தான்ஸ்ரீ தேவகிகிருஷ்ணன் அரசியல்

தான்ஸ்ரீ தேவகிகிருஷ்ணன் அரசியல்

Profession அறிஞர்

Biography

மலேசிய மலையகத்தில் நெகிரி செம்பிலான், போட்டிக்சன் 11.03.1923 அன்று பிறந்தார்.
இவரது தந்தை ஐயாதுரை தபால்காரர். தீவிர வாசகர். அவர் இலங்கையிலும் இந்தியாவிலும்
வாங்கி வரும் அரசியல், சமூகம், சமயம் சார்ந்த புத்தகங்களை சிறு வயது முதலே தேவகி
படிக்கத் தொடங்கினார். அந்நூல்கள் இவருக்கு அரசியல் மீதான ஈர்ப்பை உண்டாக்கியது.

தேவகியின் தாயார் நாகரெத்தினம், கல்லூரியில் முறையாக ஆசிரியைக்குப் படித்து, பள்ளி
ஆசிரியையாகப் பணியாற்றியவர்.

தேவகி, செயின்ட் மேரிஸ் இடைநிலைப் பள்ளியில் 5-ஆம் படிவம் முடித்த உடனேயே ‘கிஷன் டயல்
பள்ளி’யில் ஆசிரியர் பணியில் சேர்ந்து, பதினேழு ஆண்டுகள் அப்பள்ளியிலேயே பணி
யாற்றினார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவகி மலேசிய இந்தியரான கிருஷ்ணனைக் காதலித்தார். குடும்பத்தினர்,
உறவினர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே கோலாம்பூர் ஜாலன் ஈப்போவி லுள்ள
ஸ்ரீதண்டபாணி ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனர். வாடகை வீட்டில் தங்கள் இல்லற வாழ்க்கையைத்
தொடங்கினர். தேவகியின் எல்லா வெற்றிகளுக்கும் முதுகெலும்பாக கணவர் கிருஷ்ணன்
விளங்கினார்.

1952-இல் மலேசிய இந்திய காங்கிரசில் (ம.இ.கா) உறுப்பினராகி, கோலாலம்பூர் நகராட்சித்
தேர்தலில் போட்டியிட்டார். 1954-இல் அக்கட்சியின் மகளிர் பிரிவு நிர்வாகியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960-இல் முதல் பெண் துணைத்தலைவர் ஆனார்.

1994-இல் வெளிவந்துள்ள புத்தகத்தில் இவர் எழுதியுள்ள ‘சமயமும் கலாச்சாரமும் அரசியலில்
பெண்களின் ஈடுபாடு குன்றி யிருப்பதற்கான முதன்மைக் காரணங்கள்’ எனும் கட்டுரை மக்களிடம் –
குறிப்பாக பெண்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இவரது சமூக அரசியல் பணியைப் பாராட்டி 1995-இல் மலையகத்தின் முன்னாள் மாமன்ன ரான
துவான்கு ஜாபர் இப்னி அல்மர்ஹும் ‘பங்லிமா ஸ்ரீ மாக்கோத்தா’ விருதை வழங்கி சிறப் பித்தார்.
இவ்விருதினால் இவர் ‘தான்ஸ்ரீ’ பட்டம் சூட்டப்பெற்றார். 1994-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளையான
மேற்கு பசிபிக் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையின் கௌரவ டாக்டர் பட்டம்,
1974-இல் இங்கிலாந்து ராணி எலிசபெத் வழங்கிய ‘விருது, 1985-இல் உலக இந்து பெண்கள்
மாநாட்டில் வழங்கப்பெற்ற ‘சேவை மாமணி’ பட்டம், அமெரிக்காவின் அமைப்பு வழங்கிய ‘விருது
பெற்றுள்ளார். கணவர் கிருஷ்ணன் 1998-இல் காலமானார்.