| Profession | அறிஞர் |
|---|
சிங்கப்பூரில் சச்சிதானந்தம் இராமசாமி பிள்ளை-சர்க்கரை அம்மாள் தம்பதியருக்கு 22.12.
1936 அன்று பிறந்தார்.
இவருக்கு நான்கு வயதாகும் போது (1940) சிங்கப்பூரில் நிகழவிருந்த போரின் காரணமாக
குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள வேதாரண்யத்திற்கு வந்து சேர்ந்தனர்.
வேதாரண்யத்தில் துவக்கக் கல்வியைப் பயின்றார். சுமார் ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில்
வசித்தவர்கள்மீண்டும் 1946-இல் சிங்கப்பூருக்கே திரும்பினர். அதனால் சிங்கப்பூரில் இடை
நிலைக் கல்வியையும், உயர்நிலை கல்வியையும் பயின்றார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், சிங்கப்பூரிலுள்ள மாலாயாப் பல்கலைக் கழகத்திலும்,
பின்னர் கோலாலம்பூர் பல்கலைக் கழகத்திலும் கல்லூரி படிப்பைப் பயின்றார்.
மலாயாப் பல்கலைக் கழக மாணவர் மன்றத்திலிருந்து வெளிவந்த ‘மகாசிஸ்வா நெகாரா’ மாத
சஞ்சிகையின் ஆசிரியராக 1959- 1960இல் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய
மும்மொழிகளிலும் புலமைப் பெற்றார்.
22.4.1964 அன்று தமது 22-வது வயதில் ருக்குமணியை கோலாலம்பூர் ஸ்ரீ தண்டபாணி ஆலயத்தில்
திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சந்திரசேகரன், பிரேமா, சுசீலா என மூன்று
குழந்தைகள்.
சிங்காரவேலு பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி., பட்டங்களுடன் இங்கிலாந்து இலண்டன் பல்கலைக்
கழகத்தில் எல்.எல்.பி., எனும் சட்டப் படிப் பையும், மலேசிய வழக்கறிஞருக்கான சி.எல்.பி.
சான்றிதழையும் பெற்றார். 1995 முதல் 1998 வரை மலேசியாவில் வழக்கறிஞராகப்
பணியாற்றினார்.
1966-இல் கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினராகவும், 1978-இல் மலாயா பல்கலைக் கழக
இந்திய ஆய்வியல் துறை ஏற்பாடு செய்த மலேசியத் தமிழ்ச் சிறுகதைக் கருத்தரங்கு ஏற்பாட்டுக்
குழுத் தலைவராகவும் செயற்பட்டார்.
2004-இல் மலாயா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ‘நிறைநிலை பேராசிரியர்’ எனும்
உயரிய கௌரவ விருது வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். 1984-இல் மலாய் பல்கலைக் கழகத்
துணைவேந்தர் ‘பல்கலைக் கழக விசுவாச உழைப்புச் சான்றிதழ்’ வழங்கி கௌரவித்தார். 1991-இல்
மலேசிய மாமன்னர் கோலாலம்பூர் தேசிய அரண்மனையில் ‘கிரீட விசுவாச வீரர்’ விருதை வழங்கி
சிறப்பித்தார். மலேசியாவில் மலாயப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில்
ஆயிரக்கணக்கானோர் பட்டம் பெற்றுச் சென்றாலும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர்
விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி இருந்தாலும் இன்றும் இந்திய
ஆய்வியல் துறை என்றாலே அதன் குறியீடாக இருப்பவர் நிறை நிலைப் பேராசிரியர் முனைவர்
ச.சிங்காரவேலு அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.