அறிஞர்

  • பொன்.சௌரிராசன்

    நாகை சிக்கல் கிராமத்தில் நாராயண பொன்னையா -ஜெகதாம்பாள் தம்பதியருக்கு 06.04.1932 அன்று பிறந்தார். இவர் ஒன்றரை வயது குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்தார். அதன்பின் தாயின் அன்பிலும் அரவ ணைப்பிலும், கூட்டுக் குடும்பச் சூழலிலும் வளர்ந்தார். நாகப்பட்டினம் தேசிய உயர் நிலைப் பள்ளியில் கல்வியை முடித்த இவர், சிதம்பரம் கீழ மூங்கிலடி காந்தி ஆசிரமத்தில் காந்திய ஆதாரக் கல்வி ஆசிரியப் பயிற்சியை 1953-இல் நிறைவு செய்தார். 1955-1960இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மு.வ. அவர்களின்…

  • பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்

    கன்னியாகுமரி கேசவன்புதூத்தில் 19.8.1929 அன்று பிறந்தார். தந்தையார் சண்முகம் பிள்ளை. தாயார் அருணாசலத்தம்மாள். கேரளப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளநிலைப் பட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம்பெற்று, கேரள பல்கலைக்கழகத்தில் பேரா.வ.ஐ.சுப்பிரமணியம் வழி காட்டுதலில் ‘பதிற்றுப் பத்து மொழிக்கு ஒரு விளக்கமுறை இலக்கணம்’ எழுதி முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்கா இந்தியானா பல்கலைக்கழகம் சென்று அங்கு புதிதாக வளர்ந்த மாற்றிலக்கண மொழியியலில் இன்னொரு முனைவர் பட்டம் பெற்றார். 1957-இல் நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் தமிழ்…

  • வே.தி.செல்லம்

    குமரி மாவட்டம், இளை யான்விளையில் வேலாயுதப் பெருமாள்- பாக்கியமுத்து இணையருக்கு 23.11.1929 -இல் பிறந்தார். 1950-இல் பாளையங் கோட்டை தூய சவேரியர் கல் லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்று, வருவாய் ஆய்வாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். 1958-இல் திருமணம் நடை பெற்றது. துணைவி: இலட்சுமி தங்கம். 3 மகள்கள், 1 மகன். 1958-இல் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஆரல் வாய்மொழி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1960-இல் புதுக் கோட்டை ஆசிரியர்…

  • இரணியல் கலைத்தோழன்

    குமரி இரணியல் மாங்குழியில் சா.ஆசீர்வாதம் -சாராள் தம்பதியருக்கு 03.01. 1930-இல் பிறந்தார். இயற்பெயர் சாமுவேல். இரணியல் உயர் நிலைப் பள்ளியில் படிக்கையில் நாடகம், இசை ஆகியவற்றில் இவரது ஈடுபாட்டை அறிந்த ஆசிரியர் கணபதி, “நீ கலைக்குத் தோழன்டா” என்று பாராட்டினார். அன்றிலிருந்து ‘இரணியல் கலைத்தோழன்’ எனப் புனைப் பெயர் வைத்துக்கொண்டார். 1965-இல் தாழக்குடி கிரேஸ் சுந்தரிபாய்-ஐ மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள், நான்கு மகன்கள். 1955-இல் குறும்பனை புனித இன்னாசியார் நடுநிலைப் பள்ளி யில் ஆசிரியர் பணியில்…

  • இரா.இளங்குமரனார்

    இராமநாதபுரம் வாழவந்தான்புரத்தில் வாழ வந்தம்மை – இராமு இணை யர்க்கு 30.01.1930 அன்று பிறந்தார். ஆங்கிலேயர் நடத்திய பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து, கோவில்பட்டியில் 1944-இல் ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து 1946-இல் நிறைவு செய்தார். 1946-இல் தாம் ஆசிரியராகப் பயின்ற பள்ளியிலேயே பணியில் சேர்ந்தார். 11.09.1946-இல், தம் 16ஆம் வயதில், செல்வம் அம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இன்று வரை 4500-த்துக்கும் மேற்பட்ட தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கும் இளங்குமரனார் திருமணத்தை…

  • தமிழாய்வாளர் தி.முருகரத்தனம்

    சேலம் மாவட்டம், திருச்செங்கோடு வை.முருகேசன் -பாவாய் அம்மாளுக்கு 02.10. 1930 அன்று பிறந்தார். இவரது தந்தை ஆவணக் களரியில் பணியாற்றியதால் அவரது பணி இடமாற்றத்திற்கேற்ப தருமபுரி, எடப்பாடி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் இவர் கல்வி பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1953-இல் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்றார். சேலம் நகராட்சி கல்லூரியில் 1956-இல் தமிழாசிரியரானார். ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் பணியிடை விடுப்பு பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘ஆண்டாள் பாசுரங்கள் ஒரு மொழியியல் நோக்கு’ என்ற…

  • டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அரசியல்

    தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியாவாழ் தமிழர். இவரது தந்தை வெங்கடாசலம் மலேசியா சென்று தோட்டக் கணக்குப் பிள்ளை வேலை செய்தார். தாயார் சுப்பமாள். இத்தம்பதியருக்கு கோலா சிலாங்கூர், இராஜா மூசா தோட்டத்தில் 4.10.1926 அன்று மாணிக்கவாசகம் பிறந்தார். ஆரம்பக் கல்வியை இராஜா மூசா தமிழ்ப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை சிரம் பான் செயிண்ட் பால் பள்ளியிலும் பயின்றார். கிள்ளான் மேல்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து ஆங்கிலம் கற்றார். 1941-இல் ஜப்பானியர் இந்நாட்டிற்கு வந்ததும் டான்ஸ்ரீ ஆங்கிலத்தை நிறுத்திவிட்டு…

  • ச.வே.சு

    திருநெல்வேலி தென்காசி வீ.கே.புதூரில் (வீரகேரளம் புதூர்) சு.சண்முக வேலாயுதம் -ச.இராமலட்சுமி தம்பதியருக்கு 31.12.1929-இல் பிறந்தார். 1950-53இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்பு வகுப்புப் (பி.ஏ. ஹானர்ஸ்) பயின்று, வ.அய்.சுப்பிரமணியன் நெறியாள்கையில் முனைவர் பட்டம் பெற்றார். 1954-இல் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள். 1956-இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாகப் பணியேற்றார். 1961-இல் ‘சிலப்பதிகாரம் விளக்க வியல் இலக்கணம்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முது முனைவர் பட்டம் பெற்றார். 1966-இல் கேரளப் பல்கலைக்கழகத்…

  • புலவர் நா.தியாகராஜன்

    பூம்புகார், மேலப்பெரும் பள்ளம் சி. நாகமுத்து — உதயம் தம்பதியருக்கு 16.12.1928 அன்று பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாடகம்,விளையாட்டு, கட்டுரை போன்ற போட்டிகளில் பங் கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருக்கிறது. பின்னாளில் இவர் எடுத்த இயற்கைக் காட்சிகள், இறைவனின் பல்வேறு செப்புத் திரு மேனிகள், கோயில்களின் கலை அழகுமிக்க புகைப்படங்கள் ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘கலைக்கதிர்’ போன்ற இதழ்களி லும், தீபாவளி மலர், பொங்கல் மலர் போன்றவற்றிலும் வெளி வந்துள்ளன. மாணவப் பருவத்திலேயே…

  • பேரா.தமிழண்ணல்

    சிவகங்கை நெற்குப்பை கிராமத்தில் பார்வதி ஆச்சி – தெ.சு.மு.முத்துராமன் செட்டியார் தம்பதியருக்கு 12.08.1928 அன்று பிறந்தார். இயற்பெயர்: இராம. பெரியகருப்பன். செல்லப்பெயர்: சிங்காரம். இவரை வளர்த்தோர்: கலியாணி ஆச்சி – அரு.மு. இராமசாமிச் செட்டியார் தம்பதியினர். நெற்குப்பை திண்ணைப் பள்ளியிலும், பள்ளத்தூர் செட்டியார் உயர்நிலைப் பள்ளி யிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். சிவபுரி சன்மார்க்கசபை கணேசா செந்தமிழ்க்கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் வித்துவான் படிப்பை முடித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப் பையும், பொருளியலில் இளங்…