அறிஞர்

  • பேராசிரியர் அருள்நிதி கோ.இருசுப்பிள்ளை

    விழுப்புரம் கள்ளக்குறிச்சி சிறுவேங்கையூரில் இருசாயி -இராமசாமிப் பிள்ளை தம்பதியருக்கு 17.10.1928 அன்று பிறந்தார். கள்ளக்குறிச்சியில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை முடித்து, தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார். திருவருட்பாவைப் பாராயணம் செய்வதோடு அமையாமல் அதனை வாழ்வியல் நெறியாகவும் கொண்டு வாழ்பவர் சன்மார்க்கி இருசு. இந்த ஈடுபாடு சிறு வயதிலிருந்தே அவருக்கு இருந்தது. பின், ஓராண்டு காலம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர், பூ.சா.கோ. கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் சேர்ந்து 14…

  • தான்ஸ்ரீ தேவகிகிருஷ்ணன் அரசியல்

    மலேசிய மலையகத்தில் நெகிரி செம்பிலான், போட்டிக்சன் 11.03.1923 அன்று பிறந்தார். இவரது தந்தை ஐயாதுரை தபால்காரர். தீவிர வாசகர். அவர் இலங்கையிலும் இந்தியாவிலும் வாங்கி வரும் அரசியல், சமூகம், சமயம் சார்ந்த புத்தகங்களை சிறு வயது முதலே தேவகி படிக்கத் தொடங்கினார். அந்நூல்கள் இவருக்கு அரசியல் மீதான ஈர்ப்பை உண்டாக்கியது. தேவகியின் தாயார் நாகரெத்தினம், கல்லூரியில் முறையாக ஆசிரியைக்குப் படித்து, பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியவர். தேவகி, செயின்ட் மேரிஸ் இடைநிலைப் பள்ளியில் 5-ஆம் படிவம் முடித்த உடனேயே…

  • மா.நன்னன்

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகிலுள்ள திருமுட்டம் காவனூரில் ச.மாணிக்கம் -மீனாட்சி தம்பதியருக்கு 30.07. 1923 அன்று பிறந்தார். இயற்பெயர்: திருஞான சம்பந்தன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது 1945-இல் தமிழ் மீது கொண்ட பற்றினால், தம் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார். அதே ஆண்டு, நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் பெரியாருடன் மேடையில் மாணவப் பேச்சாளராக பேசுவதற்கான வாய்ப்பை மணவழகனார் ஏற்படுத்திக் கொடுத்தார். இவரது பேச்சைக் கேட்ட பெரியார், இவரை விடுமுறை நாட்களில் தன்னோடு இருக்குமாறு…

  • பேராசிரியர் இரா.சாரங்கபாணி

    கடலூர், தேவன்குடி கிராமம், இராசகோபால் மழவராயர் – சனமாலிகை தம்பதியருக்கு 18.9.1925 அன்று பிறந்தார். தலையில் குடுமியுடன் தொடக்கக் கல்வியை தேவன்குடி, குடுமிமலை, புவனகிரி ஆகிய ஊர்களில் கற்றார். சிதம்பரம் மெய்கண்ட வித்தியாசாலையில் 1943 இல் புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1947-இல் புலவர் பட்டமும், 1949-இல் பி.ஓ.எல். பட்டமும் பெற்றார். அதே காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். (ஆனர்சு) தேர்விலும் வெற்றி பெற்று, எம்.ஏ. பட்டம் பெற்றார். ஆய்வு செய்து 1962-இல் எம்.லிட் பட்டமும்,…

  • பேராசிரியர் செ.வைத்தியலிங்கம்

    கடலூர் பரங்கிப் பேட்டையில் செல்லமுத்து ஆச்சாரி – கோவிந்தம்மாள் தம்பதியர்க்கு 20.09.1926 அன்று பிறந்தார். பரங்கிப்பேட்டையில் உள்ள போர்டு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1949-இல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம், தத்துவத்தில் பி.ஏ. பட்டமும், தமிழ்மொழி, இலக்கியம் பயின்று எம்.ஏ. பட்டமும் பெற்றார். ‘அழகுக் கலைகள் மற்றும் பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் காணலாகும் கைத் தொழில்கள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றார். 1949-50 இல் விருத்தாசலம் போர்டு உயர்நிலைப் பள்ளி யில்…

  • அ.க.நவநீதகிருஷ்ணன்

    திருநெல்வேலி, அம்பாசமுத்திர ஊர்க்காடு கிராமத்தில் ஜமீன்புலவர் அங்கப்ப பிள்ளை – மகாலெட்சுமி தம்பதியருக்கு 15.06.1921 அன்று பிறந்தார். அ.க.நவநீதகிருஷ்ணன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்று, திண்டுக்கல் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி யில் தமிழாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியபின் இராசபாளையம் பள்ளியிலும், திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், நெல்லையிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கலாசாலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1944-இல் இவருக்கும் பிச்சம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள். டாக்டர்…

  • பண்டிதர் சச்சிதானந்தன்

    யாழ்ப்பாணம் தும்பளையைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை-தெய்வானைப்பிள்ளை தம்பதியருக்கு 19.10.1921 அன்று பிறந்தார். காங்கேசன்துறை நடேஸ்வரர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பருத்தித்துறை, சித்திவினாயகர் வித்தியாலயம் மற்றும் ஹாட்லிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார். இலங்கை இந்தியா இரு நாடுகளிலும் முதன்மைச்சித்தி மதுரைப் பண்டிதர் பட்டம் பெற்றார். 1945-46இல் சுவாமி விபுலானந்தருக்கு ஆராய்ச்சித் துணை வராகவும், 1946-இல் கொழும்பு செயிண்ட் மேரிஸ் கல்லூரியில் கணித ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழில் சிறப்புப் பட்டம் பெற்றார். கந்தையா பரமேஸ்வரியை 26.08.1949 அன்று திருமணம்…

  • புலியூர்கேசிகன்

    நெல்லை, புலியூர்க்குறிச்சி கிராமத்தில் வசித்த கந்தசாமி பிள்ளை -மகாலெட்சுமி தம்பதியருக்கு 17.04.1922 அன்று பிறந்தார். இயற்பெயர் சொக்கலிங்கம். 1938-இல் நெல்லையிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றபோது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்காக தனது கல்லூரிக் கல்வியைத் துறந்தார். அவர் படித்த வடுகச்சிமலை பள்ளியிலேயே ஆசிரியராக வேலை யில் சேர்ந்தார். நீலாம்பிகையார் மகள் சுந்தரம்மையாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், எட்டு மகள்கள் (ஒரு மகனும், ஐந்து மகள்களும் உள்ளனர்)….

  • மூதறிஞர் சுந்தரசண்முகனார்

    கடலூர் அருகிலுள்ள புதுவண்டிப்பாளையம் எனும் சிற்றூரில் சுந்தரம் – அன்னபூரணி தம்பதியருக்கு 13.07.1922 அன்று பிறந்தார். இவர் பின்னாளில் தந்தையின் பெயரையும் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு சண்முகசுந்தரனார் ஆனார். திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலய மாணவராக தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். அவ்வூரிலுள்ள தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். திருவை யாறு அரசர் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றார். சென்னை சைதையில் உள்ள ஆசிரியர் கல்லூரியில் இண்டர் மீடியட், இளங்கலை பயின்றார். மேலும்…

  • பேராசிரியர் ஆ.சிவலிங்கனார்

    கடலூர் புது வண்டிப்பாளையம் கரையேற விட்டக் குப்பத்தில் ஆறுமுக முதலியார் – பொன்னம்மாள் இணையர்க்கு 31.11. 1922 அன்று பிறந்தார். உள்ளூர் நகராட்சித் தொடக்கப் பள்ளியிலும், திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியாரடிகள் திருமடத்திலும் பள்ளிக் கல்வியைப் பயின்று, திருவையாறு அரசர் கல்லூரியில் 1940-இல் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியில் 1941-42இல் தமிழாசிரியராகப் பணியேற்றார். 1942-47இல் சென்னை ஸ்ரீமத் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய…