மருத்துவத் தமிழறிஞர் சு.நரேந்திரன்

மருத்துவத் தமிழறிஞர் சு.நரேந்திரன்

Profession அறிஞர்

Biography

புதுக்கோட்டையில் பழ.சுந்தரேசன்-பத்மாசினி தம்பதியருக்கு 09.11.1942 அன்று பிறந்தார்.
தந்தையார் மலேசியா ரப்பர் தோட்ட மேலாளராகப் பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போருக்குப்
பிறகு புதுக் கோட்டைக்கு வந்து பல்வேறு பத்திரிகைககளில் நிருபராகவும், முகவராகவும்
இருந்தவர். இவரது அண்ணன் சு.ஜெக தீசன், தினத்தந்தியில் ஆசிரிய ராகப் பணியாற்றி பிறகு
தமிழக அரசின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சு.நரேந்திரன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 1968-இல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை அறுவை சிகிச்சை படிப்பை 1979-இல்
முடித்தார். பின்னர் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தில் ‘கல்லீரல் நோய்’
குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்

1970-இல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சை துணை மருத்துவராக பணி
ஏற்றவர், விரிவுரையாளராகவும், உதவிப் பேரா சிரியராகவும், ரீடராகவும் பணியாற்றி,
பின்னர் அக்கல்லூரியிலேயே அறுவைச் சிகிச்சை பேராசிரியராகவும் பணியாற்றி 2000-இல் பணி
நிறைவு பெற்றார். பணி நிறைவுக்குப் பின் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக்
கல்லூரியில் சிறப்பு நிலை பேராசிரியராகவும், அண்ணாமலை இராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரியிலும், திருச்சி பெரியார் மருந்தியல் பெண்கள் கல்லூரியிலும் வருகைதரு
பேராசிரியராக பணியாற்றுகிறார். பல்வேறு மருத்துவ ஆய்வரங்குகளில் 50-க்கும் மேற்பட்ட
கட்டுரைகளை வாசித்திருக்கிறார். அவற்றில் 32 கட்டுரைகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி
இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது துணைவியார் விஜயலட்சுமி திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர். எம்.ஏ. படித் தவர்.
இவர்களின் திருமணம் 27.08.1972-இல் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு வாரிசுகளாக ஒரு
மகள்; ஒரு மகன்.

மருத்துவர் சு.நரேந்திரன் எழுதிய ‘பொது அறுவை மருத்துவம்’ (1986), ‘வயிற்று
நோய்களும் அவற்றின் மருத்துவமும்’ (1991) ஆகிய இரு நூல் களும் சிறந்த நூலுக்கான தமிழக
அரசின் முதல் பரிசுகளைப் பெற்றன. இதுவரை 24 மருத்துவ நூற்களையும், தமிழ்வழிக் கல்வி
கானல் நீரா?, கிறிஸ்தவமும் அறிவியலும், தமிழில் மருத்துவ இதழ்கள் ஆகிய ஆய்வு
நூல்களையும் எழுதியுள்ளார்.

1985-இல் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ‘துணை செவிலியர் கையேடு’, 2004-இல் உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ‘தென் னிந்திய மருத்துவ வரலாறு’ இவ்விரண்டு
நூல்களும் இவர் நுண்ணாய்வு செய்தவை.

ஆறாவது, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு களிலும், உலக செம்மொழி மாநாட்டிலும் ஆய்வுக்
கட்டுரை வாசித்திருக்கிறார். பல்வேறு அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.