பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன்

Profession அறிஞர்

Biography

தஞ்சை கும்பகோணம், நாகேஸ்வரன் கோயில் சன்னதி தெருவில் வெங்கடாசலம் – செல்லம்மாள்
தம்பதியருக்கு 06.04.1943-இல் பிறந்தார். குடும்பச்சூழலின் காரணமாக சிறிய தந்தையின்
அரவணைப்பில் வளர்ந்தார்.

திண்ணைப்பள்ளி, தாதன் பேட்டைப் பழூர், திருவிடை மருதூர் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில்
கல்வியைப் பயின்றார். கும்பகோணம் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டமும்,காரைக்குடி
கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.

தஞ்சை பூண்டி புட்பம் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர், வேலூர் ஊரிசு கல்லூரி,
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி, திருச்சி பெரியார் அரசு கல்லூரி, கும்பகோணம் அரசு
கலைக் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்லூரி, தமிழ்ப்
பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார். பணி நிறைவிற்கு முன்பு இரண்டாண்டுகள் தஞ்சைப்
பல்கலைக் கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றினார்.

திருச்சி பெரியார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் 17.03.1972-இல் இவருக்குத்
திருமணம் நடைபெற்றது. துனைவி: உமாதேவி. இவர்களுக்கு அகிலா என்றொரு மகள், இராம்
பிரபு என்றொரு மகன்.

இவர் எழுதிள்ள புத்தகங்கள்: ‘சங்க இலக்கியத்தில் புறப்பொருள்’, ‘சங்க இலக்கியத்தில் சமூக
அமைப்புகள்’, ‘சங்க இலக்கிய ஆய்வுகளின் மதிப்பீடு’, ‘சங்க இலக்கியக் கொள்கை’, ‘வாகைத்
திணை’, ‘நற்றிணை உரை’ ஆகிய சங்க இலக்கியம் தொடர்பான நூல்களையும், சிற்றிலக்கியங்களில்
ஒன்றான கலம்பகத்தைப் பற்றி ‘கலம்பகத் திறன்’ என்றொரு நூலையும், ‘தினமும் ஒரு
திருமந்திரம்’, ‘மேன்மைகொள் சைவ நீதி’, ‘அருணகிரியார்’, ‘தினமும் ஒரு தேவாரம்’,
‘நாச்சியார் திருமொழி’, ‘சுவாமிமலை தலவரலாறு’ ஆகிய பக்தி நூல் களையும், ‘கௌதம
புத்தர்’ எனும் நாடக நூலை யும், சாகித்ய அகாதமிக்காக ‘கா.அப்பாதுரையார்’ எனும்
வாழ்க்கை வரலாற்று நூலையும், ‘நிலாக் கால நினைவுகள்’ , ‘சாட்டை வீச்சு’, ‘வலி இலக்
கியம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ‘துண்டு’ எனும் சிறுகதைத் தொகுதியையும்,
‘நெருஞ்சி’ எனும் நாவலையும, ‘காவிரி தமிழ கத்தின் உயிரோட்டம்’ எனும் காவிரி ஆறின்
பெருமை பேசும் நூலையும், ‘வண்டார் குழலி’ எனும் செய்யுள் காப்பியம் உட்பட 64 நூல்களை
எழுதியுள்ளார்.

திருக்குறளை தனது வாழ்க்கை நெறியாகக் கொண்ட கு.வெ.பா., ஜி.யு.போப் திருக்குறள் ஆங்
கிலப் பதிப்பை தன் சொந்த செலவில் தனது மெய்யுரையுடன் மீண்டும் பதிப்பித்துள்ளார் மூன்று
நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வு மாநாடுகள், தொடர்ச் சொற்பொழிவுகள், அறக்கட்டளைப்
பொழிவுகள், உரைகள், பயிலரங்குகள், சிறப்பு சொற் பொழிவுகள், வானொலி தொலைக்காட்சி
உரைகள், அயல்நாடுகளில் தொடர் சொற் பொழிவுகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள்
ஆகியவற்றில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.