முனைவர் லோ. மணிவண்ணன்

முனைவர் லோ. மணிவண்ணன்

Profession அறிஞர்

Biography

தேனி அம்பாசமுத்திரத்தில் தி.வெ.லோகரட்சகன்- அக்கம்மாள் தம்பதியருக்கு 22.4.1965 அன்று
பிறந்தார்.

1987-இல் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்
கழகத்தில் எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (வர லாறு), எம்ஃபில் (தமிழ்), பிஎச்.டி. (தமிழ்),
பி.எட். (தமிழ்) ஆகிய பட்டங்களைப் பெற்றார். மேலும் காந்தியச் சிந்தனை பட்டயப் படிப்பும்
படித்துள்ளார். ‘மக்கள் தகவல் தொடர்பியல் கலைச் சொற்களின் விளக்கமும் கலைச் சொல்லாக்கச்
சிக்கல்களும்’ என்ற தலைப்பில் எம்ஃபில் பட்டத் தையும், ‘பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களின்
கலையும் கட்டடக் கலையும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

விரிவுரையாளராக மதுரை தியாகராசர் கல்லூரி, சமூக அறிவியல் கல்லூரி, மதுரை
காமராசர் பல்கலைக் கழக மாலை நேரக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார்.
தியாகராசர் கல்லூரியில் தமிழ்த் துறை ஆசிரிய உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது நெறியாள்கையில் ஆறு மாணவர்கள் எம்ஃபில் பட்டத்தையும், மூன்று மாணவர்கள் முனைவர்
பட்டத்தையும் பெற்றுள்ளனர்.

மணிவண்ணன் தம்முடைய கல்லூரியில் மட்டுமல்லாது, பிற கல்லூரிகளிலும் பாடத் திட்டக் குழு
உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர், கோயிற்கலை சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். 2010-இல் தனது ‘பொற்றாமை’
நூலுக்காக தமிழக அரசின் விருது, ‘பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களின் கலையும் கட்டடக்
கலையும்’ (1991)’, ‘கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்’ (2000), ‘பொற்றாமரை’ (2010)
ஆகிய மூன்று நூல்களுக்காக இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் விருது
ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு இவரது கோயில் கலையில் சிறந்த
பங்களிப்பைப் பாராட்டி விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவரது ‘பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களின் கலையும் கட்டடக் கலையும்’, ‘கோயில் ஆய்வும்
நெறி முறைகளும்’, ‘திருக் கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்’, ‘மதுரை மீனாட்சி
சுந்தரேஸ்வரர் கோயில் அமைப்பும் சிறப்பும்’, ‘தமிழகக் கோயிற்கலை வரலாறு’ ஆகிய நூல்கள்
பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடநூலாக இடம்பெற்றுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம், மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு பாடங்களை உருவாக்கித்
தந்துள்ளார்.