தமிழறிஞர் முனைவர் கடவூர் மணிமாறன்

தமிழறிஞர் முனைவர் கடவூர் மணிமாறன்

Profession அறிஞர்

Biography

கரூர் அய்யம்பாளையத்தில் கு.பழனியப்பனார் -கன்னியம்மாள் தம்பதியருக்கு 21.01.1947 அன்று
பிறந்தார். இயற்பெயர் முத்துச்சாமி. கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்ற போது ‘மணிமாறன்’
என மாற்றிக் கொண்டார்.

1976-இல் திருமணம். துணைவியார்: நாகரத்தினம். இத் தம்பதியருக்கு கனிமொழி என்றொரு
மகள், கலைச்செல்வன் என்றொரு மகன்.

திருச்சி இ.ரெ.மேனிலைப் பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றிய பின்னர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்., பி.எட்., எம்.எட்., பட்டங்களையும், மதுரை
காமராசர் பல்கலைககழகத்தில் இதழியல் பட்ட மேற்படிப்புப் பட்டயச் சான்றி தழையும் பெற்றார்.

1978-ல் நெல்லிமரத்துக் கண்டிகை பள்ளியில் தமிழாசிரியராகப் பணியை தொடங்கியவர்
ஊத்துக்கோட்டை, திருவிலாங்காடு, பெரம்பலூர், அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் பணியாற்றி
னார். 1993-ல் மாயனூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவத்தில் முதுநிலை
விரிவுரையாளராகப் பணியாற்றி, 2001-இல் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின்
முதல்வராகப் பணி உயர்வு பெற்றார். பின்னர் மாயனூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன
முதல்வர் ஆனார். 2003-இல் பணி நிறைவு பெற்றார்.

1983-இல் இவரின் ‘நீதி கேட்டு நெடிய பயணம்’ கவிதை நூலுக்காக பணி இடைநீக்கம் செய்யப்
பட்டார். என்றாலும், நீதிமன்றம் சென்று, அப்பணியை மீண்டும் பெற்றார். 1985-இல் நடைபெற்ற
ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்று, இருபது நாட்கள் வேலூரில் சிறைத் தண்டனை
அனுபவித்தார்.

1965-இல் இந்தி எதிர்ப்பு குறித்த இவரது முதற் கவிதை, ‘தேன்மொழி’ இதழில் வெளியானது.
‘நான் பாடுகிறேன்’ என்னும் முதற் கவிதை நூல் 1979-இல் வெளிவந்தது. இதுவரை கவிதை,
கட்டுரை, பயணம், ஒப்பாய்வு துறைகளில் 53 நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு
‘இனிய தெளிவுரை’ எழுதியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் வழங்கிய ‘தமிழ்மணி’ மற்றும் ‘மரபுப் பாவலர்’,
‘செந்தமிழ்ச் சுடரொளி’, ‘கொள்கைப் பாவலர்’, ‘திருக்குறள் நெறித் தோன்றல்’, ‘பாக்கடல்’,
‘தமிழ்ச்சுடர்’, ‘இலக்கியச் சுடர்’, ‘கவிமாமணி’, ‘இலக்கியச் செல்வர்’, ‘வரலாற்று ஆய்வுச்
செம்மல்’ உள்ளிட்ட முப்பத்தைந்தும் மேற்பட்ட மதிப்புமிகு விருதுகளைப் பெற்றுள்ளார்.

திருப்பனந்தாள் மடமும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச் சுவடித் துறையும், களம்பூர்
கோவிந்தசாமி அடிகளார் அறக்கட் டளையும் இணைந்து காசியில் நடத்திய ஐந்து மாநாடுகளிலும்
ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி யுள்ளார். இந்தியப் பல்கலைக் கழகத் தமிழா சிரியர் மன்றம்,
திண்டுக்கல் வளர் தமிழ் ஆய்வு மன்றம் போன்ற பல்வேறு அமைப்புகளின் கருத் தரங்குகளிலும்
தொடர்ந்து ஆய்வுக் கட்டுரை களை வழங்கிக் கொண்டிருக்கிறார்.