தமிழறிஞர் கோ.முனியாண்டி

தமிழறிஞர் கோ.முனியாண்டி

Profession அறிஞர்

Biography

மலேசியாவில் கோவிந்தசாமி- அன்னம்மா தம்பதியருக்கு 1948-இல் மூத்த மகனாக தமிழறிஞர்
கோ.முனியாண்டி பிறந்தார்.

1997 முதல் ‘மலேசிய நண்பன்’ பத்திரிகையின் சத்தியவான் வட் டார நிருபராகப் பணியாற்றி
வருகிறார்.

இவரது முதல் நாவல் ‘இராமனின் நிறங்கள்’. இவரது படைப்புகளின் தலைப்புகள் தனிச் சிறப்பு
வாய்ந்தவையாக இருக்கும். கவிதை வரியாக மிளிரும் தன்மையுடையவை.

இவ்வாறாக புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மட்டுமல்லாது 500க்கும் மேற்பட்ட
கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

2004-இல் செம்பருத்தி இயக்கம் இவருக்கு ‘இலக்கியவாதி விருது’ வழங்கி சிறப்பித்தது.
2013-இல் எழுத்தாளர் சங்கம் ‘ஆதி விருது’ வழங்கியது.

இதே ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் நிகழ்வில் ‘குறிஞ்சிக் குமாரனார்’ விருது வழங்கி
சிறப்பிக்கப் பெற்றார்.