இராம.சுந்தரம்

இராம.சுந்தரம்

Profession அறிஞர்

Biography

சிவகங்கை அலவாக்கோட்டையில் இராமனாதன் – அன்னபூரணி தம்பதியருக்கு 01.04.1938 அன்று
பிறந்தார்.

நாட்டரசன்கோட்டையில் 11-ஆம் வகுப்பு வரை படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்று, சென்னை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப்
(1959-60) பணியேற்றார். 1961-இல்எம்.ஏ. பட்டம் பெற்று 1967-68 இல் விரிவுரையாளராகப்
பணியாற்றினார். 1964-66- இல் கேரள பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும், 1971- இல்
மலையாளத்தில் பட்டயமும் பெற்ற பின், புனே பல்கலைக்கழகத் தெக்கணப் பல்கலைக் கழக நல்கைக்
குழு இளநிலை ஆய்வாளராக மேற்படிப்பை தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளராக (1967-71) ஆய்வு மேற்கொண்டார்.
‘பத்துப் பாட்டு மொழியமைப்பு, திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, தொல்காப்பிய மொழியியல்
விளக்கம்’ ஆகியன இவர் தம் ஆய்வுப் பொருளாக அமைந்தன. இவற்றிடையே குறிப்பிடத்தக்க பணியாக
டென்மார்க் மொழியியல் பேராசிரியர் கோட்பாட்டை இந்திய மொழி ஒன்றுக்குப் பொருத்தி ஆய்வு
செய்த முதல் ஆய்வேடு பத்துப் பாட்டு மொழியமைப்பு பற்றிய ஆய்வேடாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் தி.மு.க. இயக்கப் பணிகளில் ஈடுபட்டார்.
கேரளப் பல்கலைக் கழக ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தால்
ஈர்க்கப்பட்டார்.

1979-81இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது ஆசிரியர் இயக்கத்தில்
முனைப்புடன் ஈடுபட்டு போராட்டக் களம் கண்டார். ஒரு கட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்திலிருந்து வெளியேற்றவும் பட்டார்.

1972-79இல் போலந்து நாட்டிலுள்ள வார்சா பல்கலைக் கழகத்தில் ஏழு ஆண்டு காலம் அங்குள்ள
மாணவர்களுக்கு தமிழும் மலையாளமும் கற்பித்தார். போலிஷ் மொழியில் தமிழ் இலக்கிய வரலாறு
என்ற நூலை எழுதி பதிப்பித்துள்ளார்.

இந்திய – போலிஷ் நட்புறவுக் கழக உறுப்பினராக போலந்து நாட்டின் முக்கிய நகரங்களில்
இலக்கிய உரைகள் நிகழ்த்தியுள்ளார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும்
பணியேற் றார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறையில் பணியேற்றார்.

இக்காலத் தல் 27 பொறியியல் மருத்துவப் பாடநூல்களைத் தயாரித்ததுடன் ஒரு லட்சம் கலைச்
சொற்களைத் திரட்டித் தொகுத்து வகைப்படுத்தித் தக்க அறிஞர்களைக் கொண்டு தரப்படுத்தி,
80,000 சொற்களை 6 தொகுதிகளாகவும், பல கருத்தரங்குகள் நடத்தி, கருத்துரைகளை 15
தொகுதிகளாகவும் வெளியிட்டார்.

இலக்கியம், அறிவியல் சார்ந்த பத்து நூல்களை எழுதியுள்ளார். 1997-இல் தமிழக முதல்வர்
கருணாநிதி ‘நல்லறிஞர்’ விருது வழங்கினார்.