இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்

Profession அறிஞர்

Biography

தஞ்சை திருக்காட்டுப்பள்ளி இளங்காடு கிராமத்தில் வசித்த கோவிந்தசாமி- அரங்கநாயகி
தம்பதியருக்கு 10.05.1938-இல் பிறந்தார்.

இளவயதிலேயே வேளாண் பணியில்ஈடுபட்டார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்
அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1963 முதல்1969 வரை கோவில்பட்டி மண்டல வேளாண்
ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றினார்.

1964-ல் தனது 25-வது வயதில், பூண்டி சாவித்திரியை சீர்திருத்தத் திருமணம் செய்து
கொண்டார். மனைவியை உயர்கல்வி தேர்வு எழுதச் செய்தார். சைக்கிள் ஓட்டவும் கற்றுக்
கொடுத்தார். இத்தம்பதியருக்கு மீனா என்றொரு மகள்.

1969 முதல் 1979 வரை நெல்லை மாவட்டம், களக்காடு கிராமத்தில் அமைதிக்காக நோபல் பரிசு
பெற்ற நெதர்லாந்து அருட்தந்தை ஆர்.பி. டொமினிக் நடத்திய ‘ஃபயர்’ அமைப்பின் ‘அமைதி தீவுத்
திட்ட’த்தில் பணியாற்றிய பின், ‘குடும்பம்’ (1979),’லீசா’, ‘கொழிஞ்சி’ (1990) 2002-ல்
‘தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகம்’ (2002), ‘இந்திய இயற்கை வேளாண் பண்ணையாளர் சங்கம்’
(2004) ‘தமிழ்நாடு இயற்கை உழவர்கள் இயக்கம் மற்றும் வானகம்’ (2006) ஆகிய இயக்கங்களை
உருவாக்கியும், நடத்தியும் வந்தார். 1995-2000இல் தேசிய அளவிலான ஏரியசிலும், 2003-
2006 இந்திய இயற்கை பண்ணையாளர் சங்கத்திலும் பணியாற்றினார். இவ்வியக்கங் களின் வழியே
இயற்கை வேளாண் மையை வலியுறுத்திய நம்மாழ்வார், இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள்,
மரபணு மாற்று சோ னைகள், மரபணு மாற்றுப் பயிர்கள், உணவு தானிய இறக்குமதி, வேளாண்
நிலங்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல், மீதேன் வாயு திட்டம் ஆகியவற்றை தன் வாழ்
நாள் முழுவதும் எதிர்த்துப் போராடினார்.

இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி, பெல்சியம், சுவீடன், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ்,
மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். மஞ்சள், வேம்பு காப்புரிமைகளை மீட்டுத்
தந்தார்.

1998-இல், சுதேசி பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், வேளாண்மை
பரப்புரைக்காகவும் மூன்று முறை நடைபயணம் மேற்கொண்டார்.

2004-இல் ‘சுனாமி’யினால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நேரடி களப்பணியில்
ஈடுபட்டார். தமிழ்நாட்டில் 60-க்கும் மேற்பட்ட ‘இயற்கை வேளாண் பயிற்சி மைய’ங்களை
உருவாக்கினார். இந்தோனேசியாவில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 30 மாதிரிப்
பண்ணைகளை அமைத்தார்.

‘பேரிகை’ என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் திங்கள் இதழை வெளியிட்டுள்ளார். இயற்கை
வேளாண்மை சார்ந்த 26 நூல்களை தானே எழுதியுள்ளார். பிற நாட்டு அறிஞர்களின் கட்டுரைகளை
தமிழாக்கம் செய்தும் வெளியிட்டுள்ளார். “முயற்சி என்பது விதை போல. அதை விதைத்துக்
கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்” என்பது நம்மாழ்வாரின்
பொன்மொழி.

இவர், 30.12.2013-இல் தஞ்சையில் காலமானார்.