தனிநாயகம்அடிகள்

தனிநாயகம்அடிகள்

Profession அறிஞர்

Biography

இலங்கை கானலம், காவலூரில் 2.8.1913 அன்று தனிநாயகம் அடிகள் பிறந்தார். தந்தை ஹென்றி
தனிஸ்லாஸ் கணபதி பிள்ளை. தாய் சிசில் இராசம்மாபஸ்தியாம் பிள்ளை.

1918-இல் தொடங்கி ஆரம்பக்கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் யாழ்ப்பாணத்தில் முடித்தார்.
1930- 1934 இல் கொழும்பில் செமினரிக் கல்வியையும், 1934- 1939 இல் ரோம் உர்பன் பல்கலைக்
கழகக் கிறித்துவக் குருமார் கல்வியையும் கற்றார். ‘ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார்.

1940- 1945 இல் கேரளாவில் மறைப் பணி மேற்கொண்டார். 1940 — 1945 இல் தமிழ்நாடு
வடக்கன்குளம், புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராகப்
பணியாற்றினார்.

1945-47 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றார். ‘பழந்தமிழ் இலக்கியத்தில்
இயற்கை’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து 1949-இல் எம்.லிட் பட்டம் பெற்றார். 1948-இல்
தூத்துக் குடியில் ‘தமிழ் இலக்கியக் கழகம்’ தொடங்கினார்.

1949- 1952 இல் உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1952-இல் ‘இதழைத்
தொடங்கினார். 1952 — 1961 இல் இலங்கைப் பல்கலைக் கழகக் கல்வித்துறையில்
விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1961-இல் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்காண்டிநேவியா, சோவியத் யூனியன் ஆகிய
நாடுகளுக்குப் பயணம் செய்து கல்வி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

1961- 66 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறைப் பேராசிரியராகவும்,
தலைவராகவும் பணியாற்றினார். 1964-இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவி, அதன்
பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

1966-இல் மலாயாப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார். 1969- 1970இல் முதன்மை
ஆசிரியரானார். 1970-1978 இல் பாரிஸ் மற்றும் பல்வேறு உலக நாடுகளுக்கு ஆய்வு
நிமித்தமாகப் பயணம் செய்தார். இலங்கையில் பல்வேறு உயர்நிலைக் குழுக்களில் பணி புரிந்தார்.
1979-இல் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பிலுள்ள தியான மண்டபத்தில் வசிக்கத் தொடங்கினார். 1980
செப்டம்பர் முதல் நாள் இயற்கை எய்தினார்.

தமிழ் மீது கொண்ட பற்றினாலும், தகப்பன் வழி பெயர் என்பதாலும் ‘தனிநாயகம்’ என பெயர்
வைத்துக்கொண்டார். இவரது படைப்புகள் இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தொடங்கி, மாநாடுகளில்
நிகழ்த்திய ஆய்வுரைகள், ஆய்வுச் சொற்பொழிவுகள், முதுநிலை மற்றும் முனைவர் பட்ட
ஆய்வேடுகள், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் என விரிந்து செல்கின்றன. தமிழ் நாட்டிலும்
ஈழத்திலும் வசித்த தமிழ் எழுத்தாளர்களை அழைத்து தூத்துக்குடியில் முதல் எழுத்தாளர்
மாநாட்டையும், கோயமுத்தூரில் இரண்டாம் எழுத்தாளர் மாநாட்டையும் நடத்தி எழுத்தாளர்களை
ஊக்கப்படுத்தினார்.