| Profession | அறிஞர் |
|---|
திருச்சி பெரியண்ணப்பிள்ளை – சுப்பம்மாள் தம்பதியருக்கு 16-ஆவது பிள்ளையாக 11.11.1899
அன்று பிறந்தார்.
1904-இல் தனது ஐந்தாவது வயதில் மருதமுத்து கோனாரின் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து பத்து
வயது வரை பயின்றார். அப்போது மொழிக் கல்வியையும், இலக்கியக் கல்வியையும் கற்றார்.
1915-இல் தமது 16-வது வயதில் திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையில் உறுப்பினராகி
தமது 18-ஆவது வயதில் அதன் துணை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார்.
1920-இல் தனது 21-ஆவது வயதில் ‘நீதிக் கட்சி’யில் உறுப்பினரானார். 1938-இல் சென்னை
மாநில நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். 1925-இல் பெரியாருடன் இணைந்து
‘சுயமரியாதை இயக்க’த்தில் பணியாற்றினார். இவ்வியக்கத்தின் முதல் செயலாளராக பொறுப்
பேற்றார்.
தாழ்த்தப்பட்டோரை கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் ‘கோயில் நுழைவு போராட்டத்தை
12.06.1928-இல் திருச்சி மலைக்கோட்டை யிலும், 12.08.1928-இல் திருச்சி திருவானைக்
கோவிலிலும் தலைமை ஏற்று நடத்தினார். 1937-இல் தீவிரமடைந்த இந்தி எதிர்ப்புப் போராட்
டத்தை முன்னின்று நடத்தினார்
மறைமலையடிகளார் போன்ற தமிழறிஞர்களின் தொடர்பினால், தமிழ்ச் சைவம் என்பது இந்துமதக்
கோட்பாடுகளிலிருந்து மாறு பட்ட தமிழரின் தனிச்சமயம் என்ற உணர்வைப் பெற்றார்.
1938-இல் கடற்கரையில் பெரியார் தலைமையில் நடந்த நீதிக்கட்சி கூட்டத்தில் “தமிழ்நாடு
தமிழருக்கே” என்ற முதல் உரிமைக்குரலை எழுப்பினார். 1947-இல் ‘தமிழர் கழகம்’ என்றொரு
அரசியல் அமைப்பைத் தொடங்கினார். மூவேந்தர்களின் வில், கயல், புலி சின்னம் பொறித்த வெள்ளை
நிறக்கொடியைப் பறக்கவிட்டார். ‘தமிழர் நாடு’ என்றொரு இதழையும் தொடங்கினார். தமிழ்ப்
பயிற்றுமொழி, தமிழிசை, தமிழ் மருத்துவம், தமிழ் ஆண்டுக் கணக்கு, தமிழ் விழாக்கள்,
தமிழில் ஊர்ப்பெயர்கள், தமிழில் கடைப் பெயர்கள் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மூச்சுத்
திணறலால் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்த கி.ஆ.பெ.வி.யைக் கலைஞர் மு.கருணாநிதி
சந்தித்தபோது, “நாடு இருக்கிறது, மொழி இருக்கிறது, நீங்கள் இருக் கிறீர்கள், பார்த்துக்
கொள்ளுங்கள்” என்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் 18.12.1994-இல் சந்தித்தபோது
“தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழி ஆக்கிவிட்டால் நான் நிம்மதியாகச் சாவேன். அதற்கு
நடவடிக்கை எடுங்கள்” என்றார். மறுநாள் அதிகாலை காலமானார்.
கி.ஆ.பெ. விசுவநாதம் 25 நூல்களை எழுதியுள்ளார். அனைத்து நூல்களும் பாரி
நிலையத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து நூல்களையும் ஒரே தொகுதியாக ‘காவ்யா’
பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
.