அறிஞர்

  • தனிநாயகம்அடிகள்

    இலங்கை கானலம், காவலூரில் 2.8.1913 அன்று தனிநாயகம் அடிகள் பிறந்தார். தந்தை ஹென்றி தனிஸ்லாஸ் கணபதி பிள்ளை. தாய் சிசில் இராசம்மாபஸ்தியாம் பிள்ளை. 1918-இல் தொடங்கி ஆரம்பக்கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் யாழ்ப்பாணத்தில் முடித்தார். 1930- 1934 இல் கொழும்பில் செமினரிக் கல்வியையும், 1934- 1939 இல் ரோம் உர்பன் பல்கலைக் கழகக் கிறித்துவக் குருமார் கல்வியையும் கற்றார். ‘ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். 1940- 1945 இல் கேரளாவில் மறைப் பணி மேற்கொண்டார். 1940 —…

  • பேராசிரியர் அ.மு. பரம சிவானந்தம்

    செங்கல்பட்டு மாவட்டம், அங்கம்பாக்கம் முத்தியப்பன் -வள்ளியம்மை தம்பதியருக்கு 5.07.1914 அன்று பிறந்தார். அங்கம்பாக்கம், வாலாசாபாத் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1928-இல் இவர்தம் 14-ஆம் வயதில் தந்தை இறந்தார். 17-ஆம் வயதில் அன்பு காட்டி வளர்த்த பாட்டியும் இறந்தார். மறு மாதமே அதே தெருவில் வசித்த ஒருவரை பொருந்தா மணம் செய்து வைத்தனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வித்துவான், பி.ஓ.எல். பட்டம் பெற்று, காஞ்சி ஆந்திரசன் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார். சந்திராமணி-யை இரண்டாவது மணம் புரிந்தார். வள்ளியம்மை, மங்கையர்க்கரசி…

  • க.வெள்ளைவாரணனார்

    தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநாகேச்சுரத்தில் கந்தசாமி முதலியார்- அமிர்தம் தம்பதியருக்கு 14.01.1917 அன்று பிறந்தார். 1928-இல் திருப்பெருந்துறையிலுள்ள மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் சேர்ந்தார். அங்கு தமிழிலக்கியம், இசை முதலியவற்றைக் கற்றார். 1930-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, அங்கேயே ஆய்வு மாணவராகச் சேர்ந்து பயின்றார். சிறு வயதிலேயே ‘தொல் காப்பியம்- நன்னூல் எழுத்த திகாரம்’ என்ற ஒப்பீட்டு நூலை (1935- 37) எழுதி முடித்தார். அந்நூல் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழில்’ 1941…

  • பேராசிரியர் ப.சு.மணியம்

    கொங்குப் பகுதியில், பல்லடம் வட்டத்திலுள்ள பருவாயூரில் வசித்த பழனியப்ப ஆசிரியருக்கும் பழனியம்மாளுக்கும் 01.02.1917-இல் பிறந்தார். இயற்பெயர் ப.சுப்பிரமணியம். சூலூர் காங்காயம்பாளை யத்தில் ஆரம்பக் கல்வியையும், சிட்டி முனிசிபல் பள்ளியில் பள்ளிக்கல்வியையும் பயின்றார். 1936- இல் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்ததும், மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் (இக்கால அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) புலவர் படிப்பில் 1947-இல் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1941-இல் பெரியநாயக்கன் பாளையம் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். கோவை, மகளிர் கல்வியல் கல்லூரியில் ஐந்து…

  • அ.சிதம்பரநாதன்

    கும்பகோணம் அமிர்தலிங்கம்-தையல்நாயகி இணையர்க்கு 3.4.1907 அன்று பிறந்தார். குடந்தை ஆடவர் கல்லூரியில் பி.ஏ. பயின்று தமிழில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, ‘ஜி.யூ. போப், பிராங்க்ளின்’ தங்கப் பதக்கம் பெற்றார். 1928-ல் சென்னைப் பல்கலைக்கழக எழுத்தராகவும், பிறகு தலைமைச் செயலகத்தில் எழுத்தராகவும் பணியாற்றினார். துறைத் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னை அரசு முகமதியக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். 3 ஆண்டு களுக்குப் பிறகு பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றத்…

  • புலவர் கா.அப்பாத்துரை

    கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் காசி நாதப்பிள்ளை – முத்துலட்சுமி இணையருக்கு 24.06.1907-இல் பிறந்தார். இயற்பெயர் நல்லசிவம். பள்ளிக் கல்வியை ஆரல்வாய்மொழியிலும், நாகர்கோயிலிலும் கற்றார். கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்தில் படித்து 1922-இல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியில் ‘விசாரத்’ தேர்வில் தேர்ச்சி பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எ.டி. (எம்.எட்) பட்டம் பெற்றார். அப்பாதுரை நாற்பது மொழிகளை அறிந்தவர். அதனால் தான் ‘பன்மொழிப் புலவர்’ என போற்றப்படுகிறார். அவற்றுள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, வடமொழி…

  • பூ.ஆலாலசுந்தரனார்

    5.11.1907 அன்று வேலு செட்டியார் – இராசம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். தந்தையார் தனது ஆசிரியர் மீது கொண்ட பற்றினால் அவரது பெயரை தனது மகனுக்குச் சூட்டினார். சென்னை, முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்ற இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஆனர், எம்.ஏ. பட்டங்களையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.லிட் பட்டத்தையும் பெற்றார். 1937-ல் தனது மாமன் மகள் நவநீதத்தைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராய்ச்சி மாணவர்கள்…

  • வா.சு.கோமதி சங்கர ஐயர்

    திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 23.08.1908 அன்று ‘பல்லவி மேதை’ சுப்பையா பாகவதருக்கும் முத்துலட்சுமி அம்மையாருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவரின் பள்ளி¢க்கல்விப் பயிற்சி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே. தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிப்பயிற்சி களையும், கிரந்த எழுத்துப் பயிற்சியையும் இளமையிலேயே பெற்றிருந்தார்.7-ஆவது வயதில் தந்தையிடம் இசைப் பயிற்சியைத் தொடங்கினார். 8-ஆவது வயதில் காரைக்குடி சகோதரர்களாகிய சாம்பசிவ ஐயர், சுப்பராம ஐயரிடம் இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார். மூன்று வருட கால குருகுல வாசத்தில் வீணைப் பயிற்சி…

  • தண்டபாணி தேசிகர்

    தஞ்சைமாவட்டம், திருச்செங்காட்டங்குடியில், முத்தையா தேசிகர் – பாப்பம்மாள் தம்பதியருக்கு 26.08.1908 அன்று பிறந்தார். தந்தையாரிடம் தேவாரம், திருவாசகம், முதலியவற்றை பண் முறையோடு கற்றார். திருமருகல் ‘செட்டிப் பெண் திருவிழா’வுக்கு தன் தந்தையாருடன் கச்சேரிக்குச் சென்ற சிறுவன் தண்டபாணிக்கு அங்கு பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரது இனிமையான பாடலைக் கேட்டு வைரவன் செட்டியார் ஐந்து ரூபாய் கொடுத்துப் பாராட்டினார். இதுதான் இவரது முதல் கச்சேரி. முதல் வருமானம் ஐந்து ரூபாய். திருமருகல் நாதஸ்வர வித்வான் சடையப்பப் பிள்ளையிடம் சரளி,…

  • மூதறிஞர் அடிகளாசிரியர்

    விழுப்புரம் மாவட்டம், கூகையூரில், பெரியசாமி அய்யர் – குங்கும அம்மாள் தம்பதியருக்கு 17.4.1910 அன்று பிறந்தார். இயற்பெயர்: குருசாமி அய்யர். பெரியசாமி அய்யர் தன் மகன் படிப்பதற்காகவே தனது வீட்டில் தொடங்கிய பள்ளியில் ஐவருடன் பயின்றனர். இவரது ஏழாம் வயதில் தந்தையார் காலமானார். அதன்பின் அவ்வூரிலுள்ள தொடக்கப் பள்ளிக்குச் சென்று மூன்றாம் வகுப்பு வரையே படித்தார். அதன்பின்தாய்மாமன் ஊரான நெடுவாசலுக்குச் சென்றனர். 25 வயது நிரம்பியவர்கள் புலவர் பட்டம் பெறலாம் என்ற அக்கால விதிப்படி 25 வயது…