சு.வேல்முருகன்

சு.வேல்முருகன்

Profession அறிஞர்

Biography

புதுச்சேரி, அரியாங்குப்பம், கொம்யூன் தவளகுப்பம் சுப்புராயன் – செங்கேணி தம்பதியருக்கு
26.12.1946 அன்று பிறந்தார்.

1976- இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.ஏ., 1980-இல் மைசூர் பல்கலைக்
கழகத்தில் பி.எட்., 1983- இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., 1986- இல்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் மற்றும் 1994- இல் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ.,
1995- இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், 1974-இல் சென்னை தட்சிண் பாரத்
இந்திப் பிரச்சார சபையில் இந்தியில் ப்ரவீன் ஆகிய பட்டங்களைப் பெற்றார். 2014-இல் தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அன்றைய தமிழக ஆளுநர் திரு.ரோசய்யா கரங்களினால் முனைவர் பட்டம்
பெற்றார்

17.6.1968- இல் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து தவளக்குப்பம், காட்டேரிகுப்பம், இந்திரா நகர், கூனிச்சம்பட்டு, கலவை, அரியாங்
குப்பம், நெட்டப்பாக்கம், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்
பணியாற்றி 31.12.2006 அன்று பணி நிறைவு பெற்றார். தான் பணியாற்றிய பள்ளிகள்தோறும்
‘இலக்கிய மன்றம்’ தொடங்கினார். அரிக்கமேடு, திருவக்கரை பகுதிகளில் களஆய்வு
மேற்கொண்டார்.

15.01.1953-இல் திருமணம். துணைவியார்: வே.மங்கலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகன்கள்;
இரண்டு மகள்கள்.

மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், இரண்டு வரலாற்றுப் புதினங்கள், இரு சமூக புதினங்கள்,
ஒரு பாடல் தொகுதி, பன்னி ரெண்டு ஆய்வு நூல்கள் ஆகியவற்றை எழுதி யுள்ளார். இவரது
‘வாணிதாசன் பாடல் திறனாய்வு’, ‘திருவக்கரை வரலாறு’ ஆகிய இரு நூல்களும் தமிழக
அரசின் விருதையும், ‘கம்பனில் அருமறை ஆட்சி’, ‘புதுவை மண்ணில் பிரான்சுவா மார்த்தேன்’,
‘புதுவைச் சிவமும் மறுமலர்ச்சியும்’ ஆகிய மூன்று நூல்களும் புதுவை அரசின் விருதையும்
பெற்றுள்ளன.

இவரது பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் ‘பாவலர்’, ‘சொல்லாய்வுச் செல்வர்’,
‘கவிமாமணி’, ‘இலக்கியச் செம்மல்’, ‘பாவேந்தர் இலக்கியச் செம்மல்’, ‘மனித நேயச் செம்மல்’,
‘இலக்கிய ரத்னா’, ‘செந்தமிழ்ச் செம்மல்’, ‘வர லாற்று வாணர்’, ‘வரலாற்று ஆய்வுச் செம்மல்’
போன்ற பட்டங்களை வழங்கி சிறப்பித்துள்ளன. புதுவை அரசின் ‘கலைமாமணி’ (2006) உட்பட
பல்வேறு பெருமைமிகு விருதுகளையும் பெற்றுள்ளார்.

பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றி
வருகிறார். புதுவை மாநிலத்தின் அப்பா துரையாராகப் – பன்மொழிப் புலவராக இவரை நாம்
அடையாளப்படுத்தலாம்.