பேரறிஞர் க.ப.அறவாணன்

பேரறிஞர் க.ப.அறவாணன்

Profession அறிஞர்

Biography

தஞ்சாவூர் கடலங்குடி க.பழனியப்பர்- தங்கப்பாப்பு தம்பதியருக்கு 09.08.1941 அன்று
பிறந்தார். இயற்பெயர் அருணாச்சலம்.

1963-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், 1965இல் பி.ஓ.எல்.
பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 1967-இல் கேரள
பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக முதுகலை (எம்.ஏ.) -யில் தேர்ச்சி பெற்று, மதுரை
கருமுத்து தியாகராசர் பரிசைப் பெற்றார்.

பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் 1967-இல் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார்.
1968-இல் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முதல்வரானார். ஓராண்டுக்குப் பின்னர்
தூயசேவியர்கல்லூரியிலேயே விரிவுரையாளர் (1969) ஆனார்.

21.04.1969 அன்று திருமணம். துணைவியார்: தாயம்மாள்.

1970- இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1974- இல்
எம்.லிட். பட்டமும், 1977- இல் முனைவர் பட்டமும் பெற்றார். ரஷ்யன் மொழியையும், மானுட
வியலையும், கல்வெட்டுப் பயிற்சியையும் கற்றுக் கொண்டார்.

1977-இல் ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் நாட்டு டக்கர் பல்கலைக் கழக மானுடவியல் துறையில்
சேர்ந்து ஐந்தாண்டுகள் ஆய்வு மேற் கொண்டார். இவ்வாய்வுக் காலத்தில் பிரெஞ்சு மொழியையும்
கற்றுக்கொண்டார். 1982-இல் சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியில்
சேர்ந்தார்.

1986-இல் டெல்லியில் இயங்கி வரும் அனைத் திந்தியக் கிறித்தவக் கல்வி நிறுவனம் இவருக்கு
‘சிறந்த பேராசிரியர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது. இக்கால கட்டத்தில் ‘தமிழர்மேல்
நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ (1987) எனும் நூலை எழுதினார். 1987-இல் புதுவைப்
பல்கலைக் கழகத்தில் துறைத் தலைவரானார். 1998-இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்
கழகத்தின் துணை வேந்தராக பதவி ஏற்றார். 2001-இல் பணி நிறைவு பெற்றார்.

106 நூல்களை எழுதினார். பல்வேறு நூல்களையும் ஆய்வுக் கோவைகளையும் பதிப்பித்தார். தமிழக
அரசின் சிறந்த நூலுக்கான பரிசை இவரது நான்கு நூல்கள் பெற்றுள்ளன. திருப்பூர் தமிழ்ச்
சங்கப் பரிசு, சென்னைத் தமிழ்ச் சங்கப் பரிசு, சி.பா.ஆதித்தனார் ரூ.1 லட்சம் இலக்கிய
விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது உட்பட ஏராளமான விருதுகளையும் பரிசுகளையும்
பெற்றார்.

இவரது நெறியாள்கையில் 8 பேர் எம்.ஃபில். பட்டமும், ஐவர் முனைவர் பட்டமும் பெற் றுள்ளனர்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே தமிழ்ப் பணியைத் தொடர்ந்து வந்த இவர்
23.12.2018-இல் கால மானார்.