரது மூன்றாம் வயதில் தந்தை மாரடைப்பால் காலமானார்.
தாயார் தோசை சுட்டு விற்று தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வளர்த்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேலைச் சிவபுரி -கணேசர் செந்தமிழ்க் கல்லூரி யில் பி.லிட்.
(இளங்கலை தமிழ் இலக்கியம்), எம்.ஏ., எம்.ஃபில், பட்டங்களைப் பெற்றார். மதுரை காமராசர்
பல்கலைக் கழகத்தில் சோதிடவியலில் பட்டயம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பி.எட். பட்டம்
பெற்றார்.
1999-இல் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள புனித பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
முதுகலைத் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
அங்கிருந்து 2001-இல் அம்பத்தூர் சூரப்பட்டியிலுள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் சேர்ந்தார்.
அக்காலத்தில் பல்கலைக் கழக மானியக்குழு நடத்திய இளநிலை ஆய்வாளர் மற்றும் விரிவுரையாளர்
தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
2002-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘திருவண்ணாமலைத் திருக்கோயில் சமுதாயப்
பயன்பாட்டாய்வு’ என்று தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 2007-இல் சாரதா
பதிப்பகத்தின் உதவியுடன் ‘நந்திக் கலம்பகம்’ உரைநூலை வெளி யிட்டார். தொடர்ந்து சென்னையில்
பல பதிப்பகங்களின் மூலம் இதுவரை 65 நூல்கள் வெளி வந்துள்ளன.
கதிர்முருகு ஆறாம் வகுப்பு முதல் பி.எட். வரை பகுதி நேர வேலை செய்துகொண்டே படித்தார்
என்பதும், பல்கலைக் கழக மானியக் குழு நிதியுதவி மூலம் பிஎச்.டி (முனைவர்) பட்டம்
பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2008-இல் ஆவடி நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில்
சேர்ந்தார். அங்கு துறைத் தலைவராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் சசிரேகாவை திருமணம்
செய்துகொண்டார்.
2010-இல் வி.ஐ.டி. பல்கலையில் பணியில் சேர்ந்தார். தமிழ் தொடர்பான பாடவகுப்புகள்
பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதால் தமிழ் பாடத்துக்கு வேலை இல்லாத நிலையில்
2012-இல் அப்பணியிலிருந்து வெளியேறினார்.
‘வேரல் மொழி இலக்கிய ஆய்வு நிறுவனம்’ என்னும் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு தமிழ்
ஆய்வு நூல்களை வெளியிடுவதை தன் வாழ்நாள் நோக்கமாக கொண்டுள்ளார்.
‘அருள்நெறி மாணிக்கவாசகர்’, ‘நாட்டுப்புறப் பண்பாடும் வழிபாடும்’, ‘பிற்கால நீதி
இலக்கிய வரலாறு’, ‘திறனாய்வு நோக்கில் நந்திக்கலம்பகம்’, ‘சங்கம் மருவிய கால
அறநூல்கள்’, ‘எனக்குள் ஒரு முகம்’ போன்ற நூல்களையும், 50க்கும் மேற் பட்ட பிற்கால நீதி
இலக்கியங்களுக்கு உரை யையும், 50 ஆய்வுக் கட்டுரைகளையும் ஆக்கி இலக்கிய வளர்ச்சிக்கு
தொண்டாற்றி வருகிறார்.