| Profession | அறிஞர் |
|---|
தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள போலகம் கிராமத்தில் வசித்த இராமாமிருதமய்யர் –
யோகாம்பாள் தம்பதிக்கு 26.9.1890 அன்று பிறந்தார். இயற்பெயர்: இராமசர்மா.
ஏழாம் வயதில் தந்தையை இழந்தார். குடும்ப வறுமை காரணமாக, தாயார் தன் குழந்தைகளுடன் தன்
அண்ணன் வசித்த திருவனந்தபுரம் சென்று கால் ரூபாய் வாடகை வீடு பிடித்து தங்கினர்.
அம்மாவுக்கு இசை ஞானம் இருந்ததால் அவரை வற்புறுத்திப் பாடச் சொல்லி பாடல்களையும்
கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். அங்கிருந்த சமஸ்கிருதப் பாடசாலையில் சேர்ந்து ஏழு
வருடப் படிப்பில் உதவித் தொகையுடன் டபுள் பிரமோ ஷனும் கிடைத்து ‘சாஸ்திரி’ என்ற
பட்டத்துடன் பரிசும் கொடுத்துப் பாராட்டினார்கள். அப்பகுதியில் புகழ்பெற்ற மகாதேவ
பாகவதருடன் நட்பு ஏற்பட்டு வாழ்வில் முன்னேறினார். 1910-இல் தாயார் காலமானதும் தமிழகம்
திரும்பினார்.
சிவனுக்கும் தஞ்சாவூர் ஐயாசாமியின் மகள் லட்சுமிக்கும் திருவாரூரில் திருமணம்
நடைபெற்றது. தன் தமையனாருடன் பாபநாசத்தில் தங்கினார். தினமும் குளித்து முடித்து
உடம்பு முழுவதும் விபூதியை அணிந்து கொண்டு, பாபநாசம் சிவன் கோயிலுக்குச் சென்று
இறைவனை நெஞ்சுருகப் பாடி வேண்டுவாராம். மக்கள் பாபநாசம் சிவனே நேரில் வந்தது போல்
உள்ளது என்று பாராட்டுவார்களாம். அதுவே ‘பாபநாசம் சிவன்’ என்ற பெயராக மாறி விட்டது.
1930-இல் சென்னையில் குடியேறினார்.
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரை தனது குருவாகக் கருதிய சிவன் கச்சேரிக்குத்
தேவையான அனைத்து உருப்படிகளையும் இயற்றியுள்ளார். அத்துடன் வடமொழி சொற்கடல் என்ற
அகராதியை சமஸ்கிருத பா ஸப்தஸ முத்ரஹ என்ற பெயரில் 20,000 வார்த்தை களைத் தொகுத்து
ஏழு புத்தகங்களாக வெளி யிட்டுள்ளார்.
1933-இல் ‘சீதா கல்யாணம்’ திரைப்படத்தில் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும்
அறிமுகமானார். ஆயிரக்கணக்கான அமர கானங்களை உலகமெங்கும் ஒலிக்கச் செய்தார். 70 முதல்
120 திரைப்படங்களுக்கு 2500 பாடல்கள் இயற்றினார். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்,
பாடலாசிரியர் பாபநாசம் சிவம், பாடகர் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் என இம்மூவரும்
வெற்றிக் கூட்டணியாக ஆகினர்.
‘பக்தகுசேலர்’, ‘தியாகபூமி’, பக்ததேசா, ‘குபேர குசேலா’ ஆகிய திரைப்படங்களில்
நடித்தார்.
‘தமிழ்த் தியாகய்யர்’, ‘சங்கீத சாகித்யகலா சிகாமணி’, ‘ஜனாதிபதி விருது’, தமிழிசைச்
சங்கத்தின் ‘இசைப்பேரறிஞர்’, ‘சங்கீத நாடக அகாடமியின் பெல்லோ’, இந்திய அரசின் ‘பத்ம
பூஷன்’, மியூசிக் அகாதமியின் ‘சங்கீத கலாநிதி’, 60-ஆவது வயதில் காஞ்சி மகான் வழங்கிய
‘சிவ புண்ய கானமணி’ ஆகிய விருதுகளைப் பெற் றுள்ளார். 1.10.1973 அன்று இயற்கை
எய்தினார்.