அறிஞர்

  • பேராசிரியர் கி.நாச்சிமுத்து

    கோவை கொடுவாய் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கிருஷ்ணசாமி – நாகம்மாள் தம்பதியருக்கு 24.08.1947 அன்று பிறந்தார். நான்காம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்று, பொங்கலூரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்தார். கோவை பூ.சு.கோ. கலைக்கல்லூரியில் புகமுக வகுப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1975-இல் கிருஷ்ணவேணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் களுக்கு கன்னியா, நித்தியா என இரு மகள்கள். மொழியியல்…

  • முனைவர் இராதா செல்லப்பன்

    கேரள திருவனந்தபுரத்தில், வழக்கறிஞர் பாடகலிங்கம் பிள்ளை – தங்கம்மாள் தம்பதியருக்கு 15.02.1948-இல் பிறந்தார். தாயார் தங்கம்மா தமிழறிஞர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் மகள். கேரள பல்கலைக் கழகத்தில் மொழியியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1971-இல் இவருக்கும் பொதுப் பணித்துறைப் பொறியாளர் செல்லப்பனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கவிதா, அமுதா என இரண்டு மகள்கள். திருமணத்திற்குப் பின், கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பேரா. ஏ. ஞானமூர்த்தி மேற்பார்வையில் ‘ஆய்வு செய்து, அறிவியல் தமிழ்த் துறையின் முதல் முனைவர்…

  • அப்துல்காதர்

    தேனி சின்னமனூரில் திவான் மைதீன்-பாத்திமுத்து தம்பதியருக்கு 18.06.1948 அன்று பிறந்தார். சின்னமனூரில் கிருஷ்ண அய்யர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி வரை பயின்ற அப்துல் காதர், பள்ளி இலக்கிய மன்றக் கவிதைப் போட்டியில் கவிஞர் மீரா கரங்களால் பரிசுப் பெற்றார். மதுரை காமராசர் கல்லூரியில் பிஎஸ்.சி., திருச்சி தேசியக் கல்லூரியில் எம்.ஏ., சென்னைப் பல்லைக் கழகத்தில் எம்.ஃபில், மலேயா பல்கலைக் கழகத்திலும் (1998), சென்னைப் பல்கலைக் கழகத்திலும் (2004) இரு டாக்டர் பட்டங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 1970-இல்…

  • தமிழறிஞர் கோ.முனியாண்டி

    மலேசியாவில் கோவிந்தசாமி- அன்னம்மா தம்பதியருக்கு 1948-இல் மூத்த மகனாக தமிழறிஞர் கோ.முனியாண்டி பிறந்தார். 1997 முதல் ‘மலேசிய நண்பன்’ பத்திரிகையின் சத்தியவான் வட் டார நிருபராகப் பணியாற்றி வருகிறார். இவரது முதல் நாவல் ‘இராமனின் நிறங்கள்’. இவரது படைப்புகளின் தலைப்புகள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும். கவிதை வரியாக மிளிரும் தன்மையுடையவை. இவ்வாறாக புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மட்டுமல்லாது 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். 2004-இல் செம்பருத்தி இயக்கம் இவருக்கு ‘இலக்கியவாதி விருது’…

  • முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்

    திருவாரூர் குடவாசலில் ஒரு பழம்பெருமை வாய்ந்த குடும்பத்தில் 22.9.1948 அன்று பிறந்தார். இவரது துணைவியார் கண்ணம்மா. இத்தம்பதியருக்கு ஸ்ரீவித்யா, அஞ்சனா என இரு மகள்கள். குடந்தை அரசு கல்லூரியில் விலங்கியலில் பட்டம் பெற்ற பாலசுப்பிரமணியன், அரசு வேலைக்குச் செல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் விற்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கி சில ஆண்டுகாலம் நடத்தினார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. (வரலாறு) பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் பட்டமும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்…

  • சு.வேல்முருகன்

    புதுச்சேரி, அரியாங்குப்பம், கொம்யூன் தவளகுப்பம் சுப்புராயன் – செங்கேணி தம்பதியருக்கு 26.12.1946 அன்று பிறந்தார். 1976- இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.ஏ., 1980-இல் மைசூர் பல்கலைக் கழகத்தில் பி.எட்., 1983- இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., 1986- இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் மற்றும் 1994- இல் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., 1995- இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், 1974-இல் சென்னை தட்சிண் பாரத் இந்திப் பிரச்சார சபையில்…

  • டாக்டர் அ.சையத் இப்ராஹிம்

    இராமநாதபுரம் சித்தார்கோட்டையில் மல்லாரி அப்துல்கனி மரைக்காயர் -உம்மு ஹபீமா தம்பதியருக்கு 20.01.1947-இல் பிறந்தார். புனைப்பெயர் ஹிமானா சையத். இவரது துணைவியார் ஹிமானாபர். இவர்களுக்கு அப்துல்கனி, மீம்அஸ்மி, வாஸிம் கான் என மூன்று குழந்தைகள். பள்ளிக் கல்வியைத் தேவக்கோட்டை தே பிரித்தோ பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை லயோலா கல்லூரியிலும், மருத்துவக் கல்வியை (எம்.பி.பி.எஸ்) மதுரை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். குடும்ப மருத்துவராகவும், பகுதிநேரப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். 1963-இல் இவரது முதல் கவிதை ‘மறுமலர்ச்சி’ சிங்கப்பூர் தமிழ் முரசு இதழில்…

  • ச.கல்யாணராமன்

    தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரில் சக்கரபாணி -இராசம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு தம்பிகள் ஐவர், தங்கை ஒருவர். குத்தாலம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கதைகள் எழுதவும், அதைப் பத்திரிகைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கவும் தொடங்கி விட்டார். தபாலில் ஸ்டாம்ப் ஒட்டாததால் பல முறை தண்டம் கட்டி, ஒரு முறை ஆசிரியரிடம் அடியும் வாங்கியிருக்கிறார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் (வரலாறு) படித்தார். கல்லூரி நூலகத்தில் இருந்த ஏராளமான நூல்களைப் படித்தார். பிறகு சொந்த…

  • தமிழறிஞர் முனைவர் கடவூர் மணிமாறன்

    கரூர் அய்யம்பாளையத்தில் கு.பழனியப்பனார் -கன்னியம்மாள் தம்பதியருக்கு 21.01.1947 அன்று பிறந்தார். இயற்பெயர் முத்துச்சாமி. கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்ற போது ‘மணிமாறன்’ என மாற்றிக் கொண்டார். 1976-இல் திருமணம். துணைவியார்: நாகரத்தினம். இத் தம்பதியருக்கு கனிமொழி என்றொரு மகள், கலைச்செல்வன் என்றொரு மகன். திருச்சி இ.ரெ.மேனிலைப் பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றிய பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்., பி.எட்., எம்.எட்., பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைககழகத்தில் இதழியல் பட்ட மேற்படிப்புப் பட்டயச் சான்றி தழையும் பெற்றார். 1978-ல்…

  • பேராசிரியர் இராம.குருநாதன்

    தஞ்சை கும்பகோணத்தில் அ.இராமலிங்கம் – சேது அம்மாள் தம்பதியருக்கு 21.10.1946 அன்று பிறந்தார். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இக்கல்லூரியில் தமிழ் மன்றச் செயலாளராகவும் இருந்துள்ளார். ‘குத்துவிளக்கு’ என்றொரு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியுள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பயின்றார். வகுப்புத் தோழர் இ.ஜே.சுந்தர் நடத்திய ‘சுட்டி’ இதழில் இவரும் இணைந்து பணியாற்றியுள்ளார். 1970-இல் ஜெயலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு தேவிப்பிரியா என்றொரு மகள். 1971-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிற்றுநராக…