எழுத்தாளர் நீல.பத்மநாபன்

எழுத்தாளர் நீல.பத்மநாபன்

Profession அறிஞர்

Biography

கேரள திருவனந்தபுரத்தில், நீலகண்ட பிள்ளை -ஜானகி அம்மாள் தம்பதியருக்கு 26.04.1938
அன்று பிறந்தார். இவரது துணைவியார் கிருஷ்ணம்மாள். ஜானகி, உமா, நீலகண்டன், கவிதா என
நான்கு குழந்தைகள்.

இளநிலை இயற்பியல், மின் பொறியியல் பட்டங்களைப் பெற்றவர். 1963- இல் துணை முதன்மைப்
பொறியாளராகப் பணியில் சேர்ந்து பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளார்.

பதிமூன்று வயதில் தன் தெருவில் வசித்த சிறுவர்களின் துணையுடன் ஒரு சிறுபத்திரிகையை
நடத்தியுள்ளார். அதில் சிறுவர் சிறுமியரின் கவிதைகள். பாட்டுகள், நாடகப் பிரதிகள்
வெளிவந்துள்ளன.

சிறுவயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் இருபது நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுதிகள்,
நான்கு கவிதைத் தொகுதிகள், ஒன்பது கட்டுரைத் தொகுதிகள் ஆகியவற்றின் ஆசிரியர்.

தன்னைப் பாதித்த, தான் நேசித்த, தான் அனுபவித்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை
இவரது எழுத்துகள். இலக்கிய வட்டங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கலை இலக்கிய
அமைப்புகள், வானொலி நிலையம் போன்றவற்றில் உரையாற்றுவதற்காக ஏராளமான செய்திகளைத்
திரட்டும் இயல்புடை யவர். அத்தகையத் தேடல்களைத் தன் படைப்பிற்காகவும் பயன்படுத்தி
வருகிறார்.

இவரது படைப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ரஷ்யன் மொழிகளிலும் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளன.

தனது தமிழ், மலையாள மொழிப் புலமையினால் பல நூல்களை தமிழிலிருந்து மலையாளத்திற்கும்,
மலையாளத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இம்மொழி பெயர்ப்புகள்
மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

அய்யப்பப் பணிக்கரின் மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அதற்காக தேசிய
விருது பெற்றுள்ளார். இவரது ‘மோகம் முப்பது ஆண்டு’, ‘பெருமை’ ஆகிய சிறு கதைகள் ரஷ்ய
மொழியில் வெளிவந்துள்ளன.

இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்களில் வெளி வந்தவை சேகரிக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழி
பெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

1998-2002 இல் சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராகப்
பணியாற்றியுள்ளார்.

இலை உதிர் காலம் எனும் புதினத்திற்காக ‘சாகித்ய அகாதமி’ விருதைப் பெற்றுள்ள இவர்,
தேரோடும் வீதி நாவலுக்காக 1987-இல் ‘தமிழ் வளர்ச்சிக் கழக விருது’ம், அதே ஆண்டு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக ‘தமிழ் அன்னைப் பரிசு’ம், 1994-இல் ‘கூண்டினுள்
பட்சிகளுக்கு’ நூலுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசும் பெற் றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.