| Profession | அறிஞர் |
|---|
ஆரணி அருகிலுள்ள மேல் புதுப்பாக்கம், அண்ணாமலை -அலமேலு தம்பதியருக்கு 27.01.1890-இல்
பிறந்தார்.
8-ம் வகுப்புவரையே படித்த இவர், தமது 16-ம் வயதில் துறவு பூண்டார். எனினும் இவரை
ஆலயங்களுக்குள் அனுமதிக்கவில்லை. எனவே, காஞ்சி நரசிங்கபுரம் தட்சிணாசாமி சுவாமியிடம்
சந்நியாசம் பெற்று, சென்னை வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் ஞானம்
பெற்று, தன் பெயரை ‘சகஜாநந்தம்’ எனப் மாற்றிக்கொண்டார்.
1910-இல் ‘நந்தன்’ எனும் பெயரில் மத சேவையைத் தொடங்கினார். ‘நந்தனார் மடம்’
உருவாக்கினார். ‘நந்தனார் ஆரம்பப் பள்ளி’யைத் தொடங்கினார். 1916 முதல் மலேசியா, பர்மா,
சிங்கப்பூர், இரங்கூன் சென்று ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார்.
1919-இல் வைசிராய் இராஜாஜி, சிதம்பரம் வந்தபோது நந்தனார் கல்விக் கழகத்திற்கு 51 ஏக்கர்
98 சென்ட் நிலத்தைப் பட்டா செய்து கொடுத்தார். 1923-இல் சுவாமி ஆண்கள் பள்ளி உயர் தொடக்கப்
பள்ளியாக மாற்றப்பட்டது.
1928 தொடங்கி சில ஆண்டுகள் சென்னை மாகாண லெஜிஸ்லேடிவ் கவுன்சில் மெம்பராகவும், பின்பு
எம்.எல்.ஏ வாகவும் பணியாற்றி னார். 1929-இல் அண்ணாமலைச் செட்டியார் அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் (மீனாட்சி கல்லூரி) தொடங்க உதவினார்.
1930 முதலே பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே நந்தனார் பட ஊர்வலத்தை தனித்தே நடத்தி
வந்தார். பல நூல்களை எழுதியதுடன் ‘பரஞ்சோதி’ என்னும் இதழையும் நடத்தி வந்தார்.
1930-இல் டாக்டர் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றபோது
ஆதரவு வழங்கினார். பூனா ஒப்பந்தப்படி தனித்தொகுதி முறையை ஆதரித்து பிரச்சாரம்
செய்தார். 1934-இல் காந்தி இவரது ஓமக்குளம் நந்தனார் மடத்தில் தங்கினார்.
1939இல் நந்தனார் கல்விக்கழகத்தை அரசிடம் ஒப்படைத்தார். 1940-41 இல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத் தமிழறிஞர்களில் ஒருவராகி தமிழ்ச் சொற்பொழிவாளராகவும் விரிவுரையா
ளராகவும் செயற்பட்டார்.
1947-இல் சிதம்பரம் நடராஜர், தில்லையம்மன் கோயில்களுக்குள் ஆதிதிராவிடர்களை அழைத்துச்
சென்றார். 1952-இல் சென்னை (தமிழ்நாடு) காங்கிரஸ் அரிஜன லீக் மாநாட்டிற்குத் தலைமை
வகித்தார். 1954-இல் நந்தனார் மடத்தில் அமைக்கப்பட்ட சகஜானந்தாவின் சிலையை இராஜா
முத்தையா செட்டியார் திறந்து வைத்தார்.
1957-இல் முதுகுளத்தூர் கலவரத்தில் இமானுவேல் சேகரன் படுகொலையினைக் கண்டித்து
சட்டமன்றத்தில் கடுமையான கண்டன உரையாற்றினார். 1.5.1969 அன்று சகஜாநந்தா இயற்கை
எய்தினார்.
29.3.1969-இல் நந்தனார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுவாமிஜியின் முழு உருவச் சிலையை
முதலவர் கருணாநிதி தலைமையில் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்.
1990-இல் அம்பேத்கர், பெரியார், சகஜானந்தா ஆகியோரின் நூற்றாண்டு விழா தமிழக முதல்வர்
கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.