அறிஞர்

  • சரஸ்வதி இராமநாதன்

    சிவகங்கை தேவகோட்டையில் நாராயணன்-கோமதியம்மாளுக்கு 19.11.1939 அன்று பிறந்தார். தேனி பெண்கள் பள்ளியில் இந்தி ஆசிரியராகவும், பாட்டு ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார். அப்போது வயது 16. சம வயது பெண்கள் அவருக்கு மாணவியாக இருந்தனர். பின்னர், சென்னை பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார். அதற்காக சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. அப்போது நேரு இறந்தார். அவரது அஸ்தியைக் கொண்டுவந்தார்கள். அதில் சரஸ்வதி மனமுருகி இரங் கற்பா பாடினார். குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் விவேகானந்தர் சிலையைத்…

  • புலவர் செ.இராசு

    ஈரோடு பெருந்துறை வெள்ளமுத்துக் கவுண்டன் வலசு கிராமத்தில் சென்னியப்ப கவுண்டர் – நல்லம்மாள் தம்பதியருக்கு 02.01. 1938-இல் பிறந்தார். கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், ஞானிபாளையம், ஈரோடு ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் காசிமடம் செந்தமிழ்க் கல்லூரியில் 1959-இல் வித்துவான் பட்டம் பெற்றார். 1959-இல் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1963- இல் சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் போது பி.லிட்., தமிழ் எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். ஆசிரியர்…

  • இராம.சுந்தரம்

    சிவகங்கை அலவாக்கோட்டையில் இராமனாதன் – அன்னபூரணி தம்பதியருக்கு 01.04.1938 அன்று பிறந்தார். நாட்டரசன்கோட்டையில் 11-ஆம் வகுப்பு வரை படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்று, சென்னை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் (1959-60) பணியேற்றார். 1961-இல்எம்.ஏ. பட்டம் பெற்று 1967-68 இல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1964-66- இல் கேரள பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும், 1971- இல் மலையாளத்தில் பட்டயமும் பெற்ற பின், புனே பல்கலைக்கழகத் தெக்கணப் பல்கலைக் கழக நல்கைக்…

  • எழுத்தாளர் நீல.பத்மநாபன்

    கேரள திருவனந்தபுரத்தில், நீலகண்ட பிள்ளை -ஜானகி அம்மாள் தம்பதியருக்கு 26.04.1938 அன்று பிறந்தார். இவரது துணைவியார் கிருஷ்ணம்மாள். ஜானகி, உமா, நீலகண்டன், கவிதா என நான்கு குழந்தைகள். இளநிலை இயற்பியல், மின் பொறியியல் பட்டங்களைப் பெற்றவர். 1963- இல் துணை முதன்மைப் பொறியாளராகப் பணியில் சேர்ந்து பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளார். பதிமூன்று வயதில் தன் தெருவில் வசித்த சிறுவர்களின் துணையுடன் ஒரு சிறுபத்திரிகையை நடத்தியுள்ளார். அதில் சிறுவர் சிறுமியரின் கவிதைகள். பாட்டுகள், நாடகப் பிரதிகள் வெளிவந்துள்ளன….

  • புலவர் இரா.கலியபெருமாள்

    தஞ்சாவூர், இராவுசாப்பட்டி க.இராசு – இரா.துளசியம்மாள் தம்பதியருக்கு 01.07.1938 அன்று பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை இராவுசாப்பட்டி, வல்லம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பயின்றார். கரந்தை புலவர் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சென்னைப் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியர் பயிற்சியில் சேர்ந்து 1958-இல் தேர்ச்சி அடைந்தார். 1959-இல் வடுவூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக தம் ஆசிரியப்பணியைத் தொடங்கினார். 1963-80 இல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 1981 தொடங்கி 1997…

  • முனைவர் மு.சதாசிவம்

    சேலம் திருச்செங்கோடு உஞ்சனைக் கவுண்டம்பாளையம் சிற்றூரில் திருமதி பொன்னம்மாள் – திரு.வி.வை. முருகேசன் தம்பதியருக்கு 1936-இல் பிறந்தார். நெசவுக் குடும்பம். தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியிலும், உலகப்பம்பாளையத்தில் நடுநிலைக் கல்வியையும், திருச்செங்கோடு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். இலயோலா கல்லூரியில் கணிதப் பிரிவில் இண்டர் மீடியட் முடித்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆனர்ஸ் படித்தார். 1956-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசுகளையும், தங்கப் பதக்கத்தினையும்…

  • முனைவர் ச.சிங்காரவேலு

    சிங்கப்பூரில் சச்சிதானந்தம் இராமசாமி பிள்ளை-சர்க்கரை அம்மாள் தம்பதியருக்கு 22.12. 1936 அன்று பிறந்தார். இவருக்கு நான்கு வயதாகும் போது (1940) சிங்கப்பூரில் நிகழவிருந்த போரின் காரணமாக குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள வேதாரண்யத்திற்கு வந்து சேர்ந்தனர். வேதாரண்யத்தில் துவக்கக் கல்வியைப் பயின்றார். சுமார் ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவர்கள்மீண்டும் 1946-இல் சிங்கப்பூருக்கே திரும்பினர். அதனால் சிங்கப்பூரில் இடை நிலைக் கல்வியையும், உயர்நிலை கல்வியையும் பயின்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், சிங்கப்பூரிலுள்ள மாலாயாப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் கோலாலம்பூர் பல்கலைக்…

  • தமிழறிஞர் மு.வெங்கடேசபாரதி

    சீர்காழி மருதங்குடியில் முத்தையா-தங்காயாள் தம்பதியருக்கு 26.05.1936 அன்று பிறந்தார். இவரது தந்தையார் ஐந்து வயதில் அரிச்சுவடி, எண்சுவடி, ஆத்திசூடி, நிகண்டு, திருக்குறள், நல்வழி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, விவேக சிந்தாமணி போன்ற பாடல்களை அவ்வப்போது கற்பித்தார். அதன்பின் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1952-இல் எம்.எல்.சி. பள்ளி நிர்வாகத்தைப் புகழ்ந்து இவர் எழுதிய வெண்பா சட்டமிடப்பட்டு 2010 வரை தலைமை…

  • பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம்

    கோவை ஆத்துப் பொள்ளாச்சி விவசாயக் குடும்பத்தில் கி.பொன்னுசாமி கவுண்டர் -கண்டி அம்மாள் தம்பதியருக்கு 29.07.1936 அன்று பிறந்தார். இயற் பெயர்: நடராஜ பாலசுப்பிரமணிய சேது ராமசாமி. 1956- இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ், 1987- இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டங்களைப் பெற்றார். 1960- இல் அரங்கநாயகியை மணந்தார். செந்தில்வேல், சக்தி வேல் என இரு மகன்கள். தனது 23-ஆவது வயதில், பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி….

  • இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்

    தஞ்சை திருக்காட்டுப்பள்ளி இளங்காடு கிராமத்தில் வசித்த கோவிந்தசாமி- அரங்கநாயகி தம்பதியருக்கு 10.05.1938-இல் பிறந்தார். இளவயதிலேயே வேளாண் பணியில்ஈடுபட்டார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1963 முதல்1969 வரை கோவில்பட்டி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றினார். 1964-ல் தனது 25-வது வயதில், பூண்டி சாவித்திரியை சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார். மனைவியை உயர்கல்வி தேர்வு எழுதச் செய்தார். சைக்கிள் ஓட்டவும் கற்றுக் கொடுத்தார். இத்தம்பதியருக்கு மீனா என்றொரு மகள். 1969…