ரா.பி.சேதுப்பிள்ளை
திருநெல்வேலிச் சீமையில் கார்காத்த வேளாளர் மரபில் தோன்றிய பிறவிப்பெருமாள் பிள்ளைக்கும் சொர்ணத்தம் மாளுக்கும் 02.03.1886 அன்று பிறந்தார். இவருக்கு முன் பிறந்த ஒன்பது ஆண் குழந்தைகளும் ஒவ்வொன்றாக இறக்க, பத்தாவதாகப் பிறந்த பெண் குழந்தை மட்டும் எஞ்சியது. ஆண் குழந்தை வேண்டி ஐந்தாண்டு சேதுக் கடலாடி இராமேஸ்வரப் பெருமானை வழிபட்டு பிறந்ததால் இவருக்கு ‘சேது’ எனப் பெயரிட்டனர். சேதுவுக்கு ஐந்து வயது நிரம்பிய போது அவரது சகோதரியும் இறந்தார். 1901-இல் ஐந்தாவது வயதில் உள்ளூரிலிருந்த திண்ணைப் பள்ளியில்…
