அறிஞர்

  • பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

    கோவையிலுள்ள வெள்ளலூரில் த. இளையபெருமாள் -பழனியம்மாள் தம்பதியரின் இளைய மகனாக 05.02.1942 அன்று பிறந்தார். வெள்ளலூர், கோவை இராமநாதபுரம் பள்ளிகளில் கல்வியைக் கற்று, 1957-இல் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்து வான், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். 1959- இல் சிங்காநல்லூரில் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர், படிப்படியாக உயர்ந்து 2001-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆனார். தஞ்சைத்…

  • பேராசிரியர் ந.சொக்கலிங்கம்

    திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் மீ.சு.நடராச பிள்ளை-சரஸ்வதி (எ) குப்பம்மாள் தம்பதியருக்கு 1942-இல் பிறந்தார். நெல்லைநகராட்சித் துவக்கப் பள்ளியிலும், ம.தி.த. இந்து கலாசாலையிலும் பள்ளிக் கல்வியை முடித்தார். மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கலாசாலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இரா.பி. சேதுப்பிள்ளை, புதுமைப் பித்தன், பாரதியார், தொ.மு.சி. ரகுநாதன், நீலகண்ட சாஸ்திரி, இரா.நாகு, மீ.ப.சோமு உள் ளிட்ட புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதிகள் பலர் பயின்ற கல்லூரி அது. 1966- 68 இல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைக் கல்வியைத்…

  • தமிழறிஞர் முல்லைவாணன்

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்திலுள்ள கொடியம்பாளையம் கிராமத்தில் வேலாயுதம் – குப்பாயி தம்பதி யருக்கு 30.07.1942-இல் பிறந்தார். கீழக்கரைதிண்ணைப் பள்ளியிலும், அரசு தொடக்கப் பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பு வரை படித்தபின், 1955-இல் இவரது தந்தை இவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார் (தந்தை யார் சிங்கப்பூர் துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணியாளர்). முல்லைவாணன் வெகுநாட்கள் படகுத் தொழிலாளியாகவே இருந்துவந்தார். படகுப் பணியில் இருந்த நண்பர்களுக்காக திரு.வி.க. படிப்பகம் தொடங்கி அதன் தலைவராக இருந்தார். 1971-இல் சென்னை சியாமளா…

  • மருத்துவத் தமிழறிஞர் சு.நரேந்திரன்

    புதுக்கோட்டையில் பழ.சுந்தரேசன்-பத்மாசினி தம்பதியருக்கு 09.11.1942 அன்று பிறந்தார். தந்தையார் மலேசியா ரப்பர் தோட்ட மேலாளராகப் பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு புதுக் கோட்டைக்கு வந்து பல்வேறு பத்திரிகைககளில் நிருபராகவும், முகவராகவும் இருந்தவர். இவரது அண்ணன் சு.ஜெக தீசன், தினத்தந்தியில் ஆசிரிய ராகப் பணியாற்றி பிறகு தமிழக அரசின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சு.நரேந்திரன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 1968-இல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை அறுவை…

  • பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன்

    தஞ்சை கும்பகோணம், நாகேஸ்வரன் கோயில் சன்னதி தெருவில் வெங்கடாசலம் – செல்லம்மாள் தம்பதியருக்கு 06.04.1943-இல் பிறந்தார். குடும்பச்சூழலின் காரணமாக சிறிய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். திண்ணைப்பள்ளி, தாதன் பேட்டைப் பழூர், திருவிடை மருதூர் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் கல்வியைப் பயின்றார். கும்பகோணம் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டமும்,காரைக்குடி கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார். தஞ்சை பூண்டி புட்பம் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர், வேலூர் ஊரிசு கல்லூரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி, திருச்சி பெரியார் அரசு…

  • ந.க.மங்களமுருகேசன்

    மதுரை திருமங்கலத்தில் ந.கந்தசாமி – கவுந்தரி தம்பதியருக்கு 15.06.1943-இல் பிறந்தார். பாண்டிய குலசத்திரிய நாடார் தொடக்கப் பள்ளியில் கல்வியைப் பயின்றார். மதுரைக் கல்லூரியில் இளங்கலை (பொருளாதாரம்) பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை (வரலாறு) பட்டமும் பெற்றார். 1970-இல் அத்தை சுப்பம்மாள் (என்கிற) வேலம்மாள் -பொன்னையா தம்பதியரின் மகள் ராஜம் இவரது வாழ்க்கைத் துணையானார். இத்தம்பதியருக்கு ‘ராஜேசுக் கந்தன்’ என்றொரு மகன்; ‘தென்றல்’ என்றொரு மகள். எம்.ஏ., எம்.லிட்., எம்.எட்., பிஎச்.டி., (வரலாறு), பி.எச்.டி., (கல்வியியல்) பட்டங்களையும்,…

  • பேராசிரியர் தி.இராசகோபாலன்

    திருவாரூரில் 12.02.1941 – இல் பிறந்தார். புலவர், பி.ஓ.எல்., எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), பிஎச்.டி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவருடைய முனைவர் பட்டத்திற்கான தலைப்பு ‘வரலாற்று நாவல்கள் வரலாற்று செய்திகள்’ என்பதாகும். சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றிய பின், சென்னை தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். இவரது நெறியாள்கையில் 20 மாணவர்கள் எம்.ஃபில் பட்டமும், 8 மாணவர்கள் முனைவர் பட்டமும் பெற்றனர். இந்திய அளவில் புதுதில்லி, கல்கத்தா, மும்பை,…

  • பி.இரத்தினசபாபதி

    தென்காசி கணக்கப்பிள்ளை வலசை எனும் ஊரில் இல.பிச்சமுத்து – சுப்பம்மாள் மகனாகப் 08.03.1941 அன்று பிறந்தார். 1946-இல் பாலர் வகுப்பில் சேர்க்கப்பட்டார். தென்காசி இ.சி.ஈ. கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வியைப் படித்தார்.1958- இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (தமிழ்) பட்டம் பெற்றார். 1966-இல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றார். 1989- இல் முனைவர் பட்டம் பெற்றார். 1972- இல் தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பயிற்று நராகப் பணியேற்று, வேலூர் முத்துலிங்கம் கல்லூரி,…

  • பேரறிஞர் க.ப.அறவாணன்

    தஞ்சாவூர் கடலங்குடி க.பழனியப்பர்- தங்கப்பாப்பு தம்பதியருக்கு 09.08.1941 அன்று பிறந்தார். இயற்பெயர் அருணாச்சலம். 1963-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், 1965இல் பி.ஓ.எல். பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 1967-இல் கேரள பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக முதுகலை (எம்.ஏ.) -யில் தேர்ச்சி பெற்று, மதுரை கருமுத்து தியாகராசர் பரிசைப் பெற்றார். பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் 1967-இல் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். 1968-இல் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முதல்வரானார்….

  • தெ.ஞானசுந்தரம்

    நாகை குழையூர் தெண்டபாணி பிள்ளை – அ.தையல்நாயகி தம்பதி யருக்கு 20.09.1941 அன்று பிறந்தார். மனைவி: புலவர் தி.மணிமேகலை. 3 ஆண் குழந்தைகள். குடந்தை அரசினர் கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்), சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்) பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றார். ரா.சீனிவாசன் வழிகாட்டு தலில் ‘வைணவ உரைவளம்’ எனும் பொருளில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். 1963-இல்சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் வேலூர் கந்தசாமி கவுண்டர்…