பேராசிரியர் அருள்நிதி கோ.இருசுப்பிள்ளை

பேராசிரியர் அருள்நிதி கோ.இருசுப்பிள்ளை

Profession அறிஞர்

Biography

விழுப்புரம் கள்ளக்குறிச்சி சிறுவேங்கையூரில் இருசாயி -இராமசாமிப் பிள்ளை
தம்பதியருக்கு 17.10.1928 அன்று பிறந்தார்.

கள்ளக்குறிச்சியில் பள்ளிப் படிப்பை முடித்தார். 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
இடைநிலை முடித்து, தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

திருவருட்பாவைப் பாராயணம் செய்வதோடு அமையாமல் அதனை வாழ்வியல் நெறியாகவும் கொண்டு
வாழ்பவர் சன்மார்க்கி இருசு. இந்த ஈடுபாடு சிறு வயதிலிருந்தே அவருக்கு இருந்தது.

பின், ஓராண்டு காலம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர்,
பூ.சா.கோ. கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் சேர்ந்து 14 ஆண்டுகள் தமிழ்ப்
பேராசிரியராகப் பணியாற்றினார்.

இந்தப் பணிகளுக்கிடையே ‘கலைக்கதிர்’ எனும் அறிவியல் இதழாசிரியராக 17 ஆண்டுகள் (1953
-1990) பணியாற்றினார். ‘சர்வோதயம’ மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் பணி யாற்றினார்.

இவரது துணைவியார் கமலா. இவர்களுக்கு முருகவேள், அறவாணன், திருநாவுக்கரசு, ஞான
வள்ளல், இருசு அம்பலவாணன் என ஐந்து குழந்தைகள்.

இவர், இலக்கிய மொழி வளர்ச்சி, நல்லறிஞர் சாத்திரங்களின் விளக்கம், ஆன்மிகம், நெறி,
வரலாறு, அகராதி ஆகிய துறைகளில் 18 நூல் களின் ஆசிரியர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ‘நல் மாணாக்கர்’, நன்னெறிக் கழகத்தின் ‘தமிழ்நெறிச் செம்மல்’,
கோவை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் ‘தமிழ்ச் சான்றோர்’, கோவை கம்பன் கழகத்தின் ‘கம்பன்
காவலர்’, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘ஞானச் செம்மல்’, சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மன்றத்தின்
‘நல்லாசிரியர்’, கோவை பாரதிய வித்யா பவனின் ‘தமிழ் மாமணி’ ஆகிய விருதுகளை வழங்கப்
பெற்றுள்ளார்.

கோவை பாரதிய வித்யாபவனின் மனித உணர்வு மேம்பாட்டுத் துறையின் இயக்குநராக
செயலாற்றினார். நன்னெறிக் கழகம், கம்பன் கழகம், சமுதாய சேவா சங்கம் ஆகிய அமைப்பு களில்
இன்றும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.

பணி ஓய்வுக்குப் பின் வேதாத்திரி மகரிஷியின் வலது கரமாய்த் திகழ்ந்து அங்கே வருபவர்க்கு
வேதாத்திரியம் சொல்லும் பேரா சிரியராய், தியானப் பயிற்சி பயிற்றுவிக்கும் சித்த ராய்
இவர் திகழ்ந்தார்.

2015-இல் தமது 87-வது வயதில் சன்மார்க்க சீலராய், சமுதாய மேம்பாட் டிற்குப் பாடுபடும்
தொண்டராய் விளங்கிப் பலருக்கும் ஞானகுருவாய் அடைக்கலம் தரும் ஆல விருட்சமாய், பண்பில்
இமயமாய், குணத் தில் பொதிகைத் தென்றலாய் வாழ்ந்தார்.