| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் மீ.சு.நடராச பிள்ளை-சரஸ்வதி (எ) குப்பம்மாள்
தம்பதியருக்கு 1942-இல் பிறந்தார்.
நெல்லைநகராட்சித் துவக்கப் பள்ளியிலும், ம.தி.த. இந்து கலாசாலையிலும் பள்ளிக் கல்வியை
முடித்தார். மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கலாசாலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இரா.பி. சேதுப்பிள்ளை, புதுமைப் பித்தன், பாரதியார், தொ.மு.சி. ரகுநாதன், நீலகண்ட
சாஸ்திரி, இரா.நாகு, மீ.ப.சோமு உள் ளிட்ட புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதிகள் பலர் பயின்ற
கல்லூரி அது.
1966- 68 இல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைக் கல்வியைத் தொடங்கினார். ஆனால்,
பொருட்செலவினைக் கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் காரைக்குடி தொலைபேசி இணைப்பகத்தில்
வேலை செய்து கொண்டே முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
தொலைபேசித் துறையில் ஐந்தரை ஆண்டுகள் பணியாற்றி 1968 திசம்பரில் அப்பணியிலிருந்து
விலகினார். பின்னர் மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும், திருவைகுண்டம் குமரகுருபர்
கலைக் கல்லூரிகளிலும், நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியிலும் பணியாற்றி, 1977-இல்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் துறையில் விரிவுரையாளராகப் பொறுப்
பேற்றார்.
பின் இணைப் பேராசிரியராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பொறுப்புயர்வு பெற்று
30.06.2002-இல் நல்ல பல தமிழ் மாண வர்களை உருவாக்கிய மனநிறைவுடன் பணி நிறைவு
பெற்றார்.
அமைதியான பேச்சு, அடக்கமான செயல்கள், ஆர்ப்பாட்மில்லாத அணுகுமுறை உடைய நெல்லையாரின்
நூல்களை பொருண்மை அடிப்படையில் வகுத்தால், பக்தியூற்று-1, மரபில் அழுத்தம்- 6,
பாரதிதாசனில் ஈடுபாடு- 2, இலக்கணத்தில் ஏற்றம்-2, வாழ்க்கை வரலாறு-1, ஊடகவியலில்
ஊக்கம்- 2, உரையாசிரியர் களிடம் ஆர்வம்- 1 என பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.
இவருடைய 15-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் பல்வேறு இதழ்கள், பல்கலைக் கழகங்கள், செம் மொழி
உயராய்வு நிறுவனம், கல்லூரிகள் ஆகிய வற்றில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் வெளி யாகின.
மதுரை பாத்திமா கல்லூரி, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, அக்சீலியம் கல்லூரி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் போன்றவை நடத்தும்
கருத்தரங்குகளில் மதியுரைஞர் குழுவில் இருந்து பணிபுரிந்து வருகிறார்.
1969-2010 இந்தியப் பல்கலைக் கழக தமிழா சிரியர் மன்ற கருத்தரங்குகளில் தொடர்ந்து
ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வழங்கி யுள்ளார்.
இவரது நெறியாள்கையின் கீழ் 47 மாணவர்கள் இளமுனைவர் பட்டம், 7 மாணவர்கள் முனைவர் பட்டம்
பெற்றுள்ளனர்.