அ.சிதம்பரநாதன்
கும்பகோணம் அமிர்தலிங்கம்-தையல்நாயகி இணையர்க்கு 3.4.1907 அன்று பிறந்தார். குடந்தை ஆடவர் கல்லூரியில் பி.ஏ. பயின்று தமிழில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, ‘ஜி.யூ. போப், பிராங்க்ளின்’ தங்கப் பதக்கம் பெற்றார். 1928-ல் சென்னைப் பல்கலைக்கழக எழுத்தராகவும், பிறகு தலைமைச் செயலகத்தில் எழுத்தராகவும் பணியாற்றினார். துறைத் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னை அரசு முகமதியக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். 3 ஆண்டு களுக்குப் பிறகு பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றத்…
