பூ.ஆலாலசுந்தரனார்

பூ.ஆலாலசுந்தரனார்

Profession அறிஞர்

Biography

5.11.1907 அன்று வேலு செட்டியார் – இராசம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். தந்தையார்
தனது ஆசிரியர் மீது கொண்ட பற்றினால் அவரது பெயரை தனது மகனுக்குச் சூட்டினார்.

சென்னை, முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்ற இவர், சென்னை
பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பி.ஏ.ஆனர், எம்.ஏ. பட்டங்களையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.லிட் பட்டத்தையும்
பெற்றார்.

1937-ல் தனது மாமன் மகள் நவநீதத்தைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராய்ச்சி
மாணவர்கள் ஆராய்ச்சியை முடிக்க இயலாத சூழலில் 1973 முதல் 1980 வரை அதே கல்லூரியில்
மதிப்புறு பேராசிரியராகப் பணி யாற்றி 1980-இல் பணிநிறைவு பெற்றார். கிறித்துவக்
கல்லூரி வரலாற்றில் 46 ஆண்டு காலம் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
கிறித்தவக் கல்லூரி ஆகிய வற்றின் பல குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
பல்வேறு பொது நிறுவனங்களில் பங்கேற்று இயன்ற வகைகளில் எல்லாம் தமிழ் வளர்ச்சிக்காகவும்,
தமிழரின் முன்னேற்றத் திற்காகவும் பாடுபட்டார்.

இவர் இயற்றிய நூல்கள்: இயற்றமிழ், கட்டுரை விருந்து, சுந்தரச் சொல்லோவியம், கந்தகோட்ட
தலபுராண உரை, நூற்றாண்டு விழா மலர் ஆகியன. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை யும்
எழுதியுள்ளார்.

இவர் பணி நிறைவு பெற்ற சில ஆண்டுகளில் அவரது கண்களில் ஏற்பட்ட நீரழுத்த மிகை நோயினால்
இன்னலுற்றார்.

1982-இல் சிதம்பரம் சென்று நடராசப் பெருமானின் அபிஷேகத்தைத் தரிசித்த பின், வழக்கம்போல
அங்குள்ள செ. ரத்தினசாமி இல்லத்தில் தங்கியிருந்தபோது மாரடைப்பினால் 9.1.1982-இல்
இறைவனடி சேர்ந்தார்.