| Profession | அறிஞர் |
|---|
இராமநாதபுரத்தில் சதாவ தானி முத்துச்சாமி ஐயங்காரின் மகனாக 26.07.1878 அன்று
மு.ராகவையங்கார் பிறந்தார்.
இவர்தம் 16-வது வயதில் தந்தையார் இறந்து விடவே பாண்டித்துரைத் தேவரின் ஆதரவினாலும்,
ஊக்குதலி னாலும் தமிழை நன்கு கற்றுத் தேர்ந்தார்.
பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கியபோது இவரை உடன் அழைத்துச்
சென்று, அங்கு சங்க கலாசாலையில் உபாத்தியாயராகவும், அடுத்த ஆண்டு தொடங்கிய ‘செந்
தமிழ்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் நியமனம் செய் தார். பின்னர் பதிப்பாசிரியர்
ஆக்கினார்.
மு.இராகவையங்கார் ‘செந் தமிழ்’ இதழில் எழுதிய ‘வீரத் தாய்மார்’ என்ற கட்டுரையைப் படித்த
மகாகவி பாரதி மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘பழைய கைத்
தொழில் வணிகம்’ பற்றிய கட்டுரையைப் படித்த வ.உ.சிதம்பரனார் இவருக்கு ஒரு பாராட்டுக்
கவிதையை அனுப்பி வைத்தார்.
1912-இல் அன்றைய அரசுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் ‘தமிழ்ப்
பேரகராதி’யை உருவாக்கித் தந்தார். இப்பணிக்காக 1939-இல் ‘ராவ் சாகேப்’ என்னும் பட்டத்தை
அரசு வழங்கி சிறப்பித்தது. 1929-இல் சர்வகலாசாலைக்காக, இலக்கியங்களும் சாசனங்களும்
ஒன்றுக்கொன்று உதவி வரும் நெறியை விளக்கி இவர் நான்கு சொற்பொழிவு களை நிகழ்த்தினார்.
அப்போது அப்பேரவை இவருக்கு ‘முதுபெரும் புலவர்’ எனும் பட்டமளித்து சிறப்பித்தது.
திருவிதாங்கூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியில் இருந்த இவர், பல சொற்பொழிவுகளை
நிகழ்த்தினார். அச்சொற்பொழிவுகளின் சில பகுதிகளைஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
திருவிதாங்கூர் பல்கலைக் கழகம் மூலமாக வெளியிட்டார். சேர வேந்தர்கள் பற்றிய செய்யுள்களை
தம் விளக்கவுரையுடன் ‘சேரவேந்தர் செய்யுட்கோவை’ எனும் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார்.
‘அரிச்சந்திர வெண்பா’ என்ற அரிய நூலை தம் உரையுடன் அச்சிலேற்றினார். இவர் எழுதிய
‘செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’ நூல், சென்னை அரசுப் பள்ளி இறுதித் தேர்வுக்கு ஒரு துணைப்
பாட மானது. அதில் கிடைத்த 2,000ரூபாயை மூல தனமாகக் கொண்டு, இராமநாதபுரம் ராஜா
உயர் நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சிறப் பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உபகாரச்
சம்பளம் அளிக்க ஏற்பாடு செய்தார். மேலும், செய்யுள் நூல்கள் – 4, உரைநடை – 14,
தொகுப்பு – 2 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். 7 நூல்களை பதிப்பித்துள்ளார். இவரின் 5
நூல்கள் அச்சிடாமல் உள்ளன.
1951-இல் திருவிதாங்கூர் பேராசிரியர் பணி யிலிருந்து விலகினார். 1954-இல் தமது
மனைவி, மூத்த குமாரன், மருமகள் மூவரையும் இழந்து வாடினார். 1954 முதல்
மானாமதுரையில் இளைய குமாரனுடன் வசித்தார். 02.02.1960-இல் தமது 82-ஆம் வயதில்
இயற்கை எய்தினார்.