மூதறிஞர் சுந்தரசண்முகனார்

மூதறிஞர் சுந்தரசண்முகனார்

Profession அறிஞர்

Biography

கடலூர் அருகிலுள்ள புதுவண்டிப்பாளையம் எனும் சிற்றூரில் சுந்தரம் – அன்னபூரணி
தம்பதியருக்கு 13.07.1922 அன்று பிறந்தார். இவர் பின்னாளில் தந்தையின் பெயரையும் தன்
பெயருடன் இணைத்துக்கொண்டு சண்முகசுந்தரனார் ஆனார்.

திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலய மாணவராக தன் ஆரம்பக் கல்வியைத்
தொடங்கினார். அவ்வூரிலுள்ள தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார்.
திருவை யாறு அரசர் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றார். சென்னை சைதையில் உள்ள
ஆசிரியர் கல்லூரியில் இண்டர் மீடியட், இளங்கலை பயின்றார். மேலும் சில சான்றிதழ்களை யும்
பெற்றுள்ளார்.

மயிலம் சிவஞான பாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் 1940-இல் (தனது 18ஆவதுவயதில்)
விரிவுரையாள ராகச் சேர்ந்தார். 1944-இல் ‘விருதாம்பிகை’யை மணந்தார். இத்தம்பதியருக்கு
‘அறவணன்’ என் றொரு மகன், ‘அங்கையற்கண்ணி’ என்றொரு மகள்.

1946-இல் உடல்நலக் குறைவு காரணமாக அப் பணியை விடுத்துப் புதுச்சேரி சென்றார். அங்கே
1947-இல் புலவர் சிங்கார குமரேச முதலியார் உதவியுடன் ‘பைந்தமிழ்ப் பதிப்பகம்’ தொடங்கி,
‘வீடும் விளக்கும்’ என்னும் தனது முதல் நூலை வெளியிட்டார். 1948-49இல் ‘திருக்குறள்
தெளிவு’, ‘தெவிட்டாத திருக்குறள்’ என்னும் மாதமிருமுறை திருக்குறள் ஆய்வு இதழ்களை
நடத்தினார்.

1949-58இல் புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் தமிழ்த் துறைத் தலைவராகவும்,
1958-80இல் புதுச்சேரி அரசினர் பயிற்சி மையத் தில் தமிழ்ப் பேராசிரியராகவும்
பணியாற்றினார். இக்காலகட்டத்தில் ‘திருவள்ளுர் தமிழ்ப் பல்கலைக் கழகம்’ எனும் அமைப்பினை
நிறுவி யாப்பதிகார வகுப்பும் திருக்குறள் வகுப்பும் கற்பித்தார். பலருக்கும் ‘பாவலர்’
பட்டம் வழங் கினார்.

1980-இல் அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று நூல்கள் எழுதும் தன்னுடைய பணியைத்
தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை 1 சிறு கதைத் தொகுப்பு, 9 கவிதை தொகுப்பு, 19
உரை நடைகள், 7 திருக்குறள் ஆய்வுகள், 6 கம்பராமா யணத் திறனாய்வுகள், 6 அறிவியல்
ஆய்வுகள், 2 இலக்கணம், 3 மொழியியல், 2 தொகுப்பியல், 9 உரைகள், 1 சிலப்பதிகாரத்
திறனாய்வு, 4 வரலாறு, 2 புதினங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

‘பணக்காரர் ஆகும் வழி’ நூலுக்காக மத்திய அரசின் பரிசு, ‘தமிழ் அகராதிக் கலை’, ஆகிய
இரு நூல்களுக் காக தமிழக அரசின் பரிசு, ‘கவுதம புத்தர் காப்பியம்’ நூலுக்காக புதுவை
அரசின் விருது, தமிழக அரசின் ‘திருவள்ளுவர் விருது’, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்
விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

1946 முதல் மூளைக்கட்டி நோயுடன் போராடி வெற்றி கண்டு வந்த இவரை அந்நோய் 30.10.1997
அன்று வெற்றி கொண்டுவிட்டது.