வா.சு.கோமதி சங்கர ஐயர்

வா.சு.கோமதி சங்கர ஐயர்

Profession அறிஞர்

Biography

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 23.08.1908 அன்று ‘பல்லவி மேதை’ சுப்பையா
பாகவதருக்கும் முத்துலட்சுமி அம்மையாருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.

இவரின் பள்ளி¢க்கல்விப் பயிற்சி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே. தமிழ், வடமொழி, தெலுங்கு
ஆகிய மொழிப்பயிற்சி களையும், கிரந்த எழுத்துப் பயிற்சியையும் இளமையிலேயே
பெற்றிருந்தார்.7-ஆவது வயதில் தந்தையிடம் இசைப் பயிற்சியைத் தொடங்கினார். 8-ஆவது வயதில்
காரைக்குடி சகோதரர்களாகிய சாம்பசிவ ஐயர், சுப்பராம ஐயரிடம் இசைப் பயிற்சியைத்
தொடர்ந்தார். மூன்று வருட கால குருகுல வாசத்தில் வீணைப் பயிற்சி பெற்றார். 1930-இல்
தமது 22-ஆவது வயதில் பண்டிட் படிப்பைக் கற்றுத் தேர்ந்தார்.

17-ஆவது வயதில், 1925-இல் கோமதியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு
மகன்கள், இரண்டு மகள்கள்.

23-ஆவது வயதில் 1931-இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வீணை விரிவுரையாளர்
ஆனார். 40 ஆண்டுகள் இப்பல் கலைக்கழக இசைத்துறையில் பணியாற்றினார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மூலம் வெளியிடப் பெற்ற தமிழிசைப் பாடல் 21 தொகுதிகளில் 11
தொகுதிகளில் இவரது பணிகள் இடம்பெற்றுள்ளன. தமிழிசைப் பாடல்களைத் தேடித் தொகுத்ததோடு
இராக, தாள அமைப்புடன் இசையலகுகளுடன் வெளிவர துணை நின்றுள்ளார். மேலும், 8 இசை
இலக்கண செயல் முறை நூற்களையும் படைத்துள்ளார்.

இசைத் துறையில் தமிழ்ச் சொற்களைவிட சமஸ்கிருதச் சொற்களே பெரிதும் கையாளப்பட்டு
வருகின்றன. பண்டையத் தமிழ்ச் சொற் கள் மாற்றப்பட்டு வடமொழிச் சொற்களால் வழங்கும் மரபு
இன்றும் வழக்கத்திலுள்ளன.

இவற்றிற்குரிய பண்டையத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவோரும், சொல்பவர்களும் குறைந்து
வருகின்றனர். இதை நீக்கி பழந்தமிழ் சொற்களையும், தொடர்களையும், வளங்களையும் தெரிவிக்கும்
முயற்சிகளில் ஈடுபட்டோரில் கோமதி சங்கர ஐயரும் ஒருவராவார்.

இம்மாபெரும் மனிதரின் பணியைப் பாராட்டி இளவரசனேந்தல் ஜமீன்தார் நூறு வருட பழைமையான
வீணையைப் பரிசாக அளித்ததுடன் ‘வைணிக காயக’ என்ற விருதை அளித்தார். தமிழ்நாடுஇயல் இசை
நாடக மன்றம் 1986-இல் கலைமாமணி விருது வழங்கியது. சென்னை சங்கீத நாடக அகாடமி
விருது 1986-இல் வழங்கியது. 1982-ஆம் ஆண்டிற்கான சிறந்த சங்கீத வித்துவான் விருது
சென்னை சங்கீத வித்வத் சபை வழங்கியது. சிருங்கேரி சங்கராச் சாரியார் மடத்திலிருந்து
1974-இல் மகா வித் வான் விருது வழங்கப்பட்டது.

வா.சு.கோமதி சங்கர் ஐயர் தமது எண்பது ஆண்டுகால வாழ்வில் பல்வேறு சாதனைகளைப்
புரிந்துள்ளார். 07.02.1988 அன்று மதுரையில் 80-ஆவது வயதில் காலமானார்.