| Profession | அறிஞர் |
|---|
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் காசி நாதப்பிள்ளை – முத்துலட்சுமி இணையருக்கு
24.06.1907-இல் பிறந்தார். இயற்பெயர் நல்லசிவம்.
பள்ளிக் கல்வியை ஆரல்வாய்மொழியிலும், நாகர்கோயிலிலும் கற்றார். கல்லூரிக் கல்வியை
திருவனந்தபுரத்தில் படித்து 1922-இல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியில்
‘விசாரத்’ தேர்வில் தேர்ச்சி பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்
எ.டி. (எம்.எட்) பட்டம் பெற்றார்.
அப்பாதுரை நாற்பது மொழிகளை அறிந்தவர். அதனால் தான் ‘பன்மொழிப் புலவர்’ என
போற்றப்படுகிறார். அவற்றுள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, வடமொழி ஆகியவற்றில்
சிறப்பாக பேசுவார், எழுதுவார்.
திராவிடன், ஜஸ்டிஸ், பாரததேவி, இந்தியா, சினிமா உலகம், லோகாபகாரி, தாருல் இஸ்லாம்,
குமரன் ஆகிய இதழ்களில் பணியாற்றினார். காரைக்குடிக்குச் சென்று சுப்பிரமணிய செட்டியார்
குருகுலத்தில் தலைமையாசிரியராக ஓராண்டு பணியாற்றினார். ம.தி.தா. இந்து கல்லூரியில்
1937-39இல் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார்.
இக்காலகட்டத்தில் நாச்சியாரை திருமணம் செய்துகொண்டார். அவர் இரண்டாண்டுகளில் இறந்தார்.
அமராவதி புதூர், சோனாபட்டு ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் மீண்டும் சென்னைக்குச் சென்று ‘லிபரேட்டர்’ ஆங்கில இதழின் உதவி ஆசிரியராகவும்,
பெரியாரின் ‘விடுதலை’ நாளேட்டில் உதவியாளராகவும் ஓராண்டுக்கு மேல் பணியாற்றினார்.
1947-49இல் இந்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையிலும், 1959 -65இல் சென்னைப்
பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் தமிழ் கலைச்சொல் அகராதிப் பணியில் இணை ஆசிரியராகவும்,
1975-79இல் தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இடைப்பட்ட 1949-59
காலகட்டத்தில் ஏராளமான நூல்களை எழுதினார்.
கா.அப்பாதுரையார் ‘குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு’ தொடங்கி 170 நூல்களை
எழுதியுள்ளார். அவற்றுள் ஐந்து ஆங்கில நூல்கள். சில நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்.
இவருடைய ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ மிகப் பெரிய வரலாற்று ஆவணம்.
பாரதி, பாரதிதாசனைச் சந்தித்துப் பழகியவர். தேசிக விநாயகம் பிள்ளை இவரது மண்ணின்
மைந்தன். கவிஞர் கண்ணதாசன் இவரது மாணவர்.
கா.அப்பாதுரையார் அலமேலு அம்மையாரை மறுமணம் செய்துகொண்டார். அலமேலுவின் தங்கை மகளான
மல்லிகாவை வளர்ப்பு மகளாக வளர்த்தனர்.
மல்லிகாவும் இறந்துவிட, பெருந்துயர் அடைந்தார். அந்த அதிர்ச்சியிலேயே அப்பாதுரையாரின்
பார்வை பறிபோனது. மனைவியின் உதவியுடன் வாழ்ந்தவர் 26.05.1989- அன்று காலமானார்.
பெரியார் ஈ.வெ.ரா.வின் அன்புக்கும் மதிப்பிற்கும் உரியவரான அப்பாதுரையார் தமது வாழ்நாள்
முழுவதும் திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிட மொழி என்பவற்றோடுதான்
வாழ்ந்து மறைந்தார்.
சிவகாமசுந்தரி, புனிதவதி, ஞானப்பூங்கோதை எனும் மூன்று மகள்கள்; சிவகுமாரன், நடராசன்
என இரண்டு மகன்கள்.
சென்னை முத்தியாலுப்பேட்டை லிங்கிச் செட்டித் தெருவில் இருந்த கிறித்துவ உயர் நிலைப்
பள்ளியில் தமிழாசிரியராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1951-இல் கிறித்துவக்
கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1964 முதல்
1968 வரை மொழித்துறைத் தலைவ ராகவும், 1968 முதல் 1973 வரை இந்தியப் பல்கலைக்கழக
மானியக் குழுவின் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.