| Profession | அறிஞர் |
|---|
திருவாரூரில் 12.02.1941 – இல் பிறந்தார். புலவர், பி.ஓ.எல்., எம்.ஏ. (தமிழ்),
எம்.ஏ. (வரலாறு), பிஎச்.டி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவருடைய முனைவர்
பட்டத்திற்கான தலைப்பு ‘வரலாற்று நாவல்கள் வரலாற்று செய்திகள்’ என்பதாகும்.
சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும்
பணியாற்றிய பின், சென்னை தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.
இவரது நெறியாள்கையில் 20 மாணவர்கள் எம்.ஃபில் பட்டமும், 8 மாணவர்கள் முனைவர் பட்டமும்
பெற்றனர்.
இந்திய அளவில் புதுதில்லி, கல்கத்தா, மும்பை, பெங்களூர், செகந்திராபாத் தமிழ்ச் சங்கங்
களிலும், உலக அளவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும்
சொற் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
இவரது நூல்கள் ‘வரலாற்று நாவல்கள்’, ‘மகரந்தச் சேர்க்கை’, ‘மணியோசை’, ‘பற்றி எரியும்
பனிக்கட்டிகள்’, ‘சிறகு முளைத்த சிந்தனைகள்’, ‘பட்டுத் தெரித்த பார்வைகள்’, மணக்க
மறுக்கும் மொட்டுகள், பாரதியின் படைப்பில் விஸ்வரூபம் ஆகியனவாகும்.
1981 – மதுரை ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டுப் பட்டிமன்றத்தில் வாதிட்டுள்ளார். 1986-
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘அறிவியல்
தமிழ்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையும், 1994 – தஞ்சையில் நடந்த எட்டா வது உலகத்
தமிழ் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரையும் வழங்கியுள்ளார்.
காரைக்குடி திருக்குறள் அமைப்பு நடத்திய நாடகப் போட்டியில் இவரது ‘அறிவாலயம்’ நாடகம்
முதல் பரிசாக வெள்ளிக்கோப்பை, பேராசிரியர் சீனிவாசராகவன் நூல்கள் ஆராய்ச்சிக்காக இரண்டாம்
பரிசாகத் தங்கப்பதக்கம், வாசுகிப் பத்திரிகை நடத்திய பயணக் கட்டுரைப் போட்டியில் முதல்
பரிசாக தங்க மோதிரம், ஆனந்த விகடன் நடத்திய திறனாய்வுப் போட்டியில் ரொக்கப்பரிசு
ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை எறையூர் இறைப்பணி மன்றத்தில் நிகழ்த்திய மகாபாரதத் தொடர் சொற்பொழிவுக்காக
‘வில்லிபாரதச் செம்மல்’ (1979), திருக்கழுக்குன்றத் தமிழியக்கத்தில் ஆற்றிய வார
சொற்பொழிவுக்காக ‘இலக்கியப் பேரொளி’ (1980), அருள்மிகு வீரபத்திரசாமி கோயிலில்
நிகழ்த்திய மகாபாரதத் தொடர் சொற்பொழிவுக்காக ‘ஆன்மிகச் செம்மல்’ (1981), திருவாரூர்
காமாட்சியம்மன் கோயிலில் ஆற்றிய இராமாயணத் தொடர் சொற்பொழிவுக்காக ‘அருள்மொழிச் செம்மல்’
(1984), கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயத்தில் டத்தோ ஸ்ரீ சாமி வேல் தலைமையில்
வழங்கப்பட்ட ‘முத்தமிழ் வித்தகர்’ (1992), பொற்றாமரை அமைப்பு வழங்கிய ‘பாரதி இலக்கியச்
செல்வர்’ (2009) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.